Pages

Monday, 16 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(4)


நாயரின் மனைவி மீசையுடன் ஓடிப் போய்விட்டாள். வீட்டில் போட்டது எல்லாம் போட்டபடி இருந்ததாம். குழ்ந்தைகளை கூட்டிக் கொண்டு, நாயர் அசந்து உறங்கிய வேளையில், மீசையுடன் கம்பி நீட்டியிருக்கிறாள். நாயரின் சகாப்தம் முடிந்தது, அவர் கடையை யாரிடமாவது விட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு வாரத்திலேயே நாயரை கடையின் கல்லாவிலே பார்க்க முடிந்தது. பழையபடி அவர் கடையில் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

இப்போது நாயரின் வீட்டுக்கு அருகில் கட்டப்பட்ட குடியிருப்பில் ஒரு முடிவெட்டும் தொழிலாளி குடிவந்தான். அவனும் கேரளத்துக்காரன் தான். முதலில் அவன் ஒற்றை ஆளாகத்தான் வந்தான். நாயரின் கடைக்கு தென் மூலையிலே தன்னுடைய கடையைத் துவங்கினான். ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் கடையில் கூட்டம் நிரம்பி வழியும். அவனுக்கு நாயர் கடையிலிருந்து டீ கொண்டு வருவார்கள். அதைக் குடிக்கக் கூட அவனுக்கு நேரமிருக்காது. நாங்கள் சிறுவர்கள் போனால் எங்களையெல்லாம் “வைடிங்கில் வைத்து விடுவான்.

அவன் கடைக் காலண்டிரில் மலயாள நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் “புஞ்சிரி” காட்டிக்கொண்டு இருப்பார்கள்.. ஆதலால் அவன் எங்களைக் காக்கவைத்தாலும் அந்த படங்களில் வரும் கிறக்கத்தில் மூழ்கி வந்த வேலையை மறந்து விடுவோம். வேணு எங்களுக்கு எல்லாம் கடை மதியம் மூடும் முன்புதான் முடி வெட்டி விடுவான்.

வேணு தன்னுடைய கல்யாணத்திற்காக ஊருக்கு சென்று வந்தான். அந்தப் பெண் நாயரின் சொந்தக்காரப் பெண் என்று பேசிக்கொண்டார்கள். அவள் பெயர் மாயாவாம். வேணு அவளை எங்கள் கண்களில் காண்பிக்க மாட்டான். அவனுக்குத்தான் எங்களைப் பற்றி நன்றாகத் தெரியுமே. காலண்டரிலேயே வெறிக்கப் பார்த்தவர்கள். அவள் எப்பொழுதாவது வேணுவிற்கு டீ கொண்டு வருவாள். அவள் "எட்டா"  என்று விளித்துக் கொண்டே வருவாள். "அவ்விடேயே இறுக்கி" என்று அவளை நிறுத்திவிடுவான். அவளுடைய தரிசனம் கிடைக்க நாங்கள் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

வேணுகடைக்கு எதிர்புறம் மற்றொரு கடை திறக்கப்பட்டது. இது ஒரு அரவை நிலையம் (மாவு மிஷன்). இதுவும் நாயரினால் திறந்து வைக்கப் பட்ட மற்றொரு மலையாளிக் கடை. இந்த சமூகம் இப்பொழுது இந்த இடத்தில் ஏறத்தாழ ஒரு சிறிய கேரளம் உருவாக்க ஆரம்பித்தது.

நாங்களெல்லாம் நாடார் கடையின் முன்பு அமர்ந்து நாடரை ஏத்தி விடுவோம். நாடார் நம்ம நாட்டிலே இருந்துகொண்டு நம்ம கூட்டத்தை இங்கே கொண்டு வரமுடியவில்லையே என்று. நாடார் அதற்கெல்லாம் செவி கொடுக்க மாட்டார். அவர் உண்டு அவர் கடை வியாபாரம் உண்டு.

இப்போது இவர்களுக்கு போட்டியாக நாடார் கடையின் அருகே சுமார் மூன்று கிரௌண்ட் நிலத்தை வேலிகட்டி புதியதாக ஒரு விறகுதொட்டி வந்தது. இந்தக் கடை ஆரம்பித்ததிலிருந்து எங்கள் கூட்டத்தில் இருந்த இஸ்திரி நடராஜ், ப்ளூட் ரகு இரண்டு பேரும் எங்களை தவிர்த்து விறகு தொட்டியில் தம் அடிக்க ஆரம்பித்தார்கள். இதன் பிரத்தியேக காரணம் எங்களுக்கு ஏதேச்சையாக அன்றுதான் தெரிய வந்தது.
.........................தொடரும்

8 comments:

  1. வருகைக்கு நன்றி எஸ்.ரா.

    ReplyDelete
  2. இன்று தான் வந்தேன்
    தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கோவிந்தராஜ்

    ReplyDelete
  4. ரத்னவேல் ஐயா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. அட போட வைக்குது கதை...தொடருகிறேன் மாப்ள!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.