உத்திரப்ரதேசத்தின் சட்டசபை தேர்தல் முடிந்து
சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்ற பின் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பம்
நீங்கி ஒரு வழியாக கட்சியின் மூத்த உறுப்பினர், சித்தப்பா எதிர்ப்புகளைதாண்டி
அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முப்பத்தெட்டே வயதான அகிலேஷ் ஒரு
மாநிலத்தின் முதலமைச்சராவது இதுவே சுதந்திர இந்தியாவில் முதல் முறையாம். அகிலேஷ்
யாதவிற்கு வாழ்த்துகள்.
நம் தமிழ் நாட்டிற்கு சாபக்கேடு, முதல்வர்கள்
எல்லாம் சக்கரநாற்காலியில் வருவார்கள் இல்லை, ஹெலிகாப்டரில் பறப்பார்கள்.
கட்சியின் இளைஞரணி தலைவர் மணிவிழா கொண்டாடுவார். தக்காளி இளைஞர்கள் எல்லாம்
போஸ்டர் ஓட்டுவார்கள்.
இதைவிட கொடுமை வயதானவுடன்தான் ஒரு முதிர்ச்சி
ஏற்பட்டு மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பார்கள் என்பது இயற்கை. ஆனால்
இங்கு கதையே வேறு, இல்லாத வழக்குகளை எல்லாம் போட்டு பழிவாங்கும் படலம் அரங்கேறும்.
கோபதாபமெல்லாம் நம்முடைய தலைவர்களுக்கு அறுபது வயதுக்கு மேல்தான் பீறிட்டு
கிளம்பும். கிறுக்குத்தனமாக பேசுவார்கள். ஜாதி வெறி அவர்கள் பேச்சில் தலைவிரித்தாடும்.
மனசாட்சியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுத்தான் எந்த வேலையும் செய்வார்கள்.
இந்த விஷயத்தில் தமிழனை அடிக்க முடியாது.
தக்காளி அடுத்தவன் முன்னேறுகிறான் என்றாலும் சொந்த தம்பியே என்றாலும்
விடமாட்டார்கள்.
ஆனாலும் நாங்கள் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து
நில்லடா” என்று கூவிகினே டாஸ்மாக்கில் ரெண்டு கட்டிங்கு வுட்டு போய்க்கினே
இருப்போம்.
1 comment:
வடக்கு வாழுது தெற்கு தேயுது ஹி ஹி ஹி ஹி ஹி
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.