Saturday, 9 June 2012

கலக்கல் காக்டெயில்-74


ஐந்து ரூபாய்க்கு பெட்ரோலா

இந்த பெட்ரோல் விலையேற்ற திருவிழாவில் ஆ.வி. மூலிகை பெட்ரோல் ராமரை தேடிக் கண்டுபிடித்து பேட்டி எடுத்திருக்கிறார்கள்.
அவர் ஏற்கனவே பதிமூணு லட்சம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரித்து பதினேழு ரூபாய்க்கு விற்றாராம். இப்பொழுது ஏதோ புதிய மெசின் எல்லாம் வச்சிருக்கிராரம். அதுல பெட்ரோல் தயாரித்தால் லிட்டர் ஐந்து ரூபாய்க்கு கிடைக்குமாம்.

சாமீ அப்படி கிடைக்குமென்றால் எனக்கு ஒரு நாளைக்கு பத்து லிட்டர் குடுங்க போதும் ப்ளீஸ்.

சிதம்பரத்துக்கு வந்த சோதனை

மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை உள்துறை வேலையை ஒழுங்காக செய்ய விடமாடேங்குறாங்க. மாற்றி மாற்றி 2G ஊழல், தேர்தல் முறைகேடு என்று வழக்குமேல் வழக்கு போட்டு தாளித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பழைய காண்டில் அவரை எப்படியும் ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவோடதான் இருக்காங்க. எப்படியும் அடுத்த ஆண்டு சாதனைப் பட்டியலில் அவரை வீட்டுக்கு அனுப்புவதும் ஒரு சாதனையாக வரலாம்.

வாழ்க அரசியல்.

ராசா வந்தாரு

பதினைந்து மாதத்திற்கு பிறகு ஒரு வழியாக ராசா திஹார் சிறையிலிருந்து விடுதலையான பின் சென்னை வந்தடைந்தார். அவருக்கு உடன் பிறப்புகள் கொடுத்த வரவேற்பு பிரமிக்க வைத்தது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாய்ங்களோ?

இடுப்பை கிள்ளியது யாரு?

தலைவரோட பிறந்த நாள் விழா கூட்டத்தில் யாரோ அவிக இடுப்பை கிள்ளி தன் கை வரிசையை காண்பிச்சிட்டாங்களாம். தமிழ் நாட்டில் இப்பொழுது ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி கிள்ளியது யாரு? தான்.

நடிகைகள் பொது இடங்களில் வரும் பொழுது இனி மேலாவது புல் கவர் செய்வது உத்தமம். இல்லை என்றால் இப்படித்தான் எவனாவது சந்தில் சிந்து பாடுவான்.

ரசித்த கவிதை


உனக்கான கேள்விகள்
என்னிடத்திலும்
எனக்கான கேள்விகள்
உன்னிடத்திலும்
பதில் இல்லாமல்
பத்திரமாய்
பாதுகாக்கப்படுகின்றன...!

- பாளை.சுசி.


இந்த வார ஜொள்ளு 





09/06/2012

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

முத்தரசு said...

ம்.... எல்லாமே நச்

யாரு இந்த கருப்பு கட்டழகி

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி, பேரு ஜானவியாம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.