Pages

Monday, 5 December 2011

மின்வெட்டில்லா மாலை தேவை


காலிலே விழாத தொண்டர் தேவை
கள்ள ஓட்டில் வெற்றிபெறா கட்சி தேவை
காசுக்கு ஒட்டு போடா மக்கள் தேவை
கண்ணியம் காக்கும் தலைவர் தேவை
விலைவாசி ஏற்றாத அரசாங்கம் தேவை
கொலையில்லா சமுதாயம் தேவை
ஊழலில்லா அரசு தேவை
குழிகளில்லா சாலை தேவை
மின்வெட்டில்லா மாலை தேவை
விபத்துக்கள் இல்லா நாட்கள் தேவை
கூட்டணி இல்லா தேர்தல் தேவை
அணைகள் கட்டா அண்டை மாநிலம் தேவை
இவையாவும் எதிர்பாரா உள்ளம் தேவை  

13 comments:

  1. இதுலாம் ரொம்ப பேராசை

    ReplyDelete
  2. ராஜா வருகைக்கு நன்றி, வெட்கம், மானம் கிலோ என்ன விலை?

    கேட்டு சொல்றேன் பாஸ்.

    ReplyDelete
  3. ஏலா ஆசைகளும் மாபெரும் ஆசைகலாகவே உள்ளது..
    இருந்தாலும் இவையெல்லாம் நடக்கவேண்டுமென மனது ஆசைப்படுகிறது..

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கருண்

    ReplyDelete
  5. மாப்ள அந்த கடைசில சொன்னீங்களே அதுவேனா நடக்கும்!

    ReplyDelete
  6. வாருகைக்கு நன்றி விக்கி.

    ReplyDelete
  7. இப்பிடியெல்லாம் நடக்காத ஆசையெல்லாம் மனசில வந்தா வெளில சொல்லக்கூடாது கும்மாச்சி !

    ReplyDelete
  8. அருமை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நன்றி ரத்னவேல் ஐயா.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  11. பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.