இந்த “வேட்டை” லிங்குசாமியின் சமீபத்திய திரைப்படத்தை
பற்றி அல்ல.
அம்மாவின் அதிரடி ஆட்டத்தை பற்றியது. நேற்றைய
தினம் அம்மா அக்ரி கிரிஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி இவர்களின் அமைச்சர் பதவியை
பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது உ.பி. ச. தோட்டத்திலிருந்து வெளியேற்றியபின்
தொடரும் நடவடிக்கைகளில் ஒன்று.
இவர்கள் இருவரும் சசிகலாவின் ஆதரவில் அமைச்சரானவர்கள்.
இதில் வேலுமணி அமைச்சரான முதலே தன் வசூல் வேட்டையை தொடங்கிவிட்டாராம். கிட்டத்தட்ட
நானூறு கோடி வரை ஆட்டையை போட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் எனக்கல்ல அம்மாவுக்கு
(எந்த அம்மாவுக்கு?) என்று சொல்லித்தான் வசூலித்திருக்கிறார். மேலும் இவருக்கும்
தி.மு.க பெரும்புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டாம்.
அம்மாவின் நடவடிக்கை அமைச்சர் பதவி நீக்கத்துடன்
முடியாது என்று நம்புவோமாக. அடித்த பணத்தை எப்படி திரும்ப பெற நடவடிக்கை
எடுக்கிறார் என்று பார்ப்போம். இல்லையென்றால் இதுவும் ஒரு பழிவாங்கும்
நடவடிக்கை என்று தான் மக்கள் நினைப்பார்கள்.
இவர்களிடமிருந்து பறித்த பதவிகள் முக்கூர்
சிவசுப்ரமணினுக்கும், சிவபதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது போலீசார் திவாகரனை தேடும் வேட்டையில்
முடுக்கிவிடப் பட்டிருக்கின்றனர். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
திவாகரனை தேடி பசுல்லா ரோட்டில் உள்ள இளவரசியின்
வீட்டில் போலீசார் தேடியிருக்கின்றனர். சசிகலா இப்பொழுது அங்கே தான் தங்கியிருக்கிறார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கேள்வி.
இன்னும் சில அதிரடி நடவடிக்கைகள் வர
இருக்கின்றன.
இதெல்லாம் சொத்து குவிப்பு வழக்கின் முன் நடவடிக்கையா? என்பது
போக போகதான் தெரியும்.
ஆனால் அம்மா இந்த கூட்டத்தை வளர்த்துவிட்டதற்கு
உண்டான பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
மக்கள் மாக்கள் அல்ல.
6 comments:
அம்மாவா கொக்கா என்ன ஹா ஹா ஹா ஹா...!!!
வருகைக்கு நன்றி மனோ.
அவர் வெறும் மாக்களைத்தானே வேட்டையாடுகிறார்...காலில் விழும் படம் கிடைக்கவில்லையா நண்பரே..
?
காலில் விழும் படம் இப்போதெல்லாம் இல்லை, முதுகு வளைந்து தரையை தொடுவதுதான் இப்போ லேட்டஸ்ட்.
6 மாசத்தில் 400 கோடியா ஆஆஆ.................அப்படின்னா 5 வருசத்தில்????
நானூறு கோடி எல்லாம் அவிக லெவலுக்கு ஜூஜூபி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.