Tuesday, 24 April 2012

கலக்கல் காக்டெயில்-68


அண்ணன் என்னடா தம்பி என்னடா  

 

சமீபத்தில் தளபதி இளைஞர் அணியில் புதிய உறுப்பினர் சேர்க்க மதுரை சென்றதும் அங்கு அவரை உடன் பிறப்புகள் புறக்கணித்ததும், அண்ணனின் உத்தரவும்  செய்தியானது. கழகத்தில் உள்ள பங்காளி சண்டை இப்பொழுது உச்சகட்டத்தை நெருங்குகிறது.

ஐயாவிற்கு ஏற்கனவே பதவி போனதில் இழந்த நிம்மதி இப்பொழுது மோசமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தில் அவர் ஆறுதல் கொள்ளலாம், துணைவியார் மகள் சிறைக்கு சென்று திரும்பியதில் கட்சிப் பதவி நச்சரிப்பு சற்று அடங்கியிருக்கும்.

கட்சியை வளர்த்த எத்தனையோ தொண்டர்களும், ஏன் கூடவே இருக்கும்   எத்தனையோ சீனியர்கள் இருக்கும் பொழுது அவர்களின் அபிப்ராயங்கள் கேட்கலாம்  இல்லை கட்சியிலேயே ஒரு தேர்தல் வைத்து அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கலாம். அதை விட்டு வாரிசு யாரென்று அறிவிக்காமல் வாரிசுகள் அடித்துக்கொள்வதை காணுவது கொடுமை.

எப்படியோ யாராவது ஒருத்தர் வாக்கிங் சென்று கதைக்கு முற்றுப்புள்ளி வையுங்கப்பா...........

அக்காள் தங்கை

பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மல்லிகார்ஜுனையாவை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடமாக இழுத்தடிக்கும் வழக்கை இன்னும் இழுத்தடிக்க ஆவணங்கள் கொடுங்க, படித்துப்பார்க்கனும், கிழித்துப் போடணும் என்று கேட்பதெல்லாம் ரொம்ப டூ மச். இதை ஏதோ எதிர்கட்சி போட்ட பொய் வழக்கு என்று எடுத்துக் கொள்ள முடியாது. வழக்கில் முகாந்திரம் இருந்ததால் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அம்மாவுக்கே தான் செய்த தவறுகள் தெரியும்.
ஆனால் மக்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அம்னீஷியா வரும், அதை நம்பித்தான் இவர்கள் பொழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

நல்லாசிரியையுமாய்

செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த ஆசிரியை “குமுதுவின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, அதை வாசித்த நீதிபதி மாணவனை தனது சொந்த இச்சைக்காக வசியப்படுத்தி ஆசிரியர் தொழிலுக்கு களங்கம் செய்துவிட்டார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிரியை அதை உணருவதாக தெரியவில்லை. டில்லியில் பிடிபட்டு சிறையில் அடைத்த பின்னும் அந்த மாணவனையே கைப்பிடிப்பேன் என்று கூறுபவர், எந்த மனநிலையில் இருக்கிறார் என்று புரியவில்லை.

ரசித்த கவிதை
காதல் அல்ல
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

--------------------வீரமுத்ரன்


இந்த வார ஜொள்ளு  




24/04/2012

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 19 April 2012

கடவுள் வாழ்த்து


பெரும்பாலான பள்ளிகளில் கடவுள் வாழ்த்து பாட்டுடன்தான் பள்ளி தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் குரானிலிருந்து ஒரு பகுதி ஓதியவுடந்தான் வகுப்புகள் தொடங்குகின்றன. பிள்ளைகள் ஸ்கூல் பஸ்ஸை தவற விட்டுவிட்டால் அலுவலகம் செல்லுமுன் அவர்களை பள்ளியில் விடும்பொழுது தவறாமல் கதவு வாசலில் நிறுத்தப்பட்டு கடவுள் வாழ்த்து முடிந்தவுடந்தான் பள்ளியில் அனுமதிப்பார்கள்.

அந்த நேரங்களில் என் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். காலையில் முதல் மணி அடித்தவுடன் நான் படித்த ஆரம்பப்பள்ளியில் கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவ மாணவிகள் கடவுள் வாழ்த்து தொடங்குவோம். அதனுடைய வார்த்தைகள் இன்னும் எனக்கு பிடிபடவில்லை. “சித்தி புத்தி சத்தி விநாயக ஜெயப் பணிந்தோமே” என்று தொடங்கி சாரதாதேவி என்று எல்லா கடவுள்களையும் அழைத்து விடுவோம். இன்று வரை அது என்ன “ஜெயப் பணிந்தோமே” அல்லது “செயல் பணிந்தோமேவா” என்பது தெரியாது. ஆனாலும் எட்டாம் வகுப்பு வரை அதை கும்பலோடு கோவிந்தா எனப்பாடி எப்படியோ ஏதோ படித்து தப்பித் தவறி தேறி மத்திய கிழக்கு நாடுகளில் ஆனி பிடுங்க வந்தாச்சு.

உயர் நிலைப் பள்ளி வந்தவுடன் கடவுள் வாழ்த்து சமஸ்க்ரிதத்தில் தொடங்கி தமிழில் முடிப்போம். அதில் வந்த “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி துய்ப்பதும் வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்ற பாட்டுக்குத்தான் ஓரளவு பொருள் தெரிந்து பாடியிருக்கிறோம்.

கல்லூரி வந்தவுடன் பகவத்கீதையிலிருந்து ஒரு செய்யுளை ஆடியோவில் தட்டி விடுவார்கள். கல்லூரி படித்த நான்கு வருடத்தில் அதை நாற்பது முறை கேட்டிருந்தால் அது ரெகார்ட். அதற்கும் அர்த்தம் தெரியாது.

தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்ற நூல்களில் உள்ள அருமையான தமிழ் பாடல்களை விட்டு ஏன் வடமொழியில் புரியாத பாடல்கள் கடவுள் வாழ்த்தாக பெரும்பாலான பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

அரசு நிகழ்ச்சிகளில் பாடும் “நீராருங்கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்”  என்ற தமிழ் தாய் வாழ்த்துதான் எனக்கு பிடித்த கடவுள் வாழ்த்து.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 16 April 2012

மின்வெட்டு அதிகரிக்குமாம்...............அம்மா சொல்றாங்க


வெளிமாநிலங்களிலிருந்து வாங்கும் மின்சாரக் கட்டணத்தை மத்திய மின்சார ஒழுங்குத்துறை உயர்த்தியுள்ளது. இதனால் பாதிக்கப் படுவது தமிழகம் ஆதலால் அந்த கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு அம்மையார் “மண்ணு மோகனு சிங்குக்கு” கடிதம் எழுதியுள்ளார்கள் (இரண்டு கட்சித் தலைவர்களும் நல்ல கடிதம் எழுதுறாங்க,  எட்டாம் வகுப்பு நியாபகமோ?).

அவர் வழக்கம் போல அதை துடைத்துப் போட்டு விடுவார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கியவுடன் உற்பத்தியாகும் இரண்டாயிரம் மெகாவாட்டையும் தமிழகத்துக்கு தருமாறு ஒரு கடிதம் எழுதினாக அதுக்கே நாராயணசாமி கொடுக்கிறோம் கொடுக்க மாட்டோம் என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த மாத மின்சார கட்டண பில்லை பார்த்து தமிழகம் வாய் பொளந்து நிற்கிறது.

மேலும் இந்த மத்திய அரசின் மின் கட்டண உயர்வால் தமிழ் நாடு அரசு மேலும் முன்னூற்று ஐம்பது கோடி கொடுத்தால் தான் வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கிடைக்கும். இல்லை என்றால் இப்பொழுது இருக்கும் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.

ஆட்சி மாற்றம் கேட்டவர்களுக்கு இப்போ வருவதெல்லாம் வெறும் ட்ரைலர் தான். இன்னும் மெயின் பிக்சர்ல இருக்குது.
எல்லாவற்றுக்கும் போன ஆட்சியை காரணம் கூறி சட்ட சபையில் கூவுவார்கள். ஆக மொத்தம் இரண்டு கழகங்களும் சேர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்காததுதான் காரணம் என்று இருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

எப்போ விடியுமோ?

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 15 April 2012

கலக்கல் காக்டெயில் -67


அஷ்டமத்து சனி

பிரிந்தவர்கள் அல்லது பிரிந்தது போல நாடகமாடியவர்கள் மீண்டும் சேர்ந்தது பழைய செய்தி, ஆனால் பிரிந்ததற்கு காரணம் தோழிக்கு அஷ்டமத்தில் சனியாம் கூட இருந்தால் குமுறி குமுறி அடிக்கும் என்றுதான் இந்த நாடகமாம். இதையே சாக்காக வைத்துதான் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி கொள்ளை அடித்தவர்கள் ஒவ்வொருவராக வளைத்துப் பிடித்து உள்ளே போட்டனர். அதுகூட  உரிய கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கை என்று ஒரு பேச்சு. இப்பொழுது புதுக் கூட்டம் சேர்த்து அடிப்பாய்ங்களோ.

ஆனால் இதற்கெல்லாம் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சப்பை கட்டு கட்டும் மெத்தப் படித்தவர் என்ன பதில் வைத்திருப்பாரோ?


மின் கட்டணம்

புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்தவுடன் நேற்றுதான் எங்கள் ஏரியாவில் மீட்டர் ரீடிங் எடுத்து பில் கொடுத்தார்கள். ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. நான்கு மணிநேர மின்வெட்டிலேயே இந்த கட்டணம் என்றால் நாள் முழுவதும் மின்சாரம் இருந்தால் பூவாவுக்கு லாட்டரி தான்.

அரசாங்கம் மின்வெட்டை அதிகமாக்க இதுதான் நேரம்.


தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு அரசாங்க விழாவில் அம்மா புளி வியாபாரி கதை சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றியது தி.மு.க. தலைவர்தான் என்று அரைத்த மாவையே அரைக்க, அவர் சும்மா இருப்பாரா, அவர் அவருடைய பங்குக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே தமிழ் மாதமாக வைத்திருக்கிறார்கள் என்று அம்மா சொல்ல, இவரோ இருபத்தியேழு நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர தமிழ் மாதங்கள் பெயரில்லை என்று நக்கலடிக்கிறார்.

இதில் யார் சொல்வது உண்மை?, யாராவது விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

ரொம்ப குழப்பறாங்க.


சும்மா சிரிப்பதற்கு ஒரு காணொளி





இந்த வார ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 14 April 2012

உயர்ந்த மனிதர்கள்


இந்த வார இந்தியா டுடே இதழில் “High and mighty” என்ற தலைப்பில் இந்தியாவில் ஐம்பது மனிதர்களை வரிசைப் படுத்தியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தமிழர்கள் வரிசையில்
12வது இடத்தில் ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர்.
21வது இடத்தில் சுப்ரமணிய சாமீ
26வது இடத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் ஏன். ஸ்ரீநிவாசன்.
34வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
37வது இடத்தில் வேணு ஸ்ரீநிவாசன், மல்லிகா ஸ்ரீநிவாசன்.
41வது இடத்தில் எ. ஆர். ரஹ்மான்.
49வது இடத்தில் கலாநிதி மாறன்.

இந்திய அரசியலில் முதல் பத்து (காரணங்களுடன்).

1.     சோனியா காந்தி (Mother Superior)
2.     பிரணாப் முகர்ஜி (Man of All Reasons)
3.     மன்மோகன் சிங் (The Survivor)
4.     மமதா பேனர்ஜி (Hurricane Express)
5.     முலயாம்சிங் யாதவ் (The Kingmaker)
6.     அருண் ஜெட்லி (The Great Communicator)
7.     நிதிஷ் குமார் (In Demand)
8.     ஜெ. ஜெயலலிதா (Southern Command)


9.     ராகுல் காந்தி (The Lost Prince)


10.   ப. சிதம்பரம் (Mr. Omnipresent)

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 12 April 2012

சுமத்ராவில் வருகிறாய்


சுமத்ராவில் வருகிறாய்
சும்மா சும்மா வருகிறாய்
சுழற்றி போட்டு அடிக்கிறாய்
சென்னையில் ஆட்டுகிறாய்
கடல் அலையை சீற்றுகிறாய்
உறங்கும் அரசை உசுப்புகிறாய்
எல்லாம் எமக்கு தெரியும்
உன் சீற்றம் முன்பறிவோம்
என்று இறுமாப்பு கொள்வோரை
அச்சமுற வைத்து
சடுதியிலே மறைகிறாய்
பண்பாடு விற்று
கொள்கைகளை காசாக்கி
நலிந்தோரை நசுக்கும்
நயவஞ்சகர்களை
இனம் கண்டு
இடமறிந்து  
நாசமாக்க
நாளையேனும்
அறிவிப்பின்றி வா

Follow kummachi on Twitter

Post Comment