Pages

Monday, 12 December 2011

விபத்துகளால் கற்றுக்கொண்டது என்ன?


இதுவரை 89 பரிதாப உயிர்களை தீ எரித்துக் கொன்றிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள A.M.R. I (Advanced Medical Research Institute) என்ற அந்த உயர் நவீன மருத்துவமனையில் 09/12/2011 அதிகாலையில் மூன்றரை மணிக்கு தீ அடித்தளத்தில் Medical Waste வைத்திருக்கும் அறையில் மூண்டிருக்கிறது. தீயணைப்பு படைகளுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வந்து சேர்ந்ததோ நாலேகால் மணிக்கு, கிட்டதத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் தாமதமாக. தீ முதல் ஐந்து நிமிடத்தில் அணைக்கப்படவில்லை என்றால் அதன் சீற்றம் ஒவ்வொரு நிமிடமும் நூறு, ஆயிரம் மடங்காக அதிகரிக்கும்.

மருத்துவமனையில் பெரும்பாலும் நோயாளிகளும், அவர்களுடன் இருந்த உறவினர்களும், குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றனர். அதிகாலை நேரத்தில் உறக்கம் எல்லோரையும் அடித்துப் போடும் நேரம். எல்லோரும் தூக்கத்திலேயே மூச்சுத்திணறலால் மாண்டிருக்கின்றனர். அது பலஅடுக்கு மருத்துவமனை என்பதால் தீயின் உக்கிரம் மேலே எழும்ப, பெரும்பாலோனோர் தப்பிக்கும் வழி தெரியாமலும், படுக்கையைவிட்டு எழ முடியா நோயாளிகளும், குழந்தைகளுமே பலியாகியுள்ளனர்.

அங்கு பணிபுரிபவர்களுக்கும் தப்பிக்கும் வழி அத்துப் படியாக இருக்கும், ஆனால் நோயாளிகளின் நிலைமை அப்படி அல்ல. பெரும்பாலோனோர் அந்த இடத்திற்கு புதியதாகதான் வந்திருப்பார்கள். நோயாளிகளுடன் வருபவர்களுக்கே அந்த இடத்தினுடைய கட்டமைப்பு புரிய குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும், நோயாளிகளுக்கு சொல்லவே வேண்டாம்.

இவர்களை காப்பாற்ற DMG (Disaster Management Group) குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் பல தளங்களில் உள்ள உயிர்களை காப்பாற்றி உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் போராடி நிறைய உயிர் சேதத்தை தடுத்துள்ளனர், இல்லையென்றால் இன்னும் நிறைய உயிர்கள் போயிருக்கும்.
சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகை இந்தியாவில் உள்ள அதிநவீன மருத்துவமனைகள் பட்டியலில் AMRI  இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அதிநவீன மருத்துவமனையே இந்த கதி என்றால் மற்ற மருத்துவமனைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

வழக்கம்போல் முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு விரைந்து உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மருத்துவமனையின் சொந்தக்காரர்கள் ஆறு பேரை கைது செய்திருக்கிறது மேற்குவங்க அரசு. பிரதமரும் வழக்கம்போல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ருபாய் இரண்டு லட்சம் அளித்திருக்கிறார். மாநில அரசும் தன் பங்கிற்கு நஷ்ட ஈடு மூன்று லட்சம் வழங்கியிருக்கிறது. பிறகு பத்திரிகைகள் இதைப் பற்றி இரண்டு நாட்கள் எழுதிவிட்டு அடுத்த பரபரப்பு விஷயத்திருக்கு போய் விடுவார்கள். இனி அடுத்த மருத்துவமனை பற்றி எரிந்து உயிரிழப்பு ஏற்படும் வரை யாரும் இதைப் பற்றி நினைக்கப் போவதில்லை.

மத்திய அரசு இதை ஏதோ பத்தோடு பதினொன்றாவது விபத்து என்பதை பாராமல் இனியாவது மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வகைசெய்ய வேண்டும்.
1.       எல்லா மருத்துவமனைகளிலும் Smoke Detection System கட்டாயமாக பொருத்தப்படவேண்டும்.
2.       குறைந்தபட்ச தீயணைப்பு சாதனங்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டும்.
3.       ERT (Emergency Response Team) மருத்துவமனை ஊழியர்களியே வைத்து ஒரு குழு ஒவ்வொரு ஷிப்டிலும் அமைத்து அதற்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
4.       Flammable Substance என்று சொல்லப்படுகிற எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை உரிய இடத்தில் தக்க பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
5.       இந்த குறைந்தபட்ச வசதிகள் இல்லை என்றால் அவர்களுக்கு லைசென்ஸ் கிடையாது என்ற விதிமுறையை அமல் படுத்த வேண்டும். 

செய்வார்களா? அவர்களுக்கு அதற்கு எங்கு நேரமும், மனமும் இருக்கிறது.

17 comments:

  1. சரியா சொன்னீங்க .
    பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மருத்துவ தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  3. மருத்துவ தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  4. மதுமதி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. Yes. Politicians dont have time to rectify these mistakes.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. என்ன செய்வது நாம் புலம்பிவிட்டு மறக்க வேண்டியதுதான்!நானும்இப்படித்தான் புலம்பினேன்!

    புலம்பலும் மறத்தல் நிமித்தமும்
    http://gokulmanathil.blogspot.com/2011/12/blog-post_10.html

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. நீங்கள் வகுத்த பாதுகாப்பு குறித்த
    வேண்டுகோள்கள் நிறைவேற்றப் பட வேண்டும்...
    மனம் கொண்டு செய்யவேண்டும் ஆள்வோர்.

    ReplyDelete
  10. வரும்முன்னும் காப்பதில்லை. வந்த பின்னும் கவனம் செலுத்துவதில்லை. இது தான் இன்றைய இந்தியாவின் நிலை :-(

    ReplyDelete
  11. உண்மையான ஆதங்கம். பயனுள்ள தகவல்கள்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  12. மாநில அரசு இந்த மருத்துவமனைக்கு எப்படி அனுமதி கொடுத்தது? மேலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மத்திய அரசுக்கு மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் உள்ளதா?
    என்று பல சந்தேகங்களை உங்கள் பதிவு கிளப்பி விட்டு விட்டது

    ReplyDelete
  13. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சூர்யா.

    ReplyDelete
  14. மாப்ள மக்களின் "பாதுகாப்பு" - மிகப்பெரிய கேள்விக்குறியாகி வருகிறது...!

    ReplyDelete
  15. மாப்ள வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. பாதுகாப்பை கோட்டை விட்டவர்களுக்கு எனது கண்டனங்கள்...!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.