Pages

Wednesday, 15 February 2012

இடைத் தேர்தல்


ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்துவிட்டு ஆளும்கட்சி இருபத்தியாறு அமைச்சர்கள் உட்பட முப்பத்திநான்கு பேர் கொண்ட ஒரு பெரும் படையே சங்கரன் கோவிலில் இறக்கி இருக்கிறது. ஏறக்குறைய தலைமைசெயலகமே சங்கரன்கோவிலில் சங்கு ஊதிக்கொண்டு இருக்கிறார்கள். கோப்புகளை எல்லாம் யார் பார்ப்பார்களோ?

 அட  இடை(த்)தேர்தல் இது இல்லைங்ணா  


அதன் தொடக்க வேலையாக இலவசங்கள் அள்ளி அளிக்கப் படுகின்றனவாம். அரசு செலவில் கொடுக்கப்படும் விலையில்லா மிக்ஸி, விலையில்லா க்ரைன்டர், இதைத்தவிர வாக்காளர்களுக்கு முதல் போனியாக காசு கொடுத்து சுபமாக தொடங்கி இருக்கிறார்கள்.

ஆளும்கட்சிக்கு தங்கள் “த்ராணி”யை நிரூபிக்க வேண்டிய அவசியம். எப்படி இருந்தாலும் இடைத் தேர்தலில் ஆளும்கட்சிகள் வெற்றிபெற படைபலம், பணபலம் என்று எல்லாவற்றையும் இறக்கி எப்படி தகிடுதத்தம் செய்து வெற்றி பெறுவார்கள் என்பது பால் குடிக்கும் பாப்பாவுக்கு கூட தெரியும். (அதானே நம்ம கேப்டனுக்கே தெரிஞ்சிருக்கு)

ஆனால் இது முடிந்தவுடன் எதிர் கட்சிகள் “பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது” என்று புளிப்பூத்துவார்கள். இதற்கு எந்த கழகங்களும் விதிவிலக்கல்ல.

“தக்காளி” இதற்கு திருமங்கலம் பார்முலா, பொன்னேரி பார்முலா என்று வேறு பெயர் சூட்டல். வெளங்கிடும் ஜனநாயகம்.

நமக்கு என்ன பொழைப்பை பார்த்தோமா, காசு வாங்கினோமா டாஸ்மாக்கில் கொடுத்தோமா என்று போதை ஏற்றி போய்க்கினே இருக்க வேண்டியதுதான். யார் வந்தாலும் நம்ம வேலை தடைபடாது.

5 comments:

  1. நமக்கு என்ன பொழைப்பை பார்த்தோமா, காசு வாங்கினோமா டாஸ்மாக்கில் கொடுத்தோமா என்று போதை ஏற்றி போய்க்கினே இருக்க வேண்டியதுதான். யார் வந்தாலும் நம்ம வேலை தடைபடாது.

    >>>>>>>>>>>

    கரீட்டா சொன்ன வாத்யாரே!

    ReplyDelete
  2. நமக்கு என்ன பொழைப்பை பார்த்தோமா, காசு வாங்கினோமா டாஸ்மாக்கில் கொடுத்தோமா என்று போதை ஏற்றி போய்க்கினே இருக்க வேண்டியதுதான். யார் வந்தாலும் நம்ம வேலை தடைபடாது.

    >>>>>>>>>>>

    கரீட்டா சொன்ன வாத்யாரே!

    ReplyDelete
  3. கூகுளும் சரக்கு வுட்டுகிச்சு போல, ஒரு தபா கமெண்டு போட்டா ரெண்டு தபா வருது.......இன்னா வாழ்க்கைப்பா.

    ReplyDelete
  4. இடைத்தேர்தல் வந்த வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.