Pages

Wednesday, 12 October 2011

கூடங்குளம் -ஒரு பார்வை

சமீப காலமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர் கூடங்குளம். மத்திய அரசு மேற்கொண்டுள்ள அணுமின்சாரம் உற்பத்தி திட்டமே இந்த ஊரில் நடக்கும் தொடர் போராட்டத்திற்கு காரணம்.

இந்த திட்டம் கருவுற்றது நவம்பர், 20, 1988 ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய ஜனாதிபதி மிகைல் கோர்பசெவும் கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிறகு ஒரு பத்து வருடம் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு காரணம் ரஷ்யாவில் நடந்த உள்நாட்டு குழப்பங்களும், பெரியண்ணா அமெரிக்கா விதித்த புதிய விதிமுறைகளும் என்று சொல்லப்படுகிறது.

பிறகு 2004 ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சிறிய துறைமுகம் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டு அணுமின்நிலைய கட்டுமானப் பணிகளுக்கான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த துறைமுகம் தொடங்குவதற்கு முன் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு சாலை வழியாக கட்டுமானப் பொருள்கள் கொண்டு வரப்பட்டன. அதில் உள்ள அபாயத்தை தவிர்க்கவே மேற்படி துறைமுகம் தொடங்கப் பட்டது. இங்கிருந்து 9200 மெகவாட் மின்சாரம் தயாரிக்கப் படும் என்று அனுமானிக்கப்படுகிறது. 


அணுமின்சக்தி
அணுமின்சாராம் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை பார்ப்போம். அணுசக்தியை வெப்பசக்தியாக மாற்றவே இந்த அணு மின் உலை தேவைப் படுகிறது. இந்த மின் உலையினுள் enriched Uranium என்று சொல்லப்படுகிற U 235 மிக்க பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருக்கும். இவர் இந்த அணு மின் உலையினுள்  வைக்கப்பட்டிருக்கும் வரை பரம சாது. கூண்டில் அடை பட்டிருக்கும் சிங்கம், புலிகளைப் போல. ஆனால் இவர் ரொம்ப உக்கிரமானவர், அதிகபட்ச வெப்பத்தை Nuclear fission reaction போது வெளியிடுவார், அந்த வெப்பம் கனநீர் என்று சொல்லப் படுகிற D2O வை சூடாக்கி பின் குழாய்கள் மூலம் மின்னுலையைவிட்டு வெளியே எடுத்து செல்லப்பட்டு கொதிகலங்களில் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு நீராவி இயந்திரங்களை இயக்கி மின்சாரம் உணடாக்கப்படுகிறது. இந்த மின் உலையையும், மற்ற பாகங்களையும் குளிர்விக்க ஏராளமான தண்ணீர் தேவைப்படும். அதற்கு கடல் நீர் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆதலால்தான் பெறும்பாலும் எல்லா அணு மின்நிலையங்களும் கடலோரம் அமைக்கப் படுகின்றன.  


ஏன் அணு மின்சக்தி.
நாட்டின் மின்சாரத் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், காற்றாலைகளோ, அனல் மின் நிலையங்களோ, அல்லது Hydel Power என்று சொல்லப்படுகிற நீர் மின்சாரமோ வேலைக்கு ஆகாது. ஆகவேதான் வளரும் நாடுகள் அணு மின்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த பிரச்சினை இல்லை. அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் அணு மின்சாரம் பற்றி சிந்திக்க வைக்கவில்லை. 

பிரச்சினை என்ன?
இந்த அணுமின் உலையில் பாதுகாப்பு சுவர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ, அல்லது அதன் அழுத்த சக்தியை கட்டுப் படுத்தும் உபகரணங்களில் பழுது ஏற்பட்டாலோ இருந்து வெளிவரும் “காமா” கதிர்வீச்சு மிகவும் நாசத்தை உண்டாக்க கூடியது.  இதன் விளைவுகள் மிகவும் மோசமானது. காலம் காலமாக அடுத்த சந்ததியை செயலிழக்க செய்யும் அபாயமுள்ளது. மேலும் செர்நோபில் மற்றும் பாகுஷிமா முதலிய இடங்களில் ஏற்பட்ட விபத்தினை மக்கள் தெரிந்து வைத்திருப்பதனால் வந்த அவர்களது பயம் இயல்பானது.

கூடங்குளம் போராட்டம்
மேற்படி கூறிய இயல்பான அச்சத்தின் காரணமாகவே கூடங்குளம் மக்களும் மற்றவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டுமான பணி முடியும் தருவாயில் அதை நிறுத்த சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிடுவது இயலாத செயல், இதனால் ஏற்படும் பொருள் இழப்பும் அதிகம். இருந்தாலும் மக்களின் கவலை நியாயமானதே. இதில் அரசியல் லாபம் பார்க்க வரும் அரசியல் திருடர்களை, மக்கள் புரிந்து கொண்டு விலக்க வேண்டும். 


இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் முதலமைச்சரின் உதவியை நாடி இருக்கிறார். அணு உலைகளின் பாதுகாப்பை அதிகரித்து மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும். கதிர்வீச்சு கசிவு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு, மற்றும் கசிவு ஏற்படும் பட்சத்தில் அமைக்கப்பட்டிருக்கும் Emergency Shutdown System”  செயற்பாடு உறுதி செய்யப்படவேண்டும். சாமான்ய மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை விளக்கி இந்த திட்டத்தை மேற்கொண்டு செல்வது மத்திய, மாநில அரசாங்கத்தின் பொறுப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாது, அரசியல் லாபம் பார்க்காது இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்த முன்வரவேண்டும்.
வருவார்களா?

8 comments:

  1. இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாது, அரசியல் லாபம் பார்க்காது இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்த முன்வரவேண்டும்.
    வருவார்களா?///////

    ஆமாண்ணே! பாதுகாப்பா பயன்படுத்த முடியும் என்றால், அப்புறம் எதுக்கு தயக்கம்??

    ReplyDelete
  2. ஐடியா மணி வருகைக்கு நன்றி.

    இது மிகவும் பொறுப்போடு செயல்படவேண்டிய விஷயம். மக்களின் அச்சமும் கவலையும் நியாயமானதே.

    ReplyDelete
  3. மாப்ள சரியான தகவல்களுடன் பகிர்வு அருமை...நன்றி!

    ReplyDelete
  4. விக்கி பாஸ் நன்றி.

    ReplyDelete
  5. மாறுபட்ட கோணத்தில் பகிர்வு. அருமை.

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  7. என் Thought process உங்களதிலிருந்து நேர்மாறானது இந்த விசயத்தில்...

    நல்ல கட்டுரை என்று சொல்வதோடு ஒதுங்கிக்கொள்கிறேன் நண்பரே...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.