Friday, 22 June 2012

தொழில்நுட்ப பதிவர்களுக்கு நன்றி


முதன் முதலில் என்னுடைய வலைப்பூ தொடங்கி கிட்டதட்ட ஒரு நான்கு மாத காலம் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை வேறு நல்ல உச்சகட்டத்தை அடைந்த காலம். அதைப் பற்றி சூடான  இடுகைகள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் பார்த்தால் ..த்தா என் வலைப்பூவை காணவில்லை.

அடடா என்ன ஆச்சு, மவனே ராஜபட்சே பன்னிதான் என் வலைக்கு ஆப்பு வச்சிட்டான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். பின்னர் நைஜீரியா ராகவன் யோவ் அது பிரச்சினை இல்லையா, உன்னோட டெம்ப்ளேட்ல ஏதோ கோக்குமாக்கு ஆயிடுச்சி அதை முதலில் செக் பண்ணு என்றார். நமக்கு டெம்ப்ளேட் எல்லாம் தெரியாது சாப்பாடு ப்ளேட் தெரியும், நம்பர் ப்ளேட் தெரியும். இதென்னடா வம்பா போச்சி என்று கூகிளாண்டவரிடம் முறையிட்டேன். அவரோ என்னால் ஒன்னியம் பண்ணமுடியாது விஷயம் எமனிடம் போயிடுச்சி என்றார்.
புட்டுக்கிச்சு

பிறகு ஒரு புதிய வலைப்பூ வேறே பெயரில் (குறுக்கே தேவையில்லாத எழுத்தெல்லாம் போட்டு) தொடங்கினேன். பழைய இடுகைகளை தேடிக்கண்டு பிடித்து மீள் பதிவாக போட்டேன். இருந்தாலும் பழைய வலைப்பூவில் இருந்த முப்பதாயிரம் ஹிட்சும் ஒரு நூற்றைம்பது பின்தொடர்பவர்களும் புட்டுக்கின்னு கோவிந்தாவாயிடிச்சி.
சரி இனி விஷயம் தெரியாம டெம்ப்ளேட் பக்கம் போகக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். 
கவலை வேண்டாம், நான் இருக்கேன் மாமு.

வந்தேமாதரம் சசிகுமார்
அப்பொழுதுதான் நமக்கு ஆபத்பாந்தவனாக வந்தார் நம்ப வந்தேமாதரம் சசிகுமார். இவருடைய வலைப்பூவை பின் தொடர்ந்து பார்த்து என் வலைப்பூவில் சிறு சிறு நகாசு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். அந்த விஷயத்தில் எனக்கு இதில் தொழில்நுட்பங்களின் அரிச்சுவடியை அறியத்தந்தவர், சசிகுமார். 



ப்ளாகர்நண்பன் அப்துல் பாசித்
அப்துல் பாசித் அவர்களின் வலைப்பூ ப்ளாகர் நண்பன், பெயருக்கு ஏற்றது போலவே புதிதாக பிளாக் தொடங்கியவர்களுக்கு இவரின் தளம் எல்லா டிப்ஸ் களையும் அள்ளி வழங்கும். இவர் கிட்டத்தட்ட இதை ஒரு தொடராகவே எழுதினார். என் வலைதளத்தில் பிரச்சினை என்றால் இவருடைய தளத்தில் நமக்கு வேண்டிய தீர்வு கிடைத்துவிடும்.



கற்போம் பிரபு கிருஷ்ணா
மற்றுமொரு தொழில் நுட்ப வலைப்பூ. பிரபு கிருஷ்ணா தளத்தில் சென்றால் ஃபீட் பர்னர், ஓட்டுப் பட்டை பிரச்சினை போன்றவற்றிற்கு  லகுவாக தீர்த்து வைப்பதற்கு தீர்வுகள் வைத்திருப்பார்.
என் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வெகுநாட்களாக வேலை செய்யாமல் இருந்தது. எத்தனை முறை நீக்கி மறுபடி போட்டாலும் வேலை செய்யாது. அதற்கு தீர்வு இவரிடம் கிடைத்தது. பிரச்சினையில் ஓட்டுப்பட்டையில் இல்லை ஃபீட் பர்ணரில் தான் உள்ளது என்று தீர்த்து வைத்தார்.



இப்பொழதெல்லாம் வலைப்பூவில் பிரச்சினையா? ஞே.... என்று முழிக்க வேண்டாம் இவர்களது தளத்திற்கு சென்றால் தீர்வு கிடைத்துவிடும்.

இந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் சேவையை வாழ்த்த எனக்கு தொழில்நுட்ப அறிவில்லை வணங்குகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் நண்பரே ! இந்த மூவரின் வலைகளிலும் நமக்கு வேண்டிய / சந்தேகங்களை தீர்க்கும் பல தகவல்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது UPDATE-ம் செய்கிறார்கள் !... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ! நன்றி !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

சம்பத்குமார் said...

மிகச் சரியாய் சொல்லியுள்ளீர்கள் நண்பரே..நானும் இவர்களது தளத்தினை அலசி ஆராய்ந்த பின்னரே ஓரளவுக்கு வலைவடிவமைப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்.

இவர்களின் பணி மென்மேலும் வளரட்டும்

நன்றி
சம்பத்குமார்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சம்பத்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.