Tuesday, 24 April 2012

கலக்கல் காக்டெயில்-68


அண்ணன் என்னடா தம்பி என்னடா  

 

சமீபத்தில் தளபதி இளைஞர் அணியில் புதிய உறுப்பினர் சேர்க்க மதுரை சென்றதும் அங்கு அவரை உடன் பிறப்புகள் புறக்கணித்ததும், அண்ணனின் உத்தரவும்  செய்தியானது. கழகத்தில் உள்ள பங்காளி சண்டை இப்பொழுது உச்சகட்டத்தை நெருங்குகிறது.

ஐயாவிற்கு ஏற்கனவே பதவி போனதில் இழந்த நிம்மதி இப்பொழுது மோசமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தில் அவர் ஆறுதல் கொள்ளலாம், துணைவியார் மகள் சிறைக்கு சென்று திரும்பியதில் கட்சிப் பதவி நச்சரிப்பு சற்று அடங்கியிருக்கும்.

கட்சியை வளர்த்த எத்தனையோ தொண்டர்களும், ஏன் கூடவே இருக்கும்   எத்தனையோ சீனியர்கள் இருக்கும் பொழுது அவர்களின் அபிப்ராயங்கள் கேட்கலாம்  இல்லை கட்சியிலேயே ஒரு தேர்தல் வைத்து அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கலாம். அதை விட்டு வாரிசு யாரென்று அறிவிக்காமல் வாரிசுகள் அடித்துக்கொள்வதை காணுவது கொடுமை.

எப்படியோ யாராவது ஒருத்தர் வாக்கிங் சென்று கதைக்கு முற்றுப்புள்ளி வையுங்கப்பா...........

அக்காள் தங்கை

பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மல்லிகார்ஜுனையாவை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடமாக இழுத்தடிக்கும் வழக்கை இன்னும் இழுத்தடிக்க ஆவணங்கள் கொடுங்க, படித்துப்பார்க்கனும், கிழித்துப் போடணும் என்று கேட்பதெல்லாம் ரொம்ப டூ மச். இதை ஏதோ எதிர்கட்சி போட்ட பொய் வழக்கு என்று எடுத்துக் கொள்ள முடியாது. வழக்கில் முகாந்திரம் இருந்ததால் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அம்மாவுக்கே தான் செய்த தவறுகள் தெரியும்.
ஆனால் மக்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அம்னீஷியா வரும், அதை நம்பித்தான் இவர்கள் பொழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

நல்லாசிரியையுமாய்

செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த ஆசிரியை “குமுதுவின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, அதை வாசித்த நீதிபதி மாணவனை தனது சொந்த இச்சைக்காக வசியப்படுத்தி ஆசிரியர் தொழிலுக்கு களங்கம் செய்துவிட்டார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிரியை அதை உணருவதாக தெரியவில்லை. டில்லியில் பிடிபட்டு சிறையில் அடைத்த பின்னும் அந்த மாணவனையே கைப்பிடிப்பேன் என்று கூறுபவர், எந்த மனநிலையில் இருக்கிறார் என்று புரியவில்லை.

ரசித்த கவிதை
காதல் அல்ல
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

--------------------வீரமுத்ரன்


இந்த வார ஜொள்ளு  




24/04/2012

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

முத்தரசு said...

காக்டெயில் சும்மா குப்புன்னு ஏறுது

சீனு said...

//எந்த மனநிலையில் இருக்கிறார் என்று புரியவில்லை. //

ஹா ஹா ஹா காமெடி கீமெடி பன்னவேனான்னு சொல்லுங்க

வழக்கம் போல கலக்கோ கலக்கல் தான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படியோ யாராவது ஒருத்தர் வாக்கிங் சென்று//

குசும்பு சார் உமக்கு...!!

, நம்மளை வாக்கிங் போகவெச்சு.
. தற்கொலை பண்ண வைக்காம இருந்தா சரி இந்த மகா அவதார புருஷர்கள்..!!!

:-)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.