Wednesday, 11 April 2012

கலக்கல் காக்டெயில் -66


நிலநடுக்கம், சுனாமி

இந்தோனேசியாவில் இன்று இந்திய நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சென்னைவரை அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாமல் தேவையில்லாத ஆணிபிடுங்கி களைப்படைந்து உட்காரும்பொழுதுதான் நண்பர்கள் சொன்னார்கள் நம்ம ஊரு ஆடிக்கிட்டு இருக்கு என்று. உடனே வூட்டுக்கு போன் செய்தால் “என்ன பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க, இங்கே நாங்கள் எல்லாம் தெருவில் நின்று கொண்டு இருக்கிறோம்”.

“வேறென்ன ஆணிதான், இப்பொழுதுதான் செய்தி கிடைத்தது அதான் போன் செய்தேன்”.

ஒன்றும் பிரச்சினை இல்லை என்றவுடன் நிம்மதியானது.

முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு கடலோர மக்களை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இதை பற்றி இப்பொழுது எல்லோரும் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு Better to be safe than sorry”.

ஆதலால் மக்களை எச்சரித்தது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே, இதற்கு வீண் விவாதங்களும் விமர்சனங்களும் தேவையில்லை.

எச்சரிக்கை விட்டபின்னும் கடலில் சிலர் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபொழுது “சுனாமியா தெரியும் ஸார், சுனாமி வரும் ஆனால் வராது” என்று வலை போட்டிருக்கிறார்கள்.

நல்ல தில்லுபா.

அதரப்பள்ளி

இந்த விடுமுறையில் கேரளா பக்கம் சென்றிருந்தேன். கொச்சின் விமான நிலையத்தில் இறங்கி குருவாயூர் செல்லும் வழியில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அதரப்பள்ளி (சாலக்குடி நீர் வீழ்ச்சி) அருமையான இடம். என்னை அசரவைத்தது அந்த இடத்தின் தூய்மை. நம்ம குற்றாலம் போலில்லாமல் வனத்துறையினர் அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ரொம்பவே உழைக்கிறார்கள்.

ஒரு இடத்தில் கூட பிளாஸ்டிக் குப்பையை பார்க்கவில்லை. அன்று சிறுவர்கள் நிறைய பேர் இருந்ததனால் நீர் வீழ்ச்சியும் அருகில் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு குளிக்க போய் தவறி விழுந்தால் அதோகதிதான். உடல் பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொள்ளுமாம், அதை மீட்பதற்காகவே வனத்துறையினர் சில ஆட்களை வைத்திருக்கிறார்கள்.

ரசித்த கவிதை

பெண்மைக்கு வணக்கம்


பெண்ணே உன்னால் பிறவி கொண்டேனே,
வளர்பிறையாய் நான் வளர,
தேய்பிறையாய் நீ மறைந்தாயோ?
இடைவெளியாய் இருளை நான் உணர,
தாரமாய் மீண்டும் வந்தவள் நீதானோ?
தாரம் தந்த இன்பத்தில்,
தலைமைகளை கொண்டேனோ?
என் தாயை மீண்டும் கண்டேனோ?
தரை தவழ்ந்த முதல்,
தலை நரைத்த வரை,
ஈன்ற தாயாய்,
ஈசனில் பாதியை,
ஈன்றெடுத்த மகளாய்,
பேரு கொண்ட பெண்மைக்கு,
என் தமிழை கொண்டு தலை வணங்குகிறேன்!

...................................................வித்தகன்

இந்த வார ஜொள்ளு






11/04/2012

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Madhav said...

பெண்மைக்கு வணக்கம்....
இந்த வார ஜொள்ளு ....

why this muran ???

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.