Pages

Friday, 10 February 2012

எங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு இருக்கா?


லவசம் என்று வாயைப் பொளந்து வாக்கை அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஆட்டையைப் போட்ட கழகங்களை வளர்த்து விட்டதற்கு இப்பொழுது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.

எட்டுமணி நேரம் மின்வெட்டாம், கேட்கும் பொழுதே கதி கலங்குது.
*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு*
வருவாய் வரும் வழிகளை
வெகு சிறப்பாய் அமைத்தலும்
வந்த பொருள்களைச்
சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தை
முன்னேற்ற வழிகளில்
திறம்படச் செலவிடுதலுமே
நல்ல ஆட்சியாகும்.
இந்தக் குரளை நமது மின்சாரத்துறை தளத்தில் காணலாம். ஆனால் இது வரை தமிழ் நாட்டை ஆண்டவர்கள் செய்தார்களா? என்பதுதான் கேள்விக்குறி.

ஆண்டுக்கு ஆண்டு மின்சாரத்தேவை அதிகமாகிக்கொண்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அரசுக்கு தெரியுமா? தெரிந்து சும்மா இருக்கிறார்களா என்பது நமக்கு தெரியாத புதிர்.
மற்ற மாநிலங்களுக்கு இல்லாத பிரச்சினை இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து நம்மை பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த மின்வெட்டு ஏதோ நமக்கு லைட் எரியாது, ஃபேன் ஓடாது, மசாலா அரைக்க முடியாது என்பதுவுடன் நிற்பதில்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. 

க்ரைன்டரும் மிக்சியும் கொடுத்து உபயோகமில்லை. அதை இயக்க மின்சாரம் இல்லாதது கொடுமை.

இலவச க்ரைண்டருக்காக ஆட்டுக்கல்லை குப்பையில் போட்டவர்கள் மீண்டும் ஆட்டுக்கல்லை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

9 comments:

  1. மின்சாரம் மிகப்பெரிய தேவை...அது இல்ல என்றால் எப்படி வளர்ச்சி என்பது ஏற்ப்படும்!

    ReplyDelete
  2. அரசாங்கம் எல்லோருக்கும் புதிய கிரைண்டர் மிக்சிக்கு பதில் இனி ஆட்டுக்கல் உரல் தருவாங்களோ???

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  3. விக்கி மாப்ள விடுமுறைக்கு வேறு இடம் போக யோசிக்கணும்.

    ReplyDelete
  4. சங்கர் ஆட்டுக்கல்லுக்கு பதில் அரசாங்கமே இட்லிமாவும், கெட்டிச்சட்னியும் இலவசமா கொடுத்தா உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  5. //க்ரைன்டரும் மிக்சியும் கொடுத்து உபயோகமில்லை. அதை இயக்க மின்சாரம் இல்லாதது கொடுமை.
    //

    மின்சாரம்மா அப்படினா ?

    ReplyDelete
  6. ராஜா மின்சாரம்னா என்ன என்று கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

    ReplyDelete
  7. மின்சாரம் - ம்...ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை அரசியலில் - இவர்களை தேர்ந்து எடுத்தோமே (மொத்தத்தில்) நம்மை சொல்லணும்.

    ReplyDelete
  8. ஏண்ணே.. ஆட்சி நடத்துவது என்ன சாதாரணமா?..
    சந்ததியை உருவாக்கனும்..
    அதுக்கு சேர்த்து வைக்கனும்..
    எதிரிகளை அண்டவிடாம ஒழிக்கனும்..

    மேலும்...
    மனுசப்பிறவிலிருந்து , கடவுளா உருமாறனும்.. இம்பூட்டு வேலைக்கு நடுவே ,, இது இன்னா கரண்டு மிக்ஸினு..

    போங்கண்ணே...

    ReplyDelete
  9. பட்டாபட்டி வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள், வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.