சட்டசபையில் இன்று உள்ளாட்சி மானிய கோரிக்கை
மீதான விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர் விஜய பாஸ்கர் ஒரு கதை சொன்னாராம்.
சத்தியமா இந்த கதைக்கும் உள்ளாட்சி மானியத்திற்கும் ஒரு ........று சம்பந்தமும்
கிடையாது. அவர் சொன்ன தக்காளி கதை இதுதான்.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட
கோபுரத்தை ஒரு டிப் டாப் ஆசாமி தாங்கிப்பிடித்துக் கொண்டு நான்தான் இதற்கு
முட்டுக் கொடுத்திருக்கிறேன் இல்லையென்றால் விழுந்துவிடும் என்று கூறினானாம்.
ஆனால் நேரில் சென்று பார்த்தவர்கள்
அவனே நிற்கும் நிலையில் நிதானமாக இல்லை ஆதலால் அதை நம்பவில்லை.
இது வரைக்கும் இது வெறும் கதைதான். ஆனால்
விஜயகுமார் இந்தக் கதைக்கு ஒரு புதிய க்ளைமாக்ஸ் கொடுத்ததுதான் அடுத்து சட்டசபையில்
வந்த அமளி துமளிக்கு காரணம்.
யாரும் முட்டுக் கொடுத்ததால் அல்ல
நாங்கள் விட்டுக்கொடுத்ததால் தான் அவர்களுக்கு 29 இடங்கள் கிடைத்தது.
இதற்கு தே.மு.தி.க உறுப்பினர்கள் எதிர்ப்பு
தெரிவிக்க அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். யாரை குறிவைத்து இது எய்தப்பட்டது
என்பது நான்றாகவே யாவருக்கும் தெரியும்.
நாட்டில் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் குடிக்கிறாரா?
இல்லையா? என்பதுதான் மக்கள் பிரச்சினை.
ஏற்கனவே மக்கள் இந்த ஆட்சி வந்தவுடன் பட்டுக்
கொண்டிருக்கும் துன்பங்கள் ஏராளம். சட்டசபையில் அதைப் பற்றி யாவருக்கும் விவாதம்
செய்ய மனது இல்லை. நான் மெத்தப் படித்த முதல்வர் என்று கூறிக்கொண்டு இதையெல்லாம்
ரசித்துக் கொண்டிருக்கும் கேவலத்தை என்ன சொல்வது?
தக்காளி மக்கள் தேர்தலில் விட்டுக்கொடுத்து முட்டுக்
கொடுத்ததானால்தான் சட்டசபையில் வருமான வரி இல்லாத சம்பளம் வாங்கிக்கொண்டு
கும்மியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இருக்குடி உங்களுக்கு, ஐந்து வருடத்திற்கு ஒரு
முறை ஆப்பு.
3 comments:
GOOD.....
வருகைக்கு நன்றி பாஸ்
அது மட்டுமல்ல குடிப்பதே ஒரு சமுதாய கேடாய் சித்தரிக்கும் இவர்கள் மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக்கை திறக்கிறார்கள். என்ன ஒரு முரண் நகை!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.