எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில்
ரஜினி கலந்து கொண்டு வாழ்த்தியதை வைத்து மற்றொரு கூட்டம் “நடிகரை வைத்து இலக்கியம்
வளர்ப்பதா” என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியலைவிட சொந்த விருப்பு
வெறுப்புகளுக்கும், காழ்ப்புணர்ச்சிகளுக்கும் வடிகாலாகவே தனக்கு கிடைத்த மேடையை வீணடித்திருக்கிறார்
சாரு நிவேதிதா.
இன்றைய எழுத்தாளர்களை பற்றி நிறைய பேருக்கு
தெரியவில்லை. தமிழுலகம் நன்றாக அறிந்த ரஜினி ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு
எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசும் பொழுது அதற்கு கிடைக்கிற வரவேற்பும் கவனமும்
மிக முக்கியம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மார்கெட்டிங் சென்ஸ் உலகறிந்தது.
எஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவில் ரஜினி
பேசும்பொழுது நான் எஸ்.எஸ்.எல்.சி வரைதான் படித்திருக்கிறேன், ஆனால் மற்ற
புத்தகங்களை நிறைய படித்திருக்கிறேன். அவை இன்று வரை என் வாழ்வில் உதவி செய்து
கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் கஷ்டப்படக்கூடாது. அவர்களை நாம் நல்ல நிலையில்
வைத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நல்ல படைப்புகள் கிடைக்குமென்று ஒரு நல்ல
விஷயத்தையே சொல்லியிருக்கிறார். மேலும் இளைஞர்கள் நிறைய புத்தகங்கள் படிக்க
வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறார்.
சாருநிவேதிதா தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை
ரஜினியை முன்னிறுத்தி வெளிக்காட்டிக் கொள்வது மலிவான புகழ் தேடிக்கொள்வதை தவிர வேறு
எந்த காரணம் இருப்பதாக தெரியவில்லை.
ரஜினியின் பாராட்டுவிழா பேச்சும், சாருநிவேதிதா குமுறலும்
(வாயில் புகை)
6 comments:
புரிந்தால் சர்தான்
வருகைக்கு நன்றி.
எஸ் இராமகிருஸ்ணன் அவர்களை தெரியாதவர்கள் திரு ரஜினி மூலம் தெரிந்துகொள்ளட்டுமே...திரு.ரஜினி மூலம் ஒரு பத்து நபர் நல்லஇலக்கியத்தை படித்தால் அதுவே இலக்கியத்துக்கு கிடைத்த வெற்றிதானே...கும்மாச்சி சார் சாரு காதில நல்லாவே புகை வருது......ஹஹ
சுரேஷ்குமார் சரியா சொன்னீங்க.
சாரு எழுத்தில் அதிகரிக்கும் வக்கிரம் சொந்த வாழ்விலும் தொடர்வது பரிதாபம்...
கண்முன்னால் ஒரு படைப்பாளி அழிந்து கொண்டிருப்பது வேதனையாய் உள்ளது...
சாருவே ஒரு காமவெறியன்...அவன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக ஷாட் பண்ணியதுதான் இணையத்தில் சிரித்ததே...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.