ஜுன் 24, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள். அவர் எழுதிய
எத்தனையோ பாடல்கள் இருக்க, பின் வரும் பாடல் ஓரு தனித்துவம் பெற்றது. அவருக்கே உரிய நக்கல் உணர்வில் எழுதியது.
பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” பாடலை எக்கால தமிழ்நாட்டிற்கும்
பொருந்துமாறு மாற்றி எழுதிய கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!
காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!
நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!
கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!
சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!
விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!
இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை
அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின்
தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!
10 comments:
எக்காலத்துக்கும் பொருத்தம் தான்
வருகைக்கு நன்றி நண்பா.
தமிழக சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டவர் :)
வருகைக்கு நன்றி.
அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி நண்பா !
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தனபாலன்.
அருமையான பகிர்வு! கண்ணதாசன் உண்மையிலேயே தீர்க்க தரிசிதான்!
வருகைக்கு நன்றி சுரேஷ்.
எனக்கு மிக பிடித்த கவிஞரை சரியாக பிறந்த நாளில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
மோகன்குமார் வருகை தந்தற்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.