எழிலகம் சென்னையில் உள்ள பழைய கால கட்டிடங்களில்
ஒன்று. சென்னை பல்கலை கழகம், எழிலகம் இந்த இரு கட்டிடங்களின் அழகை நான் நிறையமுறை
விமானம் தரையிறங்கும் முன் பார்த்திருக்கிறேன். மெரீனா கடற்கரையின் அழகும்,
மிக நீளமான மனற்பரப்பும், இந்த செம்மை நிற கட்டிடங்களும் பின்னணியில் காணும்
பொழுது சென்னையின் அழகை நினைத்து பெருமை அடைவேன்.
என்னுடைய கல்லூரி காலங்களில் பல்கலைக்கழக
வளாகத்தில் உலாவும் பொழுது தவறாமல்
எழிலகம் செல்வேன், காரணம் எனது மாமா விவசாயத்துறையில் இணை இயக்குனராக இருந்த
பொழுது அவரை காண செல்வேன், அவர் செலவில் அருமையான கான்டீன் வடையும் காபியும்
கிடைக்கும். ஆனால் கொடுமை அதை அவர் அலுவலகத்தில் உண்பது, ஏன் என்றால் அவர் அறை
மேற்குப்புறத்தில் பக்கிங்காம் கால்வாய் பக்கம், அங்கு வரும் நாற்றம் மசால்வடையின்
வாசனையை குறைத்துவிடும்.
இந்த புராதானமான கட்டிடம்தான் பொங்கல் விடுமுறையின்
பொழுது பற்றி எரிந்தது. தீ மூண்டதற்கு காரணம் மின்கசிவு என்று அரசு சொல்லும் கூற்று
ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த வளாகத்தில்தான் சமூக நலத்துறையும், வருவாய்
துறையும் உள்ளது. இரண்டுமே காசு அளவுக்கு அதிகமாக புழங்கும் துறைகள். கட்டிடம் தீ
பற்றி எரிந்ததில் முக்கியமான ஆவணங்கள் எறிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது நம்
சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அரசு அலுவலகர்கள் மேல் ஊழல் புகார்கள் தொடுக்கப்
பட்டிருக்கும் இந்த நேரத்தில் இதில் ஏதாவது சதி இருக்குமோ என்று தோன்றுவதை
தவிர்க்க முடியவில்லை.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினரில் ஒருவர்
உத்திரம் இடிந்து விழுந்ததால் உயிரிழந்து இருக்கிறார். இது பழைய கட்டிடம் ஆதலால் மர
உத்திரம் வைத்து தான் கட்டியிருப்பார்கள் என்ற உண்மை தெரியாமலா படையினர் உள்
நுழைந்திருக்கிறார்கள். இது யோசிக்கப் படவேண்டிய விஷயம்.
இனி இந்தக் கட்டிடம் அரசு அலுவல்களுக்கு உகந்ததா
என்பதை அரசு ஆராயவேண்டும். ஏற்கனவே புதிதாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் வீண்
பிடிவாதத்தால் வீணடிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர் நோக்குவோம். சதியின்
பின்னணி நமக்கு தெரியாமல் போகலாம்.
8 comments:
உண்மைதான் .. ஒரு அப்பாவி உயிர் போய் விட்டது
நன்றி ராஜா.
மாப்ள கொடுமை மற்றும் அலட்சியம்!
வருகைக்கு நன்றி விக்கி.
எழிலகம் எரிந்தது வருத்தமான செய்தி! நீங்கள் சொல்வது போல அரசியல் பின்னணி இருக்கலாம்! போகப் போகத்தான் தெரியும் கும்மாச்சி அண்ணா!
கும்மாச்சி அண்ணா உங்கள் தளத்தில் இரண்டு தமிழ் மணப் பட்டைகள் உள்ளன! அவற்றில் ஒன்றை நீக்கிடுங்கள்! காரணம் ப்ளாக் ஓபன் ஆக டைம் எடுக்கும்!
வருகைக்கு நன்றி ஐடியா மணி.
நீக்கிவிடுகிறேன், தகவலுக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.