ஜெயா டிவியில் எப்பொழுதும் மொக்கை படம்தான்
போடுவார்கள். ஆனால் ஒரு மாறுதலுக்காக நேற்றைய தினம் மதியம் ரஜினியின் பழைய படம்
போட்டார்கள். ஆணிபிடுங்கும் வேலை
இல்லாததால் வீட்டிலேயே முடங்கி மப்பு ஏற்றி மல்லாக்க படுத்திருக்கும் பொழுது “எங்கேயோ
கேட்ட குரல்” படத்தை முதல் முறையாக முழுவதும் பார்த்தேன். இந்த படத்தை இத்தனை நாள்
எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை.
ரஜினியின் படங்கள் நான் எதையும் தவறவிட்டதில்லை
இந்தப் படத்தை தவிர.
எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் ஒரு நல்ல படம்.
“புவனா ஒரு கேள்விக் குறி” கிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் தள்ளுமுல்லுவில்
டிக்கெட் வாங்கி பார்த்த நியாபகம். அப்பொழுதே எஸ்.பி.முத்துராமன் அந்தப் படத்தில் ரஜினிக்கு
ஒரு நல்ல ரோல் கொடுத்திருப்பார். அந்த வகையில் ஒரு வித்தியாசமான கேரக்டர் எங்கேயோ
கேட்ட குரலிலும்.
கதை முக்கோண காதல் கதைதான். ரஜினிக்கு சிகரெட்டை தூக்கிபோட்டு ஸ்டைல்
காட்டுவது, எகிறி எகிறி பத்து பேரை அடிப்பது, பஞ்ச் டையலாக் ஒன்றும் கிடையாது.
விவசாயி வேடம். அமைதியான கேரக்டர். மிகவும் அடக்கிவாசித்திருப்பார்.
படத்தின் கடைசியில் அம்பிகா சாகக்கிடக்கும்
பொழுது ரஜினி அவரை பார்க்க அவர் வீட்டுக்கு செல்கிறார். அப்பொழுது அவருடன்
பேசும்பொழுது ரஜினியின் முகபாவங்கள் அருமை.
ரஜினியின் அருமையான அமைதியான நடிப்பை பார்க்கும்பொழுது ஒரு நல்ல கலைஞனை தமிழ்
திரையுலகம் சரியாக உபயோகித்துக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்து அவரை
வளர்த்தது “வளர்ச்சியா வீழ்ச்சியா” என்று தெரியவில்லை.
3 comments:
அருமையான நடிப்புங்க...
இந்தக்கால கட்டத்தில் வந்த அனைத்து ரஜினி படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்....
போன வெள்ளி யன்று ஜெயா டிவியில் பார்த்த ஞாபகம்....
நானும் பார்த்து ரசித்த ரஜனி அவர்களின் நல்லதொரு படம் !
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.