Pages

Saturday, 5 November 2011

காணாமல் போகும் கேப்டன்


கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத அலையில் இருபத்தியேழு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் அம்மா கவனிப்பார்கள் என்று பம்மிக்கொண்டிருந்த கேப்டன், அம்மா கொடுத்த அல்வாவில் சூடாகியது பழைய விஷயம்.


சரி இனி கேப்டன் சிங்கம் போல சீறி அம்மாவை எதிர்த்து ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக அறிக்கை விடுவார் என்று எதிர் பார்த்த மக்களுக்கு இப்பொழுது இவர் கடையில் கிண்டும் அல்வாதான் மிஞ்சுகிறது.

அம்மா சமச்சீர் கல்வியில் “குழப்பிய குட்டையை” தூரெடுக்க சொல்லி கண்டிப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு “ஆறும் மாதம் அவகாசம் அதற்குப் பிறகுதான் தான் திருவாய் மலருவேன்” என்று சொன்னார்.
அம்மாவின் ஆட்சியிலும் தொடரும் மின்வெட்டை எதிர்த்து ஒரு அறிக்கை வரும் அல்லது சட்டசபையில் கேப்டன் கூட்டம் ஏதாவது ஒருவர் குரல் கொடுப்பார் என்றால், ஹூஹூம்.

உள்ளாட்சி தேர்தலில் அம்மா கைவிட்டவுடன் கேப்டன் சீற்றத்தை கண்டு ஆஹா வந்துட்டார்பா நம்ம ஆதர்ச ஹீரோ என்று நினைத்தால் ஏதோ உள்ளாட்சி தேர்தலில் மைக் கிடைத்தவுடன் அதே பழைய பல்லவியை “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” என்று பாடி ஒய்ந்துவிட்டார்.

இப்பொழுது அம்மா அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவேன் என்று தான்தோன்றித்தனமாக முடிவெடுத்த பொழுது (கலைஞர் சொல்லுவது போல்) மானமுள்ள தமிழர்கள் குரல் கொடுத்த பொழுது கேப்டன் இன்னும் வாய் திறக்கவில்லை.

திரைப்படத்தில் நூறு தீவிரவாதிகளை முறுக்கி முறுக்கி அடித்த கேப்டன் அம்மாவிடம் பயந்து நடுங்குகிறார் என்பதே உண்மை.

தமிழ் மக்கள் விரைவாக கேப்டனை அடையாளம் கண்டு உள்ளாட்சி தேர்தலில் தெளிவுபடுத்திவிட்டனர்.

இதற்குப்பின் இன்னும் முதல்வர் கனவு காணும் கதாநாயகர்கள் மக்களின் மனநிலையை புரிந்து தங்கள் தொழிலில் கவனம் செலுத்துவது அவர்களுக்கும் நல்லது, தமிழ் நாட்டுக்கும் நல்லது.

9 comments:

  1. நல்ல அலசல் நண்பா

    ReplyDelete
  2. நன்றி நண்பா. உங்களது இடுகையை விரைவில் படிக்கிறேன்.

    ReplyDelete
  3. எதிர்கட்சித்தலைவர் என்பது எவ்வளவு பெரிய பொருப்பு...

    அதனுடைய மகத்துவம் தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொண்டிருக்கிறார் இவர்...

    உள்ளாட்சியில் தோல்வி என்பது பதுங்குவதற்க்கான காரணம் ஆகாது...

    அரசியல் நுனுக்கமும் அதனுடைய ஆக்கமும் இன்னும் கற்றுக் கொள்ள வில்லை..

    அந்த பயத்தில்தான் இந்த தலைமறைவு...

    ReplyDelete
  4. கேப்டன் வெத்து வேட்டு ஆகி 6மாசம் ஆச்சு

    ReplyDelete
  5. பல பிம்பங்கள் உடைந்து கொண்டே வருகின்றன என்பது அனைவருக்கும் மிதமிஞ்சிய கோபத்தை ஏற்படுத்தி வருகிற உண்மை.

    ReplyDelete
  6. கொஞ்சமாக வாயை திறந்திருக்கிறார்
    captain

    http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=ee321d38-3d11-44f0-b34f-4c4b5814707a&CATEGORYNAME=TCHN

    ReplyDelete
  7. பயணம் படத்துல வர்ற பப்லு நினைவுக்கு வர்றார்!

    ReplyDelete
  8. மாப்ள மண்குதிரை கடலில் இறங்கினால்!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.