ஒன்னுமே புரியலே
இந்த வாரம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உ.பி.ச.
ஆஜராகி சுமார் நானூறு கேள்விகளுக்கு விடையளிக்க இருக்கிறார் என்பது பரபரப்பு
செய்தி.
அம்மாவுக்கு எதிராக ஏதாவது சொல்லுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தோட்டத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டபின் இந்த
வழக்கில் திடீர் திருப்பமெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு
ரிவர்ஸ் ஸ்பின் போட்டிருக்கிறார். வங்கி கணக்கிற்கும் அம்மாவிற்கும் எந்த
சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
இவர்கள் விவகாரம் இன்னும் மக்களுக்கெல்லாம் புரியாத
புதிராகவே உள்ளது.
ஒரு வேளை உ.பி.ச பலிகடா ஆக்கப்படுகிறாரா?
உண்மை தெரிந்தவன்(ள்) யார்?
எங்கே செல்கிறது இன்றைய மாணவ சமுதாயம்
சென்னையில் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை
செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி பாடம் சரியாக படிக்க வராததானால்
ஆசிரியையின் கண்டிப்பு ஆளாகிய மாணவன் எடுத்த விபரீத முடிவு ஒரு உயிரை காவு வாங்கி
இரண்டு பெண் பிள்ளைகளை அனாதைகள் ஆக்கியிருக்கிறது.
இது ஏதோ சடுதியில் வந்த கோபத்தினால் ஏற்பட்ட விளைவாக
மேம்போக்காக தெரிந்தாலும், மாணவனின் மூர்க்கம் எதிர்கால மாணவ சமூகத்தின்
நிலையை கவலைகொள்ள வைக்கிறது.
இதை பற்றிய சின்னபயலின் கவிதை என்னை சிந்திக்க வைத்தது. அந்த
கவிதையின் சில அடிகளை ரசித்த கவிதையில் கொடுத்திருக்கிறேன்.
ரசித்த கவிதை
என் ஆசிரியனைகொல்ல
எனக்கும் ஆசைதான்
என் ஆசிரியனைக்
கொல்லவேணுமென்று
என்ன செய்தாலும்
தவறு கண்டுபிடிப்பார்
எவ்வளவு சரியாக எழுதினாலும்
பிழை கண்டு சொல்வார்.....................................
என் ஆசிரியனைக்
கொல்லவேணுமென்று
என்ன செய்தாலும்
தவறு கண்டுபிடிப்பார்
எவ்வளவு சரியாக எழுதினாலும்
பிழை கண்டு சொல்வார்.....................................
இந்த வார ஜொள்ளு
20/02/2012
5 comments:
நல்லதொர் தொகுப்பு...
ரசித்தேன்
சி.பி., சௌந்தர் வருகைக்கு நன்றி.
//உண்மை தெரிந்தவன்(ள்) யார்?//
ஹிஹிஹிஹிஹி
நாடகமே உலகம்....நாளை நடப்பதை பார்ப்போம்
வருகைக்கு நன்றி மனசாட்சி
-Good piece of information.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.