பைசா நகரம்
பார்த்தவுடன் அன்று மாலை இத்தாலியில் உள்ள டஸ்காணி மாகாணத்தின் தலைநகரான
ஃபளாரெண்ஸ் நோக்கி பயணம். இங்குதான் பிரபல சிற்பி ஓவியர் மிகேல் ஆஞ்செலோ மற்றும்
கலிலியோவின் கல்லறைகள் உள்ளன.
கோமணம் எங்கே? |
இங்குள்ள மலை
உச்சியில் ஏறினால் அழகான ஃபளாரெண்ஸ் நகரமும் மிகவும் பழமை வாய்ந்த சர்ச்சையும்
காணலாம். மேலும் இங்கு மிகேல் ஆஞ்சலோ செதுக்கிய டேவிடின் சிலை உள்ளது. அவர்கள்
காலத்தில் கோமணம் கண்டுபிடிக்கவில்லையோ இல்லை கட்டத்தெரியாதோ தெரியவில்லை. எல்லா
சரித்திர புகழ் பெற்ற சிலைகளுக்கும் ஆடைகள் இல்லை. மலையிலிருந்து இறங்கியவுடன் ஃபளாரெண்ஸ்
நகரை சுற்றிக் காட்ட வந்த வழிகாட்டியுடன் ஒரு தனி அனுபவம். இத்தாலியப் பெண்கள் ஒரு
தலைவலி ஆதலால் நாங்கள் எங்கள் ஊர் பெண்களை ஏற்றுமதி செய்து மற்ற ஊர் பெண்களை
இறக்குமதி செய்கிறோம் என்றான். உங்கள் ஊருக்கு கூட ஒரு பெண்ணை அனுப்பியுள்ளோம்
மேலும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்றான். அடப்போயா ஒன்னு பண்ற அலம்பலே தாங்க
முடியல, பொத்திகிட்டு போயா என்று என்னிக்கொண்டோம். அங்கிருந்து கிளம்புமுன்
கூட்டத்தில் உள்ள ஒரு அம்மணிக்கு பெரிய சந்தேகம். டேவிட்டுக்கு கை கால் புஜம்
எல்லாம் சைசாக இருக்க மேட்டர் மட்டும் ஏன் சிறியது என்று வினவ அவன் மிகேல் ஆஞ்சலோ
குளிர்காலத்தில் செதுக்கியிருப்பார் என்றான். அன்று இரவே வெனிசை நோக்கி சென்று இத்தாலியின்
கரையோரப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினோம்.
அடுத்த நாள்
காலை அழகிய வெனிசை நோக்கி படகில் பயணம். வெனிஸ் அட்ரியடிக் கடலின் அரசி என்று
சொல்லப் படுகிறது. நூற்றிபதினெட்டு தீவுகள் கால்வாய்களால் பிரிக்கப்பட்டு பாலங்களால்
இணைக்கப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசய அழகிய நகரம். கார்களோ மோட்டார் சைக்கிள்களோ
இங்கு பார்க்க முடியாது. கொண்டோலா என்று சொல்லப்படும் சிறு படகுகளில்தான் ஒரு
இடத்திலிருந்து மாற்ற இடத்திற்கு செல்லமுடியும். தெருக்கள் எல்லாம் கால்வாய்களே. வெனிஸ்
மிக அழகிய மிதவை நகரம். இங்குள்ள கட்டிடங்கள் மரக்கட்டைகளை வரிசையாக அடுக்கி நீர்
பகுதியை சதுப்பு நிலமாக மாற்றி கட்டப்பட்டது. சில தீவுகளில் மின் உற்பத்தி
நிலையங்களை பார்க்க முடிகிறது. கிராண்ட் மார்கோ சதுக்கம் ஒரு அதிசயம். போன குளிர்
காலத்தில் கிராண்ட் மார்கோ சதுக்கத்தில் கடல்நீர் புகுந்து விட்டதாம்.
புவி வெப்பமாதலின்
காரணமாக கடல் உள்வாங்கி இன்னும் இருபது வருடங்களில் வெனிஸ் காணாமல் போய்விடும்
என்று சொல்லப்படுகிறது.
நூறு
வருடங்கள் கழித்து சென்னைக்கும் இதே கதிதானாம்.
1985 ல் வெளிவந்த “Dangerous Beauty” என்ற திரைப்படம் முழுக்க முழுக்க
வெனிஸ் நகரில் எடுக்கப்பட்டதே.
......................(பயணம்
தொடரும்)
13 comments:
அட்டகாச படங்களுடன் பயணப் பதிவு அருமை...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
அழகிய நடையில் சிறப்பான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
நல்ல படங்கள்.
தளிர் சுரேஷ் வருகைக்கு நன்றி. உங்களது இடுகைகளை படிக்கிறேன்.
தனபாலன் வருகைக்கும் த.ம. 2க்கும் நன்றி.
பழனி கந்தசாமி வருகைக்கு நன்றி.
அண்ணே கட்டுரை அருமை...
//உங்கள் ஊருக்கு கூட ஒரு பெண்ணை அனுப்பியுள்ளோம் மேலும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்றான். அடப்போயா ஒன்னு பண்ற அலம்பலே தாங்க முடியல, பொத்திகிட்டு போயா என்று என்னிக்கொண்டோம். //
ஹஹஹஹா நோ டென்ஷன் ...பயணத்த எஞாய் பண்ணுங்க....:)
ஜே வெகுநாட்களுக்குப் பிறகு எனது வலைதளத்திற்கு வந்திருக்கிறீர்கள் நன்றி.
அழகான வெனிஸ் நகரத்தைப்பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
படங்கள் அழகு .
ராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி எஸ்.ரா. சார்.
அடப்போயா ஒன்னு பண்ற அலம்பலே தாங்க முடியல, பொத்திகிட்டு போயா என்று என்னிக்கொண்டோம்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.