செய்திகளும் லொள்ளுகளும்
பெண்களுக்கு பிடித்தது பச்சைநிறம்
என்றால் காதலில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்களாம்.........செய்தி .
எப்படியெல்லாம் கிளப்பி உடரானுங்கப்பா.
வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கேப்டன் புடவையும் போர்வையும் கொடுத்த இடத்தில் தள்ளுமுள்ளு,
பதினைந்து பேர் காயம்.
வேட்டியும், கட்டிங்கும் கொடுக்கலையா?
அதான் பாய்ந்திருக்கிரார்கள் அவ்வ்
இப்போதான் அடிச்சு ஓய்ந்திருக்கிறார்கள்,
கிளம்பிட்டானுங்கையா இவனுங்க.
கடலூரில் புயல் பாதிக்கப்பட்ட
இடங்களை நாளை முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார்.
காரில் போய் பார்த்தால் மக்கள்
இருக்கிற வெறுப்பில் கும்மிவிடுவார்கள் என்ற பயம் போலும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால்
இரண்டு கோடி பரிசு............முதலமைச்சர்
காலில் விழும் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பார்களோ, அப்போ பணம் கட்சிக்குள்ளேயே
தான் சுத்தும்.
கடவுள் மனிதனா பிறக்க வேண்டும்
அவன் கேப்டன் மூஞ்சியப் பார்த்து
வேதனையில் வாட வேண்டும்.........ரிமோட்ல மாற்றும் பொழுது கேப்டன் டிவில ஒரு
செகண்ட் நின்னுடிச்சு.
டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரி
இன்று சிட்னியில் இல்லை.
இவர் நூறாவது செஞ்சுரிக்கு நூறு
மாட்ச் ஆடி அடிப்பரோ?
ஏப்ரல் நான்காம் தேதி
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு துவக்கம்.
எந்த மந்திரி இந்த முறை எழுதப்
போறாரோ? சீக்கிரம் ஆள் ரெடி பண்ணுங்கப்பா.
காஷ்மீரில் மின்சாரம் கேட்ட
மக்கள்மீது துப்பாக்கி சூடு, ஒருவர் பலி.
ஆத்தா இந்த செய்தியை பார்க்காம இருக்கணுமே.
கடலூரில் புயலில் பாத்தித்த
மக்களுக்கு நித்யானந்தா 98 லட்சம் நிதியுதவி.
மீதி ரெண்டு
லட்சத்தை ரஞ்சிதாவுக்கு கொடுத்து ஒரு கோடி கணக்கு காட்டுவாரோ?
ஆமையுடன் தமிழக அரசு
போட்டி............நிவாரணப் பனிகள் குறித்து கேப்டன் பேட்டி.
ஆமாம் இவரு
நத்தை வேகத்தில புடவையும், போர்வையும் கொடுத்த வேகம் யாருக்கும் வராது.
“3“ படத்தில் இணைந்து நடிக்கும் நடிகருக்கும்
நடிகைக்கும் கசமுசாவாம் ..............இயக்குனர் மனைவி வருத்தம்.
மேடம்
படத்துக்கு நீங்களே “3“ ன்னு பேர் வச்சிட்டு
இப்போ வருந்தி என்ன பயன்?
5 comments:
/கடலூரில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார்.
காரில் போய் பார்த்தால் மக்கள் இருக்கிற வெறுப்பில் கும்மிவிடுவார்கள் என்ற பயம் போலும்.
//
சரியா சொன்னிங்க
வருகைக்கு நன்றி ராஜா.
ஹா..ஹா...
மாப்ள சச்சின் மற்றும் 3 படம் டாப்பு !
வருகைக்கு நன்றி விக்கி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.