Pages

Monday, 30 January 2012

மாவட்ட செயலாளராக முப்பது லட்சமா?


ம்மாவிற்கும் சசிகலா கூட்டத்திற்கும் நடக்கும் "நீ கொடுத்த நான் கெடுத்தேன்" போராட்டம் நாளொரு வழக்கும் பொழுதொரு கைதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் ஒரு கட்டமாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது கொலை வழக்கு பாய்கிறதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

நீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தான் மீண்டும் மாவட்ட செயலாளராக முப்பது லட்சம் ரூபாய் ராவணனுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அந்த பதவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டபொழுது ராவணன் அதை கட்சி நிதியாகத்தான் தந்திருக்கிறாய் ஆதலால் திருப்பி தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்.

செல்வராஜ் மேலிடத்தில் புகார் கொடுப்பதாக சொன்ன பொழுது, ராவணன் உயிருடன் ஊரு போய் சேர மாட்டாய் என்று மிரட்டிய நிலையில் செல்வராஜ் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதுதான் இப்பொழுது ராவணன் மீது பாயும் வழக்கிற்கு முகாந்திரம்.

ஒரு கட்சியின் மாநில செயலாளராக முப்பது லட்சம் செலவு செய்ய முன் வருகிறார்கள் என்றால், அந்த பதவி வந்தவுடன் அவர்கள் மீண்டும் அதை வட்டியும் முதலுமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே செலவழிக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று என்னுடைய நண்பனிடம் கேட்டேன், அவர் மச்சான் ஒரு ஒன்றிய தலைவர்.

அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் எனக்கு திகைப்பு.

ஒன்றியமே பதவிக்கு பதினைந்து லட்சம் வரை செலவு செய்கிறார்களாம். போட்ட காசை ஒரு வருடத்திலேயே எடுத்து விடுவார்களாம். அந்த ஏரியா ரோடு, மற்ற மராமத்து லொட்டு லொசுக்கு எல்லா கான்ட்ராக்டுகளும் இவர்கள் வசம்தானாம். ஒவ்வொன்றிலும் இருபது விழுக்காடு வரை இவர்களுக்கு பணி செய்யாமலே வருதாம்.

அப்புறம் அந்த திட்டம், இந்த திட்டம் என்று வருவதெல்லாம் “போனஸ்” தான்.

அப்படியென்றால் இந்த சட்டசபை உறுப்பினர், மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் இதற்கெல்லாம் எவ்வளவு முதல் போட்டு எவ்வளவு எடுப்பார்கள்? அப்பப்பா!!!!!!!!!!!!!!!

அடப்பாவிகளா? இப்பவே கண்ணை கட்டுதே.

4 comments:

  1. 30 லட்சம் கொடுத்து ஒரு பதவியை ஒருத்தன் வாங்க முற்படுகிறான் என்றால் அப்போது அந்தப் பதவியை வைத்து எவ்வளவு சம்பாதிக்க நினைத்திருப்பான்? அவன் போய்ச் சேர்ந்ததே நல்ல முடிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி, ஸார்.

      Delete
  2. இவங்க எப்பவுமே இப்படிதான் மாப்ள...அட்சய பாத்திரமா அரசியல் மாத்தி ரொம்ப நாளாசிய்யா!

    ReplyDelete
    Replies
    1. மாப்ள வருகைக்கு நன்றி.

      Delete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.