Pages

Friday, 11 May 2012

வழக்கு எண் 18/9


சென்னைக்கு நான்கு நாட்களுக்காக அவசர வேலையாக வரும்பொழுது சினிமா பார்ப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் இந்த முறை வரும்பொழுது “வழக்கு எண்” எப்படியும் பார்த்து விடவேண்டும் என்று முடிவோடுதான் வந்தோம். காரணம் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் வலைப்பூவில் நிறைய வந்து பார்க்க வேண்டிய படம் என்று கட்டியம் கூறியதால் இன்று எக்ஸ்பிரஸ் அவென்யுவில் மனைவி, மகள் சகிதமாக படம் பார்த்தேன்.

முதலில் படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வழக்கமான மசாலா, அரைத்த மாவையே அரைப்பது என்று இந்திய சினிமா பாணியிலிருந்து சற்றே விலகி நல்ல திரைக்கதை அமைத்து தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று சொல்லியிருக்கிறார். படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது, ஆனால் அது நிறைகளின் முன் தோற்றுப் போகிறது.

படத்தில் மனதை நெகிழ வைத்த இடங்கள் பல இருந்தாலும், மிகவும் பார்ப்பவரை நெகிழச் செய்வதில் “சின்ன சாமியாக”  வரும் சிறுவனின் பங்கு அபாராம். பாலாஜி சக்திவேல் ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் நிறுத்தி நிதானமாக செதுக்கி இருக்கிறார்.

படத்தில் பின்னணி இசை உறுத்தாத விஷயம். கார்த்திக் பாடும் ஒரே பாட்டும் படத்தில் சரியான இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் இன்ஸ்பெக்டர் கையேந்திபவன் பையனையும், ஸ்கூல் பெண்ணையும் விசாரிக்கும் விதத்திலேயே அவருடைய கேரக்டர் கோடி காட்டப்படுகிறது.

படத்தின் முடிவில் இயக்குனரின் தடுமாற்றம் புரிகிறது. கையேந்தி பவன் பையன் சிறைக்கு செல்லும் பொழுதே படம் ஏறக்குறைய முடிவடைந்து ஒரு முழுமை பெற்று விட்டது. அதற்கு பிறகு வருவதெல்லாம் சமுதாயத்திற்காக எடுக்கப்பட்ட (நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது....) சப்பைக் கட்டுகள்.

தமிழ் சினிமா அவ்வப்பொழுது இது போன்ற குறிஞ்சி மலர்கள் பூப்பதால் தான் இன்னும் கதையே கதாநாயகன், கதாநாயகி என்ற உண்மையை கூறிக்கொண்டிருக்கின்றன.

படம் முடிந்தவுடன் அரங்கத்தில் எல்லோரும் கைதட்டினார்கள். பாலாஜி சக்தில்வேல் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
10/05/2012

3 comments:

  1. சின்ன சாமியாக இந்தப் பையனை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்த்தது "யோவ் நீ உண்மைய சொல்லிருவையா அதன் நா அப்டி சொன்னேன், உன்ன விட்ட எனக்கு யாருயா இருக்காங்க". இதைக் கேட்கும் பொழுது கண்கள் கலங்கி விட்டன.

    படத்தில் பல இடங்களில் அரங்கமே கைதட்டியது. முடிவில் எழுந்து நின்று கைதட்டியது.

    உங்கள் விமர்சனமும் அருமை.


    படித்துப் பாருங்களேன்


    சென்னையில் வாங்கலாம் வாங்க

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சீனு.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.