Pages

Thursday, 26 January 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர்---3


சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 விஜய் டீ. வியின் அருமையான நிகழ்ச்சி. இதில் வரும் குழந்தைகளிடம்தான் எத்தனை திறமை. இப்பொழுது இது நல்ல கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் சரத்,  மலையாள பட இசையமைப்பாளர் சிறப்பு விருந்தினர். அவர் இசை அமைத்த ஒரு பாடலை “சுகன்யா” என்ற பெண் மிகவும் அருமையாக பாடினார். எனக்கு இவர்தான் அடுத்த அல்கா அஜீத் என்று தோன்றுகிறது.

அஞ்சனா, மதுமிதா, பிரகதி (நீங்களெல்லாம் ரொம்ப கேலி பண்றேள், நம்ம சூப்பர் ஸ்டார் இங்கிலீஷ்) போன்ற பாடகிகள் நிச்சயமாக கடைசி பத்து வரை வர நல்ல வாய்ப்புள்ளது.

இதில் போன வாரம் வெளியேற்றப்பட்ட சிறுவன் அழுதது ரொம்ப டூ மச் த்ரீ மச்.

இவரை தவிர இன்னும் நிறைய இளம் பாடகர்கள் மிகவும் “நன்னாவே பாடிண்டிருக்கா”.

கலைஞர் டீ. வியில் உஷா உதூப்பும், அனுராதா ஸ்ரீராமும் நடுவர்களாக இருந்து நடத்தும் மற்றும் ஒரு சிறுவர், சிறுமியருக்கான இசை நிகழ்ச்சி. இன்று அந்த நிகழ்ச்சியில் “அன்பென்ற மழையிலே” என்ற மின்சாரகனவு பாடலை மற்றுமொரு முறை கேட்கும் பொழுது மிகவும் நன்றாகவே இருந்தது.

மெகா சீரியல்களை துறந்து இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் சூப்பர் சிங்கர் ஜோதியிலும், குயில் பாட்டிலும் ஐக்கியமாகி விட்டார்கள்.

எனது கவலை எல்லாம் இறுதி போட்டி முடிந்தவுடன் எங்கு போனாலும் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்று ஒரு கூட்டம் புலம்புவதை கேட்கவேண்டுமே என்பதுதான்.

6 comments:

  1. மெகா சீரியல்களை துறந்து இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் சூப்பர் சிங்கர் ஜோதியிலும், குயில் பாட்டிலும் ஐக்கியமாகி விட்டார்கள்.//

    இது கொஞ்சம் நல்ல விஷயமாகவே தெரிகிறது இல்லன்னா சீரியல் பார்த்துட்டு இவிங்க புலம்புற புலம்பல் இருக்கே முடியல....!!!

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு நல்ல ஆரம்பம்தான், ஆனால் எத்தனை நாள் ஓடும் என்று தெரியவில்லை, மனோ.

      Delete
  2. SAthiyama ithu maari oru MOKKA show va naa pathathu illa...
    too much of exaggeration sir....

    oru level ku mela veruuppu varuthu,, all over the year they are running this show
    JUNIOR SENIOR
    paatu padratha thavira vera talent eh illaya ? Vera show ve illaya ?

    ReplyDelete
    Replies
    1. Different view, yes TV's can bring out other talents also.

      Delete
  3. //எனது கவலை எல்லாம் இறுதி போட்டி முடிந்தவுடன் எங்கு போனாலும் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்று ஒரு கூட்டம் புலம்புவதை கேட்கவேண்டுமே என்பதுதான்.//

    என்றுமே தீர்ப்புகள் மேல் விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தீர்ப்புகள் மீது விமர்சனங்கள் சகட்டுமேனிக்கு வருவது தவிர்க்க முடியாததுதான்.

      Delete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.