Pages

Thursday, 8 December 2011

கலக்கல் காக்டெயில் -51


முல்லை பெரியாரும் முடிவிலா அரசியலும்

முல்லை பெரியாரை ஊதிப் பெரியதாக்கி இரு மாநில மக்களையும் மோத வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இப்பொழுதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாகிவிடும். கேரளாவிற்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை தாக்குவது என்று தொடங்கிய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக ஜாய் ஆலுக்காஸ் போன்ற நகைக்கடைகள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதை தொடங்கி வைத்த கேரள அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவர்கள் பாமர தமிழர்களை அடித்தால் தமிழன் திரும்ப அடிக்குமிடம் அவர்களுக்கு எல்லா விதத்திலும் பெருநஷ்டமாகும்.

இந்த வன்முறையை தூண்டாமல் இருக்க தமிழக முதலமைச்சர் எல்லா கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இரு மாநில அரசியல் தலைவர்கள் பொறுப்பாக நடக்க வேண்டிய நேரம், வாயில் வந்ததை பேசி வன்முறையை தூண்டும் செயல் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று. சீமான் போன்ற அல்லக்கை அரசியல்வாதிகளின் நடை பயணமும் போராட்டங்களும் எங்கு கொண்டு போய் விடுமோ என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

முல்லை பெரியாறு பற்றிய எனது முந்தைய இடுகையை படிக்க


மௌன மோகன் சிங்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற ஒன்றை வைத்து எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தன. நம்ம சிங்கு கம்மென்று இருக்கிறார். இப்பொழுது முல்லை பெரியாரை வைத்து கேரளா எம்பிக்களும் தமிழக எம்பிக்களும் கபடி ஆடிக்கொண்டிருக்கிறார் ஹூம் ஹூம் மனிதர் வாயை திறக்கவே இல்லை. பலே அப்பாடக்கரா இருப்பார் போல.


ரசித்த கவிதை
கூப்பிடு தொலைவில் நீ
என்ன சொல்லிக்
கூப்பிடுவது என்ற
தயக்கத்தில் நான்
தெரிந்துகொள்ளும் ஆசை
காதலாகிப்போனது.

நகைச்சுவை

பாம்பால் விழுங்கப்பட இருந்த ஒரு தவளையை காப்பாற்றினாள் அவள். உயிர் பிழைத்த தவளை அவளிடம் உனக்கு நான் மூன்று வரங்கள் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை நீ எது கேட்டாலும் உன் கணவருக்கு பத்து மடங்கு கிடைக்கும், சரி கேள் என்றது.

அவள் முதலில் எனக்கு பத்து கோடி ரூபாய் வேண்டும் என்றாள்.

உடனே அவளுக்கு பத்து கோடி ரூபாய் கிடைத்தது. கணவனுக்கு நூறு கோடி கிடைத்தது.

எனக்கு நகரின் மையப் பகுதியில் ஒரு பெரிய பங்களா வேண்டும் என்றாள். அவளுக்கு ஒரு பங்களாவும், அவள் கணவனுக்கு அதே இடத்தில் அதைப் போல பத்து பங்களாவும் கிடைத்தன.

இந்த முறை அவள் எனக்கு “mild heart attack”  வேண்டும் என்றாள்.

அவளுக்கு “mild heart attack”  வந்தது.

அவள் கணவனுக்கு அதைவிட பத்து மடங்கு “milder heart attack” வந்தது.

நீதி: வேண்டாம் சொல்ல வேண்டாம், தங்கமணி பூரிக்கட்டையுடன் அருகில் நிற்கிறாள்.

இந்த வார ஜொள்ளு

17 comments:

  1. மாப்ள நிகழ்கால உணர்வுகளை சரியா சொல்லி இருக்கீங்க...நான்கூட கவிதா ச்சே கவிதை ட்ரை பண்ணி இருக்கேன் ஹிஹி!

    ReplyDelete
  2. விக்கி வருகைக்கு நன்றி, உங்கள் கவிதை படித்தேன், சூப்பர், பின்னூட்டம் பாருங்க.

    ReplyDelete
  3. நாட்டு நடப்புகள்...
    அழகு...

    ReplyDelete
  4. நரசிம்மராவ் அடுத்து காங்கிரஸ் பிரதமர்களிளே அதிக மெளனத்துடனும்,
    அமைதியியுடன் இருப்பவர் இவர்தான்...

    இவரை வச்சிக்கிட்டு நாம படுற அவஸ்த்தை இருக்கிறதே..

    ReplyDelete
  5. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி எஸ்ரா.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  9. ரசித்த கவிதையில் மென்மையான காதல் !

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  11. அரசியல் கவிதை ஜொள்ளு சூப்பர்

    ReplyDelete
  12. தங்கமணியை பக்கத்துல வச்சிக்கிட்டு இந்தமாதிரி நகைச்சுவையெல்லாம் உமக்கு தேவையா...

    ReplyDelete
  13. அபிநயஸ்ரீ சூப்பர்...

    ReplyDelete
  14. கவிதையும் நகைச்சுவையும் அருமை.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  15. பிரபாகரன் வருகைக்கு நன்றி, ஜொள்ளு உங்களுடைய விருப்பம்.

    ReplyDelete
  16. சி.பி., தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.