Monday, 2 January 2012

கலக்கல் காக்டெயில் -54


பூசாரிகள்

மன்னார்குடி மாபியா கூட்டத்தை முதலில் துரத்திவிட்டு இப்பொழுது அடுத்த கட்ட ஆட்கள் அதாவது நடுவில ப்ரோக்கர் வேலை செய்த பூசாரிகளை துரத்தி துரத்தி அம்மா ஆப்பு வைக்கிராங்களாம். இந்த பூசாரிகள் ஒவ்வொரு ஊரிலும் ரூம் போட்டு தரகு வேலை செய்திருக்கிறார்கள். அரசாங்கத்தில் எந்த வேலை வேண்டுமென்றாலும் முதலில் இவர்களைத்தான் அனுகவேண்டுமாம். அதன் பிறகு தான் அவர்கள் மன்னார்குடி மாபியா மெம்பர் முகதரிசனம் கிட்டுமாம். அதற்கே ஒரு அமௌன்ட் இந்த பூசாரிகளுக்கு வெட்ட வேண்டுமாம். இது மாதிரியே இவர்கள் கோடி கணக்கில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு நடந்திருக்கிறது, பல பத்திரிகைகள் இதை முன் கூட்டியே கிட்டத்தட்ட இருபது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சருக்கு தெரியாமல் இதெல்லாம் நடந்ததுபோல் இப்பொழுது ஒரு பிம்பம் உண்டாக்கப் படுவது ஒரு கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.

கொடுக்கல் வாங்கலில் பிணக்கு வந்த பொழுது கழற்றிவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொள்வது யாரை ஏமாற்றும் வேலை?.

புத்தாண்டு பிறந்தது

பொழுது புலர்ந்து, ஆதவன் எழுந்து இனிதே புத்தாண்டு பிறந்தது. காலையிலிருந்து தொலைக்காட்சியில் மாறி மாறி சினிமா காட்சிகள், இசை வெளியீடு என்று போட்டு போரடித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை புத்தாண்டு வந்தாலும், எவ்வளவோ மாறும் இவனுங்க மட்டும் மாற மாட்டானுங்க. சினிமா இல்லை என்றால் தொலைக்காட்சிகள் மூடிக்கிட்டு போக வேண்டியதுதான் போலுள்ளது.

தானே புயல்

தானே புயல் கடலூர் அருகே கரையை கடந்து அந்த ஏரியாவை புரட்டி போட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. அரசு நிவாரணப் பணிகளுக்காக ஐந்து ஐ.ஏ.எஸ் ஆபிசர்களை நியமித்து விரைவாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

கோட் கோபிநாத்

வழக்கம்போல் கோட் கோபிநாத் நீயா நானாவில் ஜோசியர்களை வைத்து புத்தாண்டிற்கு ஒரு ஷோ நடத்தினார். அதில் கவனித்ததில் இந்த வருடமும் நம்ம ஜாதகத்தை குரங்கு புரட்டிப்போட்டதனால் எல்லா கிரகங்களும் தாறு மாறா வீடு மாறிடிச்சாம். அதனால கஷ்டங்கள் கட்டம் கட்டி நமக்கு டான்ஸ் ஆடுமாம்.

பரிகாரத்திற்கு என்ன மஞ்சள் துண்டு போடணுமா?, இல்லை மங்காத்தாவுக்கு மசால்வடை சுட்டு கொடுக்கணுமா? என்ற விவரம் யாரும் சொல்லவில்லை.

 
ரசித்த கவிதை

கிணற்று நீரில் முகம் பார்த்து
தலைவார
வரப்பில் ஓடி வழுக்கி விழ
ஏய்யா கண்ணு துரும்பா
இளைச்சுட்டே?
விசாரிப்புக்கேனும்
சொந்த ஊருக்கு சென்று
வரவேண்டும்.


கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவனின் கவிதை.

 

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

Philosophy Prabhakaran said...

இந்த ஜொள்ளு வருஷம் பூரா தாங்கும்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

நிவாஸ் said...

கவிதை மிக அருமை

கும்மாச்சி said...

நன்றி நிவாஸ்.

MANO நாஞ்சில் மனோ said...

கொடுக்கல் வாங்கலில் பிணக்கு வந்த பொழுது கழற்றிவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொள்வது யாரை ஏமாற்றும் வேலை?.//

ஏமாந்த சோணகிரி மக்கள்தான் இல்லையா...

MANO நாஞ்சில் மனோ said...

ஜொள்ளு ஹி ஹி, ஆண்டவா இந்த போட்டோவை சிபி பார்க்காமல் இருக்கவேண்டும் ஹி ஹி...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனோ. சி.பி. படத்தை பார்ப்பார்.

மன்மதக்குஞ்சு said...

அருமையான கலக்கல்.
ஜொள்ளின் பெயர் தெரிந்தால் கொஞ்சம் ஜொள்ள சவுகரியமாக இருக்கும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ம.கு. பெயர் தெரிந்தால் போடமாட்டோமா?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஐயா.

ஹேமா said...

கவிதைத்தான் மனதை வருடுகிறது கும்மாச்சி.புத்தாண்டு அழகாகப் பிறந்ததா...வாழ்த்துகள் !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க வளமுடன்! ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!

கும்மாச்சி said...

நன்றி தனபாலன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Unknown said...

அம்மா எதோ பிளான் பண்ணிட்டாங்க போல ஹிஹி!..அது ஜொள்ளா இல்ல மல்லா!...கலக்கல் காக்டெய்ல் மாப்ள!

கும்மாச்சி said...

விக்கி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.