Pages

Friday, 14 October 2011

களப்பணி


கட்டிங்வுட்டு கள்ள ஒட்டு போட்டேனா? இல்லை
க்வார்ட்டருக்கும் பிரியாணிக்கும் விற்றேனா? இல்லை
கைகட்டி தொண்டர் என்று பின் சென்றேனா? இல்லை
தலைவன் என காலில்தான் விழுந்தேனா? இல்லை
கடமையில் கைநீட்டி கையூட்டு பெற்றேனா? இல்லை
பணிசெய்ய தலைசொறிந்து நின்றேனா? இல்லை
தடியெடுத்து தலையில்தான் போட்டேனா? இல்லை
கத்தியால்தான் மத்தியில் குத்தினேனா? இல்லை
ஊர் முழுக்க கூத்தியாதான் வைத்தேனா? இல்லை
பேர்சொல்ல சின்னவீடுதான் வைத்தேனா? இல்லை
அறப்போராட்டத்தில் கல் வீசி எறிந்தேனா? இல்லை
சிரிப்புடனே சிறைதான் சென்றேனா? இல்லை
ஊரறிய உண்ணாவிரதம் இருந்தேனா? இல்லை
ஊழலைதான் ஒழிப்பேன் என்று சொன்னேனா? இல்லை
படத்தில்தான் பத்துபேரை துவைத்தேனா? இல்லை
வடநாட்டு நாயகியைதான் தொட்டேனா? இல்லை
பாட்டிகளை பாங்குடனே அனைத்தேனா?
ஈதனைத்தும் நினைக்கும் முன்னே நீ ஏனடா
கட்சியில் சேர்ந்து களப்பணியாற்ற சொல்கிறாய்? 

 
படத்துக்கும்  கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க

21 comments:

  1. //படத்துக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க //

    இது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)

    ReplyDelete
  2. kavithaiyai vida antha photo nallaa irukku hi..hi

    ReplyDelete
  3. \\இது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)//

    நன்றி சேட்டை

    ReplyDelete
  4. \\இல்லை...இல்லை...//

    எஸ்.ரா ஸார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. Blogger ரஹீம் கஸாலி said...

    kavithaiyai vida antha photo nallaa irukku hi..hi

    நன்றி ரஹீம்

    ReplyDelete
  6. \\Blogger Lakshmi said...

    இல்லே இல்லே.//

    நன்றி மேடம்

    ReplyDelete
  7. அட அட அட!! நான் கவிதையை(யும்) சொன்னேன்! :)

    ReplyDelete
  8. புது வருகை தக்குடு

    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. களப்பணி ஆற்றவா?போகிறோம்
    களவாணித்தனம் செய்யதானே!

    போலாம் ரைட்@

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி கோகுல்

    ReplyDelete
  11. அரசியல் களப்பணி செய்ய தகுதிகளை கவிதையை வடித்து சொன்ன கும்மாச்சிக்கு எனது பொன்னான வாக்குகளை அளிக்கிறேன்:)))))நன்றி.

    ReplyDelete
  12. பாஸ் உங்கள் வோட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  13. படம் அருமை ...

    ReplyDelete
  14. படம் அருமை ...

    கவிதையும் அருமை

    ReplyDelete
  15. ஆமாமா படத்திற்கு சம்பந்தமில்லை.,
    ஹா.ஹா..

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி கருண்.

    ReplyDelete
  17. படத்துக்கும் கவிதைக்கு சம்பந்தம்
    இல்லை!
    இல்லை!!
    இல்லை!!!
    இல்லை!!!!
    இல்லை!!!!!

    ReplyDelete
  18. எம் எம் குஞ்சு அதையேதான் நாங்களும் சொல்லியிருக்கோம்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.