அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழா
நடத்தியிருக்கிறார்கள். அதற்கு உத்தரவு தந்த அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது
உயர் நீதிமன்றம்.
என்னதான் கலைஞர் பேரில் “காண்டு” என்றாலும் இது
ரொம்ப ஓவர். திருமணம் நடத்தியவர்கள் அங்கேயே சமைத்து உண்டு பின்பு குப்பை கூளங்களை
விட்டுசென்றதால் அந்த இடம் நாறுகிறது என்று ஒரு நாளேடு குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் திருமணம் நடந்த சமயத்தில் நூலகத்திற்கு வந்தவர்களை தடுத்து நிறுத்திய
கூத்தும் நடந்து இருக்கிறது. ஏற்கனவே அரசாங்கம் இதை குழந்தைகள் மருத்துவமனையாக
மாற்றப்போகிறோம் என்ற திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த கோபம்
தான் இப்பொழுது அந்த இடத்தை நாறடிக்க தூண்டியிருக்கிறது.
இப்படியே போனால் ஓமந்துரார் வளாகத்தில் அமைக்கப்
பட்டிருக்கும் புதிய தலைமைச் செயலகம் கட்டண கழிப்பிடமாக மாறும் வாய்ப்பு அதிகமாகவே
இருக்கிறது. ஏற்கனவே அம்மா அந்த கட்டிடத்தை வைத்து நக்கல் செய்தது அணைவருக்கும்
தெரியும். மருத்துவ மனைக்கு சுற்றுப்புற சூழல் அமைச்சகம் தடை விதித்தால் என்ன,
உச்சா போக ஒருத்தனும் தடை விதிக்க முடியாது.
கத்திப்பாராவையும் ஏன் விட்டு வைக்க வேண்டும்,
அதை பெரிய குப்பை மேடாக்கி விடலாம். மேலும் கக்கா போக இந்த இடத்தை ஒதுக்கி “கக்கா
பண்ணும் பொழுது உச்சா போகக்கூடாது” என்று அரசு ஆனை பிறப்பித்தாலும் வாயையும்
மூக்கையும் மூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.
நடத்துங்க உங்க ராஜ்யம்தான்.
8 comments:
ஹா ஹா ஹா!
என்னண்ணே பண்ணுறது? இவிங்க நல்லது பண்ணுவாகன்னு ஓட்டுப் போட்டா, இவிங்களும் பட்டை நாமம் போடுறாக!
நீனும், நானும், நாடும், நாட்டு மக்களும் நாசமாப் போகக் கடவது!
வெளங்காதவன் என்று பேர் வச்சிகிட்டு நல்ல வெளங்கறா மாதிரிதான் சொல்லியிருக்கீங்க.
நல்லா கேட்டீங்களே கேள்வி! ஆனா செவிடன் காதுல ஊதுன சங்குதான் இதுங்களுக்கு!
ஆமாம் சுரேஷ், இருந்தாலும் ஊதுகிற சங்கை நாம் ஊதுவோம்.
நாடு வெளங்கிடும் !
தனபாலன் வருகைக்கு நன்றி.
பதிவுக்கு தலைப்பு வைத்துள்ளது போலவே நடக்க வாய்ப்பு உண்டு!!!தலைமை சரியில்லை,தேர்ந்தெடுத்த மக்களின் தலையெழுத்தும் சரியில்லை,வேறென்ன சொல்ல???---சு.மூர்த்தி
ஆமாம் மூர்த்தி ஸார், இன்னும் நாலு வருடம் என்ன என்னவெல்லாம் பார்க்கப்போகிறோமோ?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.