இன்னும் சிறிது நாட்களில் 2011 முடிந்து 2012 தொடங்கவிருக்கிறது. கடந்த வருடம்
நடந்த நிகழ்வுகள் ஒரு பார்வை.
தமிழ்நாட்டில் ஆட்சி
மாற்றம்: நடந்து முடிந்த
சட்டசபை தேர்தலில் தமிழ் நாட்டில் நடந்த பேயாட்சி ஒழிந்து பிசாசு ஆட்சி
தொடங்கியது.
மின்வெட்டு: தமிழ்நாட்டில் இரண்டு மணிநேரம்
வரை இருந்த மின்வெட்டு நான்கு மணி நேரம் ஆக்கிய சாதனை பொன் எழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.
பரமக்குடி: பரமக்குடியில் நடந்த வன்முறையின்
பொழுது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழுபேர் பலியாயினர். இதை விசாரிக்க
ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை இன்னும் ஐந்து வருடங்கள் நடக்கும், முடிவில்
எல்லோராலும் மறக்கப்படும்.
2ஜி அலைக்கற்றை: வரலாறு காணாத நஷ்டத்தினை
அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில் பல பேர் சிறையில்
அடைக்கப்பட்டு சி.பி.ஐ வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. முடிய எத்தனை வருஷம் ஆகுமோ?
மணல்கொள்ளை: முற்றும் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு
பின்பு கொள்ளை ஒரு கூட்டத்திடமிருந்து இன்னொரு கூட்டத்திற்கு கை மாறியது.
கூடங்குளம்: அனுமின் நிலயம் மத்திய அரசால்
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கும்
நேரத்தில் சுற்றுப்புற மக்கள் நடத்திய போராட்டத்தால் தடம்புரண்டு எப்பொழுது
தொடங்கும் அல்லத்து தொடங்காதா? என்ற கேள்வியுடன் நிற்கிறது.
முல்லை பெரியாறு: முல்லை பெரியாரில் புதிய அனைகட்டுவோம்
என்று கேரளா அரசாங்கம் திரி கிள்ளியதின் விளைவு இன்னும் இரு மாநிலங்களிலும்
எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையும் இத்தோடு தீரப்போவதில்லை. அடுத்த
காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்.
மீனவர்கள்: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசின் துப்பாக்கிக்கு பலியாவது தொடர்ந்து கொண்டிருக்க
முதலமைச்சர்கள் மாய்ந்து மாய்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
சமச்சீர் கல்வி: கல்விக் கொள்கையில் இரண்டு
கட்சிகளும் அடித்த கும்மியில் பள்ளிக்கூடங்களில் மூன்று மாதங்கள் பாடப் புத்தகங்கள் வழங்காமல் மாணவர்கள்
மகிழ்ச்சியில் இருந்தனர், பெற்றோர்கள் கவலையில் இருந்தனர்.
புதிய சட்டசபை வளாகம்: சுமார் ஆயிரம் கோடி ரூபாய்
செலவில் கட்டப்பட்ட சட்டசபை வளாகம் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கப்பட்டது.
மக்கள் நல பணியாளர்கள்: பதிமூன்றாயிரம் பணியாளர்கள் எதிர்
பார்த்ததுபோல் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மன்னார்குடி மாபியா: கடந்த இருபது ஆண்டுகாலமாக
பேசப்பட்ட உறவு ஒரு நாளில் முறிந்தது. குடும்பம் கூண்டோடு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.
விலைவாசி: பேருந்து கட்டணம், பால் என
தொடங்கி எல்லா பொருட்களிலும் விலையேற்றம்
வழக்கம் போல் ஏறியது.
நில அபகரிப்பு: புதிய ஆட்சி வந்தவுடன் ஒரு தனி
இலாகா தொடங்கப்பட்டு எல்லோரையும் பிடித்து உள்ளே போட்டு வழக்கு தொடர்ந்து
கொண்டிருப்பது. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு ஜோடனை என்று தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருப்பது
ஒரு பெரிய சாதனை.
எல்லாமே எதிர்மறையாக
இருக்கும் பொழுது நல்லதே நடக்கவில்லையா? என்று கேட்பவர்களுக்கு, ஆறுதலாக
டாஸ்மாக் விநியோகம்
தங்கு தடை இல்லாமல் வழங்கியது, புதிய எலைட் பார்களின் வருகை.
தமிழ் திரையுலகம் வாரம்
தவறாமல் நான்கு மொக்கை படங்கள் வழங்கியது என்ற சாதனையை மெச்சாமல் இருக்க
முடியவில்லை.
15 comments:
/////
டாஸ்மாக் விநியோகம் தங்கு தடை இல்லாமல் வழங்கியது,
///////
எத்தனை தடைகள் இருந்தாலு்ம் இவைகளுக்கு எந்த பிரச்சனையும் வராது..
இந்த ஆண்டு நடந்த தாங்கள் குறிப்பிட அனைத்தும் இனிவரும் காலங்களில் இல்லாமல் இருந்தால் சரி
வருகைக்கு நன்றி சௌந்தர்.
// பரமக்குடி: பரமக்குடியில் நடந்த வன்முறையின் பொழுது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழுபேர் பலியாயினர். இதை விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை இன்னும் ஐந்து வருடங்கள் நடக்கும், முடிவில் எல்லோராலும் மறக்கப்படும்//
சுடும் உண்மை
//முல்லை பெரியாறு:அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்//
இப்போதாவது விழித்துக் கொள்ளுமா தமிழினம்
//முல்லை பெரியாறு:அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்//
இப்போதாவது விழித்துக் கொள்ளுமா தமிழினம்.
ஒன்று பெரிய மாறுதல் நிகழ வாய்ப்பில்லை.
பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி எஸ்.ரா.
kalakkal
அருமை.
ஐயா தங்கள் வருகைக்கு நன்றி.
Interesting !
நல்ல அலசல், இன்னும் விரிவா போட்டிருக்கலாம், மாதாந்திர வாரியா....!
வருகைக்கு நன்றி. ப.கு.
இதில் ஒவ்வொரு தலைப்பை எடுத்தாலே ஒரு இரண்டு மூன்று பதிவு ஓட்டலாம்.
பேய் பொயி பிசாசு வந்தது தான் டாப்பு...மாப்ள நல்லவைகள் நச்!
வருகைக்கு நன்றி விக்கி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.