சமுதாயத்தின் தூண்கள் ஆகிய மங்கையர்களுக்கு
மங்கையர்தின கவிதை
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்தக் கூறிய
முண்டாசு கவிஞன்
முகவரி இட மறந்தான்
ஆண்மையே
பெண்மையை ஆள்வதுபோல்
தோன்றும் கூற்றை
வேதம் என்று போற்றினோம்
பெண்மையே பெண்மையை
சிறுமை செய்யும்
பேதமையை அகற்ற
மங்கையர் தினத்தில்
மற்றுமோர் கவிதை வேண்டி
மீண்டும் அழைப்போம்
பாரதியை.
2 comments:
வருகைக்கு நன்றி மாப்ள.
பெண்மையிடம் இருந்து பெண்ணுக்கு சுதந்திரம் வாங்கி தர ஆண்கள் போராடுவோம்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.