Pages

Tuesday, 15 May 2012

கலக்கல் காக்டெயில்-71


கலப்புத் திருமணம் செய்தால்.................... 
பா.ம.க நடத்திய மாநாட்டில் ஜாதிவெறி தலை விரித்து ஆடியது. ஒரு புறத்தில் ஜாதிகள் ஒழிக்கப் படவேண்டும் என்று கூறிக்கொண்டு மற்றொரு புறத்தில் ஜாதி வெறியை தூண்டுவதில் இந்த அரசியல் கட்சிகள் ஆடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை. வன்னியர் பெண்கள் கலப்புத்திருமணம் செய்தால் வெட்டிவிடுங்கள் என்று கொஞ்சம் ஓவராவே தன் ஜாதி வெறியை காண்பித்திருக்கிறார் காடுவெட்டியார். எத்தனை பெரியார் வந்தாலும் ஜாதியை அழிக்க முடியாது.

ராஜா ஜாமீனில் வெளியே
கிட்டத்தட்ட பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ராஜா திஹாரிளிருந்து வெளியே வருகிறார். கனிக்காக ஜாமீன் மனு செய்யாதிருந்த ராஜா ஒரு வழியாக மனு செய்து ஜாமீன் பெற்றிருக்கிறார். வாழ்க அவரது விசுவாசம். இனி என்ன வழக்கை நீத்துப்போக செய்ய எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். 

ஐ.பி.எல் என்று ஒரு டுபாக்கூர்
ஐ.பி.எல் என்ற டுபாக்கூர் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் என்று ஏதோ செய்தி போட்டிருக்கிறார்கள். இந்தப் போட்டி தொடங்கிய நாளிலிருந்து பிக்சிங்கில் தான் ஓடுகிறது எனபது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட தெரியும். இந்த மேட்சுகளை பார்ப்பதற்குப்  பதில் சுவற்றுக்கு வெள்ளை அடித்து அதை காய்வதை வேடிக்கைப் பார்க்கலாம்.

ரசித்த கவிதை
உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்

எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?

உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்

நின்று விடாதே
திரும்பிப் பார்

வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...

                                                            ...
சஞ்சு



இந்த வார ஜொள்ளு (கோடை ஸ்பெஷல் 2)






15/05/2012

6 comments:

  1. என்னாதிது ரண்டு கீது ஜொள்ளு ஹி ஹி

    கவிதை கவிதை

    ஏங்கண்ணா ஹி ஹி எப்ப புரியும் மக்களுக்கு IPL.

    தி மு க ...ம்

    பா ம க ரொம்பவே ஓவருய்யா

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி மனசாட்சி

    ReplyDelete
  3. தங்கள் ஜாதி மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பவர்கள் ஏன் மற்ற சாதியினர் இடம் ஓட்டு பிச்சை கேட்கின்றனர் ..

    ReplyDelete
  4. ஜொள்ளு படம் ஓவர் இதை பார்த்து என்னை போல உள்ள சின்ன பையனுங்கள் கெட்டுபோவார்கள் ..( இதை தனியாக என் மெயில்க்கு அனுப்பவும் ஹீ ஹீ )

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ராஜா. ஸார் படம் வேண்டுமென்றால் கட்டண சேவையில் அனுப்பப்படும்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.