Pages

Sunday, 5 February 2012

கொடநாட்டில் 600 ஏக்கர்


ராவணனை தேடி காவல்படை பத்து நாட்கள் வலை வீசி அலைந்து பின்னர் அவரது மனைவி ஹேமலதாவுக்கு சம்மன் அனுப்பிய பின்னரே ராவணன் பிடிபட்டார். காவல் துறை விசாரணைக்கு முன் தோட்டத்தில் தனி விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

அவரை பின்பு காவல் துறை கவனித்த கவனிப்பில் அவர் சொன்ன ஒரு விஷயம் இப்பொழுது சிந்திக்க வைக்கிறது. அம்மாவுக்கு தெரியாமல் அவர் வாங்கிய ஒரே சொத்து கொடநாட்டில் 600 ஏக்கர் நிலம் வாங்கியதாம். இந்த 600 என்ன ராசியோ தெரியவில்லை ஆட்சியை கவிழ்க்க 600 கோடி சதி என்கிறார்கள். கண்டெய்னரில் 600 கோடி அனுப்பப்பட்டது என்கிறார்கள். 6 கண்டெய்னர் என்கிறார்கள் ஆட்டைக்கும் 6 க்கும் அப்படி என்ன ராசியோ. சரி நம் விஷயத்துக்கு வருவோம். அம்மாவுக்கு தெரியாமல் வாங்கியதே 600 ஏக்கர் என்றால் தெரிந்து வாங்கியது எவ்வளவு? எத்தனை கோடி தேறும். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியும் என்றால் அவருடைய பங்களிப்பு என்ன?

ராவணன் போட்டுக் கொடுத்ததின் பேரில்தான் திவாகரனும் பிடிபட்டுருக்கிறார். அது கூட இரண்டு பேருக்கும் இருந்த பனிப்போர் தான் காரணமாம். மேற்படி தகவல் எல்லாம் கழுகு புட்டு வைக்கிறது. (ஜூ.வி). சசிகலா வாயை திறந்தால் இன்னும் என்ன என்னவோ வருமாம்.

இப்பொழுது களை எடுக்கிறேன் என்று சால்ஜாப்பு சொன்னாலும் நடந்தவைக்கு யார் பொறுப்பு? இதையெல்லாம் மறைக்கத்தான் எதிர் கட்சிகளை சட்டசபையில் சீண்டி உசுப்பியது திசை திருப்பும் நாடகமா?

ஒண்ணுமே புரியலை. டாஸ்மாக் இன்றைக்கு உண்டா? இல்லை லீவா தெரியவில்லை? சே அப்செட் பண்ணிட்டாங்கப்பா. இன்னிக்கு 6 ரவுண்டு உடலேன்னா சரிவராது. சீ என்னடா வாழ்க்கை?.

1 comment:

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.