Pages

Thursday, 5 January 2012

தொடர் தொடங்கலாமா?


எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள். வலைப்பூ தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.  அப்பொழுதிலிருந்தே ஒரு தொடர்கதை எழுதவேண்டும் என்ற ஒரு நப்பாசை மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆதலால் அப்பொழுதே ஒரு இரண்டு மூன்று அத்தியாயங்கள் எழுதி வைத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணத்தினால் அதை மேலும் தொடராமல் என் கணினியிலேயே வைத்திருந்தேன்.

அதற்குள் மிகவும் எளிமையான, அரசியல் கட்டுரை, மொக்கை, சிறுகதை, கவிதை என்று சுமாராக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்று பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு உண்டான ஆதரவுகள் உங்களிடமிருந்து பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

என்னுடைய பழைய இடுகைகள் எல்லாமே கணினியில் சேமித்து வைத்திருந்தேன். அதையெல்லாம் ஒரு நாளைக்கு வகைப் படுத்திக்கொண்டிருந்த பொழுது இந்த எழுதி முடிக்காத தொடர் கதை தென்பட்டது. அதை எழுத ஆரம்பித்த கதை களமும், கருவும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

எனது சிறிய வயதில் சென்னை நகரின் சிறிதே ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு சிறிய வீட்டில் இருந்தோம். அந்த இடத்தில் ஒரு புதிய சமுதாயம் ஒன்று தோன்றி படிப்படியாக வளர்ந்ததை இந்த கால கட்டத்தில் சொல்லலாம் என்று தோன்றியதால் இனி வாரம் ஒரு முறையாக பதிவிட இருக்கிறேன்.

“நாயரின் சாம்ராஜ்யம்” என்று தொடங்கவிருக்கும் தொடரை வாரம் ஒரு பாகமாக வெளியிட எண்ணம். தொடருக்கு எனது பதிவுலக நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும்  வழக்கம்போல் எதிர்பார்க்கிறேன்.


என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி  


17 comments:

  1. தொடர்ட்டும் நண்பரே....

    ReplyDelete
  2. வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி ரஹீம்.

    ReplyDelete
  3. தேன் சுவையுடன் தொடர் ஆரம்பமாகட்டும்

    ReplyDelete
  4. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி மன்மதக்குஞ்சு.

    ReplyDelete
  5. இனிதே தொடருங்கள்...

    ReplyDelete
  6. ஆதரவிற்கு நன்றி

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே.. வார்த்தைக்கேது தடை.

    ReplyDelete
  9. தொடருங்க படித்து ரசிக்க காத்திருக்கோம்.

    ReplyDelete
  10. ஆவலடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  11. கலக்குங்க மாப்ள தொடரை தொடர காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  12. விக்கி ஆதரவிற்கு நன்றி.

    ReplyDelete
  13. தொடருங்க படிச்சுருவோம்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.