மமதா ஊதிய சங்கு
மமதா கடைசியில் இந்த
முடிவைதான் எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான். “தீதி” இந்த விஷயத்தில்
காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று முலயாம் துனைநாட அவர் அந்தர் பல்டி
அடிக்கும்பொழுதே “தீதி” இந்த முடிவுதான் எடுத்தாகவேண்டும். அல்லது யாருக்கும்
ஓட்டளிக்காமல் இருப்பது என்பது திரிணமூல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆக
மொத்தத்தில் இது சங்மாவுக்கு ஊதிய சங்கே.
இனி ராஜ் பவனில் தூயிமிஸ்டும்,
ரசகுல்லாவும் விருந்தில் வைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
ராஜேஷ்கன்னா
எழுபதுகளின் இந்தி திரைப்பட உலகத்தின்
சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கண்ணா மரணம், அவருடைய ரசிகர்களுக்கு இழப்பு. அவர் நடித்த
ஆராதனா யாரும் மறக்கமுடியாது. ஆனந்த் தியேட்டரில் இந்தப் படம் கிட்டதட்ட ஒரு
வருடத்திற்கு மேல் ஓடியது.
நாங்கள் கல்லூரியில் இருந்த
காலத்தில் “ரூப்தேரா”வும், “மேரேசப்புநோக்கி”யும் தெரியவில்லை என்றால் சகாக்கள்
டாஸ்மாக்கில் க்வார்டரை கால்மணிநேரமாக குடிப்பவன்போல் பார்ப்பார்கள்.
செங்கோட்டையனுக்கு ஆப்பா?
வருவாய்துறை அமைச்சராக
இருக்கும் கே.எ. செங்கோட்டையோன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு என்.டி. வெங்கடாசலம்
நியமிக்கப்பட உள்ளார்.
அம்மா ஆட்சியில இதெல்லாம்
சகஜம்தான். மன்னார்குடி மாபியா நீக்கப்பட்ட பொழுது கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே “செங்கு”
ஆடியதுதான் காரணமா? தெரியவில்லை.
ரசித்த கவிதை
மவுனம் சுமக்கும் பறவைகள்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.
நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.
மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பறந்து கொண்டிருக்கின்றது
மவுனத்தைச் சுமந்தபடி.
.............................நன்றி:கதிர்மதி
நகைச்சுவை
அந்த விமானம் இயந்திரக்
கோளாறினால் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தது. அந்த இளம்பெண் எழுந்து நான்
எப்படியும் சாகப்போகிறேன், சாகும் தருவாயில் ஒரு பெண்ணாக முழுமைப் பெற்று இறக்க
விரும்புகிறேன் என்று தன் உடைகளை எல்லாம் களைந்து எறிந்தாள்.
பின்னர் “இங்கு உள்ளவர்களில்
எவனாவது ஒரு நல்ல ஆண்மகன் கடைசிமுறையாக என்னை பெண்ணாக உணர வைக்க முடியுமா?”
என்றாள்.
அந்த இளைஞன் எழுந்து தன்
சட்டையைக் கழற்றி “இந்தா இதற்கு இஸ்திரி போட்டுக் கொடு” என்றான்.
இந்த வார ஜொள்ளு
18/07/2012
17 comments:
நகைச்சுவை கலக்கல்
வருகைக்கு நன்றி பிரேம்.
ராஜேஸ் கன்னாவுடைய அந்த பாட்டு ஒன்று அடிக்கடி படிப்பேன்... உண்மையாக அந்த பாடல் வரி ஒன்றுமே உருப்படியாகத் தெரியாது...
(மேரே சப்புனேக்கா ராணி கபு அப்படீண்ணு நினைக்கிறேன்...)
வழக்கம் போல கடைசி படம் அருமை .. அத பார்த்தபின் வேற எதையும் படிக்க மூட் வரல
மம்தா முடிவு # அரசியல்ல இதலாம் ச்கஜம்மபா
அதே பாட்டுதாங்க ராணி கப்பு.
அருமையான காக்டெயில்! கவிதையும் ஜோக்கும் அருமை!
;)
\\"என் ராஜபாட்டை"- ராஜா said...
வழக்கம் போல கடைசி படம் அருமை .. அத பார்த்தபின் வேற எதையும் படிக்க மூட் வரல//
இன்னா ஸார் படம் கதேசியிலே தானே கீது
\\
s suresh said...
அருமையான காக்டெயில்! கவிதையும் ஜோக்கும் அருமை!//
நன்றி சுரேஷ்
வருகைக்கு நன்றி ஹாரி.
கலக்கல் .
ராஜேஷ் கண்ணாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
கவிதையும் நகைச்சுவையும் அருமை...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)
\\நண்டு @நொரண்டு -ஈரோடு said...
கலக்கல் . //
எஸ்.ரா ஸார் வருகைக்கு நன்றி.
\\திண்டுக்கல் தனபாலன் said...
ராஜேஷ் கண்ணாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
கவிதையும் நகைச்சுவையும் அருமை...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)//
வருகைக்கு நன்றி ஸார்.
காக்டெயில் செம போதை
மனசாட்சி வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.