கடந்த சில மாதங்களாகவே கூடங்குளம் அணுமின்
நிலையம் வைத்து எத்தனையோ போராட்டங்களையும், நிபுணர்குழு அறிக்கைகளையும், அரசியல்
கட்சிகளின் கும்தலக்கா கூத்துக்களையும் நாடே கவனித்து கொண்டிருக்கிறது.
இதனுடைய முடிவு ஏற்கனவே எழுதப்பட்டதுதான் என்பது
நமக்கும் போராட்டக்காரர்களுக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் தெரிந்ததே. ஆனால்
யாரும் முடிவு தெரியாதது போல் காட்டிகொள்வதுதான் நாடகத்தின் உச்சகட்டம்
மாநில அரசு முதலில் அரசியல் காழ்ப்புணற்சிகளுக்கு
வடிகாலாக இது ஏதோ மத்திய அரசின் வேலை எங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல்
நடித்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆதாயம் தேட போராட்டக்காரர்களுடன் அரசு
உடனிருப்பதுபோல் காட்டிக் கொண்டு தற்பொழுது அவர்களை அடக்க தன்னுடைய சுய முகத்தை
காட்டுகிறது. இப்பொழுது நாட்டின் மின் பற்றாக்குறைக்கு “எதை தின்றால் பித்தம்
தெளியும்” என்ற நிலைக்கு இன்றைய ஆளும்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில்
மின்வெட்டை அடியோடு நிறுத்துவேன் என்று உதார் விட்டு இப்பொழுது உண்மை நிலை அறிந்து
எதை வேண்டுமென்றாலும் செய்ய அரசு காத்துக்கொண்டிருக்கிறது.
போராட்டக்காரர்களுடன் அரசு நடத்திய
பேச்சுவார்த்தை நாடகத்தின் நகைச்சுவை காட்சி. எல்லோரையும் கூப்பிட்டு வைத்து நிபுணர்
குழு அறிக்கையில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறுகிறது. ஆகையால் போராட
வேண்டாம் என்று கூறி தற்பொழுது காவல் படையை கூடங்குளத்தில் நிறுத்தி அணு மின் நிலையம்
திறக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.
இந்த முடிவு எதிர் பார்க்கப்பட்டதே. ஆனால்
கேட்கிறவன் கேனையன் என்ற ரீதியில் மக்களை மாக்களாக நினைத்து செயல்படும்
அரசாங்கங்களை என்னவென்று சொல்வது?
5 comments:
அருமை. உங்களது கருத்துதான் என்னுடைய கருத்தும் கூட. கிளைமாக்ஸ் தெரிந்த நாடகத்தில் ஏன் இத்தனை கூத்துகளோ தெரியவில்லை?! எரிச்சலா இருக்கு சகோ. அருமையான பகிர்வுக்கு நன்றி.
இந்த முடிவு எதிர் பார்க்கப்பட்டதே. ஆனால் கேட்கிறவன் கேனையன் என்ற ரீதியில் மக்களை மாக்களாக நினைத்து செயல்படும் அரசாங்கங்களை என்னவென்று சொல்வது? !/////
நியாயமான ஆதங்கம்! மக்கள் என்னதான் பன்ண முடியும்?
ஜனநாயகம்....!!!....??
முற்றும் என்றும் 'தொடரும்'தான் ..... அடுத்த தேர்தல் வருமே!
siriyathana katturaiyaga irunthalaum niraivana katturai.....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.