Tuesday, 22 November 2011

கலக்கல் காக்டெயில் -49


பாலும் கசந்ததடி, பயணம் நொந்ததடி

அம்மா என்னதான் காரணம் சொன்னாலும் விலை ஏற்றம் மக்களை கடுப்படையவே செய்திருக்கிறது. பேருந்து கட்டணம் அதிகரிப்பை ஓரிரு மாதங்கள் முன்பாகவே முன்னறிவிப்பாவது செய்திருக்கலாம். ஏதோ முதல் நாள் அறிவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் கட்டணம் ஏற்றியதை ஏழைகள் மன்னிப்பார்களா? தெரியவில்லை.

பால்விலை ஏற்றத்திற்கு  சொல்லப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இத்தனை நாள் நஷ்டத்தில் ஓடியதாக சொல்கிறார்கள். அதை கண்டு பிடிக்க ஆறு மாத காலமா? என்னையா அரசாங்கம் இது. அது சரி இதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், முதலில் மாற்றுக் கட்சி ஆளுங்களை எப்படி உள்ளே போடலாம் என்று குத்தவைச்சு யோசிச்சிருப்பாய்ங்க போல.

மின்சார கட்டணம்  அதிகரிப்பிற்கு கொஞ்ச நாளாகும் போல் தெரிகிறது. அதுவரைக்கும் மக்கள் இல்லாத மின்சாரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

அரசின் வருவாயை பெருக்க ஆயிரம் வழிகள் உள்ளன. விலையேற்றம் என்பது கடைசி வழியாக இருந்திருக்கவேண்டும். மக்கள் சுமையை கொஞ்சமாக ஏற்றினால் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் இவர்கள் ஏற்றியது பெரிய மலையை, கடினம்தான்.

பதினாறு நாள் காரியத்திற்கு பிறகு பங்கு போட்டவர்கள் இனி அடுத்த நாள் பாலுக்கே பங்கு போடும் நிலை.



நானும் உண்ணாவிரதம் இருக்கேன்

கேப்டன் தன் பங்கிற்கு விலையேற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போறாராம். அம்மாவை எதிர்த்து அரசியலா? பலே சரியான போட்டி.  
டவுட்டு தனபால் கேட்கிறான், கேப்டன் எதைக் குடித்து உண்ணாவிரதத்தை முடிப்பார்? என்று, தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

ரசித்த கவிதை
அம்மாவிற்கு மகனாய்
அப்பாவிற்கு வாரிசாய்
அண்ணனுக்கு அடிபணியும்
தம்பியாய்
நண்பர்களுக்கு
நன்றியுள்ளவனாய்
காதலிக்கும் பொழுது
காதலனாய்
சிரிப்பவர்களுடன் சிரித்து
அழுபவர்களுடன் அழுது
எப்பொழுது?
எங்கே?
எது நான்?


டி ஆரின் ஆங்கிலம் (என்ன கொடுமை ஸார் இது)


Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

rajamelaiyur said...

//கேப்டன் எதைக் குடித்து உண்ணாவிரதத்தை முடிப்பார்? என்று,
//


அதுதான் ......!
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

SURYAJEEVA said...

வழக்கம் போல அதை குடிச்சு தானே முடிப்பார்.. -டவுட் கோவாலு

கோகுல் said...

பெட்ரோல் விலையை ராவோடு ராவா ஏத்துறது போல பேருந்து கட்டணத்தை ஏத்தியது கொடுமை.எத்தனை பேரு விஷயம் தெரியாம சரியான காசு எடுத்துட்டு போய் அவஸ்தைபட்டிருக்காங்க.//
ரசித்த கவிதை அருமை//

காணொளி-டி.ஆர் ஆங்கிலத்திலும் (?)அசத்துறார்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பே ஏற்றி இருந்தால் நாம் ஒரு காட்டு காட்டி இருக்கலாம்..

குறையொன்றுமில்லை. said...

கவிதை டச்சிங்க்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.