தொலைகாட்சி பேட்டியாளர்: நேயர்களே உங்கள் அணைவருக்கும் இனிய நடு இரவு வணக்க்க்க்க்கம்.
நீங்கள் இதுவரை ஆவலோடு எதிர் பார்த்திருந்த பிட்டு பட தயாரிப்பாளர், இயக்குனர்,
நடிகர் “பிட்டு” பிரகாஷ் அவர்களின் பேட்டி
காண உங்களை ஜொள்ளுடன் வரவேற்கிறோம். வணக்கம் பிட்டு பிரகாஷ் அவர்களே, உங்களை நேயர்கள்
சார்பாக வரவேற்கிறோம்.
பிட்டு பிரகாஷ்: வணக்கம்
தொ.கா.பே: ஸார் உங்களுக்கு “பிட்டு பிரகாஷ்” என்று எப்படி பெயர்
வந்தது?, மேலும் உங்களுடைய சிறிய வயது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ள
முடியுமா?
பி.பி: சொல்றேன், எங்க அம்மாவுக்கு சொந்த ஊரு “பிட்” ரகுண்டா,
அங்கே தான் அப்பாவும் ஜாக்கெட் “பிட்டு” கடை வைத்திருந்தார். அவர்களுக்கு நான் ஒரே
மகன் நான் பிறக்கும் பொழுது “பிட்டு” துணிகூட இல்லாமல் பிறந்ததனால் எனக்கு அம்மா
ஆசையாக “பிட்டு பிரகாஷ்” என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது தெரியாது இந்த “பிட்டு”
என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு தொடரும் என்று.
தொ.கா.பே: உங்களுடைய பள்ளிப் படிப்பை பற்றி சொல்லுங்க.
பி.பி: அதை என் கேட்கறீங்க நான் எல்.கே.ஜி படிக்கும் பொழுது
அன்டிராயரை உருவிடுவேணாம்.
தொ.கா.பே: யாருது? உங்களுடையதா?
பி.பி: இல்லை பக்கத்து பிள்ளைகளுடையதை. ஆதலால் டீச்சருங்க
எல்லாம் உஷாரா இருப்பாங்களாம். அடிக்கடி அப்பாவிடம் புகார் கொடுப்பாங்களாம். அதனால
அங்கேயே எனக்கு “பிட்டு” உணர்வு இருந்திருக்கு.
தொ.கா.பே: ஸோ அப்பவே உங்களுக்கு “பிட்டு” பட எண்ணம், கனவு எல்லாம்
வந்திடுச்சின்னு சொல்லுங்க.
பி.பி: ஆமாம், பின்னர் நான் பள்ளி பரீட்சை எல்லாம் முதல்
ரேங்கில் பாஸ் செய்தேன்.
தொ.கா.பே: அப்படியா அவ்வளவு நல்ல படிப்பீங்களா.
பி.பி: அட நீங்க வேறே, அதெல்லாம் ஒன்றும் இல்லை நல்லா “பிட்டு”
அடிப்பேன்.
தொ.கா.பே: ஸார் உங்களுக்கும் “பிட்டு பிந்து”வுக்கும் காதல் என்று
பேச்சு அடிபடுகிறதே, உங்களுடைய காதல் பற்றி சொல்லுங்க.
பி.பி: அது ஒரு பெரிய கதைங்க. நான் கல்லூரியில் படித்துக்
கொண்டிருக்கும் பொழுது ஒரு பரீட்சைக்கு “பிட்டு” தயாரிக்க நண்பனை பார்க்க சென்று
கொண்டிருந்தேன். அப்போ ஒரு சந்தில இந்த “பிந்து”வை
பார்த்தேன். அவங்க ஒரு “பிட்டு” துணி கட்டியிருந்தாங்க அடாடா அதை பார்த்தவுடனே எனக்கு
ஒருமாதிரி ஆகிடுச்சு. சரின்னு அவங்க கிட்டே ஒரு “பிட்”டை போட்டேன். அது வொர்க்
அவுட் ஆகி இவ்வளவு தூரம் வந்து விட்டது.
தொ.கா.பே: சரி ஸார் உங்கள் முதல படம் “சந்திலே சிந்து பாடிய பிந்து”
பற்றி உங்கள் அனுபவங்களை சொல்லுங்க.
பி.பி: அந்த கதை என் உள்ளே ரொம்ப நாளா ஊறிக்கிட்டு இருந்தது. நான்
ஒன்னும் புதுசா எதுவும் அந்தப் படத்தில் சொல்லவில்லை. இப்போ நாட்டில சாமியார்களும்
மடத்தில் நடக்கும் சமாச்சாரங்களையும் என்னோட பாணியில் சிறிது மாசாலா தடவி “பிட்டு
பிட்”டா விட்டேன் அவ்வளவுதான்.
தொ.கா.பே: அதுல வர அந்த சாமியார் சொல்லுகிற பன்ச் டயலாக் ரொம்ப
சூப்பர் ஸார்.
பி.பி: ஆமாம், ஏண்டா “பிட்டு
பிட்டு”ன்னு கேவலமா சொல்லுறீங்க, ஆனானப்பட்ட ஆலால கண்டனே “பிட்டு”க்கு மண்
சுமந்தவர் தானே என்ற அந்த வசனம் ரொம்ப பேமஸ் ஆயி ஹிட்டாகி, இன்னிக்கி “பிட்டு”
படம் பார்க்கிற ரசிகர்கள் அதை எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
தொ.கா.பே: ஆமாம் ஸார் அதிலே சாமியார் “குக்கி”யை பற்றி சொல்லும்
பொழுது கூட அப்படியே ரசிகர்கள் உற்சாகமா கைதட்டினாங்க.
பி.பி: ஆமாம் அந்த வசனம் அந்த இடத்தில் ரொம்ப தேவை என்றுதான்
வைத்தேன், அவரை காவலர்கள் நடிகையுடன் தொடர்பை பற்றி விசாரிக்கும் பொழுது, சாமியார்
இதெல்லாம் என்ன பெரிய விஷயம் நான் வரும் பக்தைகளிடமும் சந்திலே சிந்து
பாடியிருக்கிறேன் அதான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே “குக்கி’ அதான் என்பார்,
அந்த வசனம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொ.கா.பே: உங்களுடைய அடுத்த படம் என்ன என்று சொல்ல முடியுமா
பி.பி: அடுத்த படம் பெயர் “ஒரு பிட்டு ஒரு பிந்து” அதாவது ஓ.பி.ஓ.பி.
படம் “பிட்டு பிட்டா” நல்லா வந்துகிட்டு இருக்கு. படம் பிட்டு பட
சரித்திரத்தையே மாற்றி எழுதும் என்பது பிட்டின் மீது சத்தியம். இந்தப்
படத்திற்கு கதை வசனம் எல்லாம் நானே. இந்தப் படத்தில் நான் இன்னும் ஒரு வேலை
எக்ஸ்ட்ராவா செய்கிறேன். படத்திற்கு காஸ்ட்யூமும் நானே செய்கிறேன், அதற்காக நாலு கர்சீப் டிசைன் செய்திருக்கேன்.
அதுதான் ஹீரோயின் போடுவாங்க. இதில் பிட்டு பிந்துவிற்கு நல்ல பெயர் கிடைக்கும்
என்பதில் பிட்டளவும் சந்தேங்கமில்லை.
தொ.கா.பே: ஸார் ரொம்ப நன்றி இதுவரை எங்களது கேள்விகளுக்கு பிட்டு
பிட்டாக பதில் அளித்தீர்கள், நேயர்கள் சார்பாக வி பிட் டு செ பிட் பை
பி.பி: பிட் பை, பிட் நைட்.
10 comments:
ஹா ஹா பிட்டு பிட்டு வச்சிடீயலே.
படம் இரண்டும் அழகு
மனசாட்சி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
சூப்பர் காமெடி! பகிர்விற்கு நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
nice post
வருகைக்கு நன்றி.
SEMA BITTU MAAMU..
வருகைக்கு நன்றி ஹாரி.
Nice .. super hot ......
ஸ்வீட்டி வருகைக்கு நன்றி
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.