சமத்துவ சொம்படிக்கும் சரத்து
சமத்துவ மக்கள் கட்சி தலைவர், தொண்டர், கொ.பா.செ ஆல் இன் ஆல் அழகு ராஜா தே.மு.தி.கவுக்கு
கிடைத்த இருபத்தொன்பது அம்மா போட்ட பிச்சை என்று சொல்லியிருக்கிறார். ஏம்பா இந்த
வசனத்தையே சட்டசபையிலிருந்து சந்து முனை வரைக்கும் திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்கீங்களே
உங்க சொம்படித் திருவிழாவுக்கு ஒரு முடிவே இல்லையா? எல்லாம் அடுத்த தேர்தல் வரைக்கும் தான். அம்மா கிட்டே என்ன எதிர் பார்க்கறீங்கன்னு சமயம் பார்த்து சட்டுபுட்டுன்னு சொல்லிப்போடுங்க. இல்லை என்றால் “அணிலு”க்கு கொடுத்த அல்வா தான் உங்களுக்கும்.
எட்டாத வானத்தின் ஒன்பதாவது சூரியனே...............
தலைவரின் பிறந்த நாளுக்கு தொண்டர்கள் வைத்த பிளக்சுகளில் இதுவும் ஒன்று. எட்டாத வானம் சரி அது, என்ன ஒன்பதாவது சூரியனே?
பிறந்த நாளுக்கு எதிர் பார்த்த அளவு கொண்டாட்டம் இல்லையாம். அது சரி குடும்பமே வாரிசு சண்டையில் குமுறிக்கிட்டு இருக்கும் பொழுது இதெல்லாம் ஒரு பெரிய கவலையா?
ரசித்த கவிதை
இடப்பெயர்ச்சி
ஆடு மாடு மேய்த்துக் கிடைபோட்ட மேய்ச்சல்
நிலங்கள்.
அடுப்பெறிக்க விறகு ஒடித்த
கருவேலங்காட்டு
புறம்போக்கு நிலங்கள்
ஆங்கிலேயன்
அடிமை வர்க்கத்திற்குத்
தந்துவிட்டுப் போன
பஞ்சமி நிலங்கள்
உழுது பயிரிட்டு
உண்டு வாழ்ந்த
நன்செய் நிலங்கள்
அனைத்தையும்
அபகரித்துக் கொண்டு
அந்நிய முதலாளித்துவம்
விளக்கம் சொன்னது
இது
கிராமத்தானை
நகரத்தானாக மாற்றும்
திட்டம் என்று.
உண்மைதான்
கிராமத்தான்
நகரத்தான் ஆனான்
மாநகரத்து நடைபாதையில்
உள்நாட்டு அகதிகளாக.
....................................... வெ.மதியரசன்
சொன்னாங்க
கச்சா எண்ணெய் விலை குறையும் பொழுது பெட்ரோல், டீசல் விலை குறையும்...........மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்...............%^& நோபல் பரிசுக்கு பரிந்துரை
இந்த வார ஜொள்ளு
04/06/2012
1 comment:
/// நோபல் பரிசுக்கு பரிந்துரை ///
இதைவிட அதிகமா வேற யாராலும் அசிங்கப்படுத்த முடியாது.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.