நல்லாத்தான்
ஆளுறாங்கப்பா. ஒரு கூட்டம் குடும்பத்தை நிறுத்தி கொள்ளையடிக்குது, தமிழை பேசி
தாலியறுக்குது என்று மக்கள் நல்லா ரோசனை செய்து இன்னொரு
கூட்டத்தை கொண்டு வச்சா அவிக செய்யற அலப்பறை தாங்க முடியலை. பிரச்சனை பிரச்சனை
என்று டாஸ்மாக் போனா அங்கே ஒரு பிரச்சனை கூல் இல்லாத பீரு போல ....ண்டிய காட்டி
ஆடிச்சாம்.
கெடக்கறது கெடக்கட்டும்
கெழவிய தூக்கி மனையிலே வையின்ற கணக்கா அம்மா கொடநாட்டில குந்திக்கின்னு
கூடுவாஞ்சேரியில கக்கூசு அடைப்புன்னா கூட பிரதமருக்கு கடிதம் எழுதிகிட்டு இருக்கு. இங்கே
அமைச்சருங்க மலையேறிய ஆத்தா எப்போ மலை இறங்கும் நாம பொடனில புழுதி பட ஓடி
சொம்படிக்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே தான் அப்படி
என்றால் தமிழீன தலைவர் டெசோ மாநாடு, தமிழீழம் என்று குரல் விட்டு தொங்கிய கட்சியை தூக்கி
நிமிர்த்தலாம் என்றால் அலைகற்றை ஊழல் அரை வேட்டியையும் கோமணத்தையும் உருவி
விட்டதால் செட்டியார் பேசிய இரண்டாம் நிமிடம் டெசோ மாநாட்டில் தனி தமிழீழம்
கேட்கமாட்டோம் என்கிறார்.
பாவம் அவரு நிலைமை அப்படி, சரி
வூட்லயாவது நிம்மதி கிடைக்குமென்றால் அங்கே மனைவி, துணைவி
மகள் மகனென்று ஆயிரம் பிரச்சினைகள்.
சிங்கள வீரர்களுக்கு
இந்திய அரசாங்கம் ராணுவ பயிற்சி அளிப்பதை எதிர்த்து அம்மா சும்மா கடிதம் கடிதமாக
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கு எல்லா கடிதங்களையும் தொடைச்சிப் போட்டுடுறாரு
போல. தாம்பரத்தில் பயிற்சி கூடாதென்றால் நாங்க குன்னூருக்கு போவோம் என்று
பூச்சாண்டி காட்டிகொன்டிருக்கிறார்கள். மொத்தத்தில் ஈழத்தமிழர்களை வைத்து
எல்லோரும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்
அப்பாவி ஈழத்தமிழனோ
கள்ளத்தோணியேறி எட்டாயிரம் மைல் கடந்து உயிரைப் பணயம் வைத்து
அகதியாக ஆஸ்திரேலியாவில் புகலாம் என்ற நப்பாசையில் சிங்கள போலீசிடம் அகப்பட்டுக்
கொண்டிருக்கிறான்.
அட எப்படியோ போங்கப்பா, நம்ம கவலையெல்லாம் நாளை பா.ம.க வின் டாஸ்மாக்
கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா?
13 comments:
m ..
இவர்கள் இருவரையும் மக்களுக்கு பிடித்திருப்பதால்தானே மாறி மாறி வாக்கு அளி(ழி)த்து ஆட்சியில் அமர (சாவு) வைக்கின்றனர்.
ஆமா எதுக்குவோய் கடிதம் கடிதமா எழுதுறாங்க? டெக்னாலஜி வளந்துட்ட காலத்துல இவங்ககிட்ட மொபைல் போன் இல்லாம போயிடுச்சா?
\\நண்டு @நொரண்டு -ஈரோடு said...
m ..//
எஸ்.ரா. ஸார் வருகைக்கு நன்றி.
\\கோவி said...
ஆமா எதுக்குவோய் கடிதம் கடிதமா எழுதுறாங்க? டெக்னாலஜி வளந்துட்ட காலத்துல இவங்ககிட்ட மொபைல் போன் இல்லாம போயிடுச்சா?//
வருகைக்கு நன்றி.
//நாளை பா.ம.க வின் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா? //
அதுலாம் போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு குடுக்க மொத்தமாக வாங்கி விட்டார்கள்
ராஜா சார் அப்படி ஒரு விஷயம் இருக்கிறதை யோசிக்கவே இல்லை. சரக்கு வாங்கி வச்சிட வேண்டியதுதான்.
ரத்த வாடை அடிக்குதுன்னே!!
#நான் விஜிடேரியன் ஆகிவிட்டதால்...... நன்னி.....
//டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா?///
அந்த கருமத்தை விட்டு தொலைச்சதுலேர்ந்து நமக்கு அந்த கவலை இல்லை அண்ணே.....
\\வெளங்காதவன்™ said...
ரத்த வாடை அடிக்குதுன்னே!!
#நான் விஜிடேரியன் ஆகிவிட்டதால்...... நன்னி.....//
வருகைக்கு நன்றி ஸார்.
\\Jey said...
//டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா?///
அந்த கருமத்தை விட்டு தொலைச்சதுலேர்ந்து நமக்கு அந்த கவலை இல்லை அண்ணே.....//
இன்னாது விட்டுட்டீங்களா? இது நியாயமில்லை.
இதுல நிறைய நானும் எழுதியிருக்கேன் போல...
ரசித்தேன்...
வருகைக்கு நன்றி ரெவ்ரி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.