ஊத்திக்கிட்டவரும்
ஊத்திக்கொ(கெ)டுத்தவரும்
பால் விலை ஏற்றத்தையும்,
பஸ் கட்டண உயர்வையும் கேட்கப்போனதில் நமக்கெல்லாம் செவிக்கும், கண்களுக்கும் நல்ல
விருந்து படைத்தனர் நமது முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும். கையை நீட்டி
பேசியதுதான் குற்றம் என்றால் சபாநாயகர் இருவரையுமே சஸ்பென்ட் செய்திருக்க
வேண்டும். பாவம் அவர் நிலைமை எதிர்க்கட்சி தலைவருக்குதான் தண்டனை தரமுடிந்தது.
ஆனால் கேப்டன் பம்முறார்
என்று சொல்லிக்கொண்டிருந்த அனைவரது வாயையும் ஒரே நாளில் ஆப் செய்துவிட்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் திரானியிருக்கா?,
தகுதி இருக்கா?, ஒண்டிக்கு
ஒண்டி வரியா? என்றெல்லாம் எல்.கே.ஜி குழந்தைகள் போல அடித்துக் கொண்டதில் தகுதி
இல்லாத இவர்களை பதவி கொடுத்த மக்கள்தான் வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும்.
சரக்கு எங்கயிருந்து
கொள்முதல் செய்தார்களோ? தெரியவில்லை, ஒரு கலக்கு கலக்கி விட்டது.
உள்ளேன் அய்யா
சட்டசபையில் நடந்ததை
விமர்சனம் செய்து கேப்டன் எதிர்க்கட்சி தலைவராக நடந்த முறை சரியில்லை, அம்மா
கொடுத்த தண்டனை சரியே என்று கூஜா தூக்கி “உள்ளேன் அய்யா” என்று குரல் கொடுத்த
அன்புமணி ராமதாசை மக்கள் குறித்துக்கொண்டு விட்டார்கள், இனி அவரும் தமிழ்
குடிதாங்கியும் திராவிட கட்சிகளை வசைமாரி பொழியலாம். யாரோடும் கூட்டு சேராதீங்க,
தமிழ்நாடு பிழைத்து போகட்டும்.
அறிவாலயத்தில் வலுவான
உட்கட்சி ஜனநாயகம்
அறிவாலயத்தில் உயர்மட்ட
குழுவை கூட்டி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள்.
வட்டம், மாவட்டம் எல்லாம் மூன்று முறைக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாதாம். இது
குடும்ப உறுப்பினர்கள் வகிக்கும் பதவிக்கும் வருமா? இல்லை அவர்கள் விதிவிலக்கா?
எப்படி என்றாலும் அவருக்கு இப்பொழுது நேரம் சரியில்லை. முன்னே போனால் முட்டுது,
பின்னே வந்தால் உதைக்குது. குழப்பம் குடும்பத்திலேயே குத்தகை எடுத்து குடைந்து
கொண்டிருக்கிறது.
ரசித்த கவிதை
குளிர்கால மழையின் குளிர்ச்சி
பொங்கியிருக்கலாம்!
ஆனால்...
பூட்டிய அறையில்.... திறந்த
ஒற்றைச் சாளரத்தின்வழி
அறைப்புழுக்கம் களையப்படவில்லை!
இப்பொழுது....
என் மனதிற்குள்ளும்!
பொங்கியிருக்கலாம்!
ஆனால்...
பூட்டிய அறையில்.... திறந்த
ஒற்றைச் சாளரத்தின்வழி
அறைப்புழுக்கம் களையப்படவில்லை!
இப்பொழுது....
என் மனதிற்குள்ளும்!
------------------ச.
ஜாஸ்லின் பிரிசில்டா
இந்த வார ஜொள்ளு
05/02/2012
10 comments:
hi hi hi
செந்தில் வருகைக்கு நன்றி, பதிவுகளை திரட்டி. காம்ல் இணைக்க முடிவதில்லேயே, பிரச்சினைக்கு உங்களிடம் தீர்வு இருக்கா?
//அறிவாலயத்தில் வலுவான உட்கட்சி ஜனநாயகம்//
எல்லாம் அனுபவித்து தானே ஆகணும்
//ஊத்திக்கிட்டவரும் ஊத்திக்கொ(கெ)டுத்தவரும்//
ம்.....நேரம் வரும்.. காத்திருப்போம்
வருகைக்கு நன்றி.
arumai
"இது குடும்ப உறுப்பினர்கள் வகிக்கும் பதவிக்கும் வருமா? இல்லை அவர்கள் விதிவிலக்கா?" hi! hi!
வருகைக்கு நன்றி
கவிதை அருமை சகோ
வருகைக்கு நன்றி ராஜி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.