Wednesday, 1 February 2012

கேப்டன் வைத்த பொங்கல்



இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தே. மு. தி.  க. தலைவர் பொங்கி  எழுந்திருக்கிறார். (நேற்றைய பதிவு கலக்கல் காக்டெயில் படித்துவிட்டாரோ?)  

இன்று காலை கூட்டம் தொடங்கியவுடன் பால் விலை, பஸ் கட்டண உயர்வு பற்றி தே.தி.மு.க உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு அம்மா ஏற்கனவே இதற்கு விளக்கம் அளித்தாகிவிட்டது என்று சொல்ல, விலையேற்றத்தை ஏன் உள்ளாட்சி தேர்தல் முன்பு செய்யவில்லை என்று அம்மாவை உசுப்பவே ரகளை தொடங்கியது.

இப்போதுசொல்கிறேன்
, பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம்.

அம்மா தைர்யம் யாருக்கும் வராது அம்மான்னா அம்மாதான், (அஞ்சு வருடம் உங்கள் நேரம்  ஆடுங்க ஆடுங்க)

உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.

நாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் தடுக்க முடியுமா? என்பதை யோசித்துப் பேசுங்கள் என்று ஆவேசமாக பேசியபடி கேப்டனை நோக்கி கைநீட்டி சவால் விடுத்தார் ஜெயலலிதா.


கேப்டன்கிட்டே கை நீட்டாதிங்க அவரு ஒரு க்வார்ட்டர் கூட கிடைக்காதுன்னு தப்பா நினைச்சுப்பாரு.

பின்னர் “இடைதேர்தலில் ஆளுங்கட்சி எப்படி வெற்றிபெறும் என்பது எல்லோருக்கும் தெரியும், கவர்னர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள் அப்பொழுது பார்க்கலாம்  என்று பதில் சவால் விட்டார்.  

கேப்டன் உங்களிடமிருந்து இதை இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்

ஆனால்  கேப்டன் மீது கையை நீட்டி (நாக்கை கடித்து) பேசியதற்காக உரிமைமீறல் பிரச்சினையை கொண்டு வந்திருக்கிறார் சபாநாயகர். (இரு கட்சியினருமே ஒருவரை ஒருவர் கை நீட்டித்தான் கத்தியிருக்கிறார்கள் எனபது வேறு விஷயம்). 

எங்க கேப்டன்கண்டி கால நீட்டியிருந்தா நீங்களெல்லாம் போர்ட் டிரஸ்ட் பக்கம் போய் விழுந்திருப்பீங்க. 

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். 

கேப்டன் உங்க ஒட்டு வங்கியில தொண்டிய போட்டுட்டாருன்னு மொட்டை சொன்னதில்தான் கூட சேர்ந்திங்க, இது புது கதையால இருக்குது. 

தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.

இந்த தகுதி விஷயம் மக்களுக்கு புரியாததாலதான் நீங்க எல்லோரும் சட்டசபையில் ஐந்து வருடத்திற்கு ஆடறீங்க.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது.

கேப்டன் அம்மாவை எதிர்த்து குரல் விட்டா அது தரக்குறைவான பேச்சு புரிஞ்சுக்கங்க.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும்
, அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.


நீங்க மீண்டும் முதலமைச்சர் ஆனது அவிகளாலதான்னு அவிகளும் பேசிக்கிறாங்க.

அதேசமயம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் கூட அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். காரணம்
, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.

அது சரி, இது சரியான பேச்சு. இது கூட்டணி போடுமுன்பே உங்களுக்கு தெரியாதா?

ஆனால் அதிமுகவுடன் இணைந்ததால் தேமுதிகவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்தது. அந்தக் கட்சிக்கு 29 சீட்கள் கிடைத்தன. அக்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அத்தனைக்கும் காரணம் அ.தி.மு.கதான்.


முன்னாள் நடிகை முதலமைச்சர், நடிகர் எதிர்கட்சி தலைவர், சட்டசபையில் இதுபோன்ற நாடகங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். 

சபாஷ் இப்பொழுதுதான் சட்டசபை களைகட்டுகிறது.  அப்படியே மக்கள் நலனுக்காக ஒன்னு ரெண்டு அப்பப்போ அவுத்து விடுங்க.  

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

இருதயம் said...

கேப்டன் பதவிக்கு விஜயகாந்த் சரியானவரா ...? ஹி ...ஹி.

கும்மாச்சி said...

எந்த படைக்கு கேப்டன் என்ற கேள்வியை பொருத்திருக்கிறது

ராஜி said...

உங்க கமெண்ட் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது, கேப்டன் காலை நீட்டியிருந்தால் ஜோக் சூப்பர்.

Unknown said...

மாப்ள நேத்து அடிச்ச சரக்குல ரெண்டு பேருக்கும் மிக்சிங் சரி இல்ல போலே ஹிஹி!,,,முடிஞ்சா அந்த உலவு ஓட்டு பட்டய கொஞ்ச நாளைக்கு கழட்டி வைய்யா...உன்னோட ப்ளாக் ஓபன் ஆக மாட்டேங்குது சீக்கிரத்துல!...

கும்மாச்சி said...

மாப்ள வருகைக்கு நன்றி. உலவு ரொம்பதான் டார்ச்சர் கொடுக்குது.

Marc said...

அருமை பதிவு வாழ்த்துகள்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனசேகரன்.

Prem S said...

//எங்க கேப்டன்கண்டி கால நீட்டியிருந்தா நீங்களெல்லாம் போர்ட் டிரஸ்ட் பக்கம் போய் விழுந்திருப்பீங்க.
//ஹா ஹா உண்மை உண்மை

kannan said...

விஜகாந்துக்கு (அவரும் ஒரு நடிகர்) என்ன தகுதியிருக்கு என்று கேட்கும் அம்மாவுக்கும் என்ன தகுதி(நடிகை,துணைவி) உள்ளது........ஆணவம் தான் தலைவிரித்தாடுகிறது ...........தச்சை கண்ணன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.