புதுக்கோட்டை பிரச்சாரம் ஒரு வழியாக
முடிவடைந்தது. அம்மா தன்னுடைய அமைச்சர் பரிவாரங்களுடன் போய் சூறாவளி சுற்றுப்பயணம்
செய்து அவரது “த்ராணி”யை நிரூபிக்க ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்துவிட்டார்.
தே.மு.தி.க இந்த முறை வேறு யாரும்
போட்டியிடாததால் தாங்கள்தான் பிரதான எதிர்
கட்சி நிலைமையை நிரூபிக்க வேண்டிய சூழ் நிலைமை. ஆனால் காலகாலமாக அரசியல்
கட்சிகள் முக்கியமாக திராவிட கட்சிகள்
செய்து வந்த தகிடுதத்தத்துக்கு “திருமங்கலம் பார்முலா” என்று பெயர் சூட்டப்பட்ட
பார்முலா கடை பிடிக்க அவர்களுக்கு இன்னும் வசதி வரவில்லை. இந்த பார்முலாவை ஏதோ
அழகிரிதான் கண்டு பிடித்ததாக அவருக்கு அந்தப் புகழ் சேர்ந்துவிட்டது. உண்மையில்
பார்க்கப்போனால் இந்த உத்திக்கு சொந்தக்காரர்கள் இரு கட்சிகளுமே. இதில் கொடுமை
மற்றைய கட்சிகள் இன்னும் ஆட்சிக்கு வந்து சம்பாதிக்கததால் அவர்களால் இந்த
பார்முலாவை கடைபிடிக்க இயலவில்லை.
சரி, புதுக்கோட்டைக்கு வருவோம். இதுவரையிலே மிக
அதிகமாக எழுபதி லட்சத்து என்பதாயிரம் ருபாய் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய
வைத்திருந்த பணம் தேர்தல் கமிஷனால் கைப்பற்றப் பட்டிருக்கிறது. ஒரு தொகுதி இடைத்
தேர்தலுக்கு இவ்வளவா? என்று ஆச்சர்யப் படவேண்டாம். மேலும் தேர்தல் முறைகேடில்
கிட்டத்தட்ட அறுபது வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் புதுக்கோட்டையில் பணப்புழக்கம்
சற்று அதிகமாகவே உள்ளதாக நகரவாசிகள் கூறுகின்றனர். டாஸ்மாக் நாளைக்கு முப்பது
லட்சம் வழக்கத்தைவிட அதிகமாக கலேக்ஷனாம். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.
இதற்கெல்லாம் பணம் அரசியல் கட்சிகளுக்கு
எங்கிருந்து வருகின்றது என்பதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயமே. எல்லா
நலத்திட்டங்களிலும் ஒப்பந்தக்காரர்கள் கொடுக்கும் கமிஷன். அதற்காகத்தானே விதம்
விதமாய் நலத்திட்டங்கள் தீட்டுகிறார்கள்.
போன ஆட்சியில் மெட்ரோ போட்டால் நான் மோனோ
போடுவேன் என்று மாற்றி மாற்றி திட்டம் போட்டு லவட்டுவார்கள். அவர்கள் அடித்த
கமிஷன் இவர்களும் பார்க்க வேண்டாமா.
ஆனால் இந்த இடைதேர்தலினால் ஒரு லாபம் உண்டு.
அம்மா தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்று
சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆசையில், கனவில்
கட்டிங் வுட்டு கவுந்து படுப்போம்.
வாழ்க இடைத்தேர்தல், வாழ்க டாஸ்மாக், வாழ்க
இலவசம், வாழ்க ஜனநாயகம்.
No comments:
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.