நாளை நடக்கவிருக்கும் சென்னை பதிவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதைப் பற்றிய பதிவுகள் எக்கச்சக்கமாக வந்துவிட்டது. இதில் என்னுடைய பங்கிற்கு பதிவு போடா விட்டால் பதிவுலகத்திற்கு நம் பங்கு என்ன ஆவது?
சமீபத்திய மோகன்குமார்(வீடு திரும்பல்)அவர்களின் பதிவு மாநாட்டிற்கு வருபவர்களுக்கான வழிமுறைகளை சொல்லுகிறது. எல்லா ஊரிலிருந்து வருபவர்களுக்கும் பேருந்து எண்கள், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வரும் வழிகள் என விஸ்தாரமாக போட்டிருப்பது இதை நடத்தும் நிர்வாகிகளின் கடமை உணர்ச்சியைக் காட்டுகிறது.
என்னைப் போன்ற வெளிநாட்டு பதிவர்கள் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் மேலோங்கி நிற்கிறது. பதிவர் மாநாடு நடக்குமிடம் என்னுடைய சென்னை வீட்டிலிருந்து பொடிநடையாக போகும் தூரம்தான் என்று நினைக்கையில் அங்கில்லாமல் போய்விட்டோமே என்றும், மேலும் இங்கு வந்து ஆணி பிடுங்கவதை நினைத்து வெறுப்பு வருகிறது.
ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த பொழுதே சி.பி. யை தொலைபேசியில் அழைத்து எங்களால் கலந்துகொள்ள முடியாத ஏக்கத்தை வெளிப்படுத்தினேன். இது போன்ற மாநாடுகளால் அடையைப் போகும் நன்மைகளை இழக்கிறோம் என்ற வேதனை மேலோங்கி கண்கள் பனிக்கின்றான.எழுத்தால் மட்டுமே நண்பர்களான எத்தனையோ அன்புள்ளங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறேன்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாத ஏக்கம் என் சொந்தங்களின் விசேஷங்களில் கலந்துகொள்ள முடியாத பொழுது ஏற்பட்ட ஏக்கத்தைப் போல உணருகிறேன்.
இந்த மாநாடு சிறப்புடன் நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.
25/08/2012

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் |

12 comments:
//இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாத ஏக்கம் என் சொந்தங்களின் விசேஷங்களில் கலந்துகொள்ள முடியாத பொழுது ஏற்பட்ட ஏக்கத்தைப் போல உணருகிறேன்.//
Same feeling அண்ணே
ஹாரி வருகைக்கு நன்றி, நல்ல சந்தர்ப்பம் நழுவுகிறது.
அண்ணே ஆதரவுக்கு நன்றி.
ஜே வருகைக்கு நன்றி.
எங்கள் வீடு விசேஷம் என நீங்கள் குறிப்பிட்டது மிக மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்கு நன்றி
ஹாரி மற்றும் உங்கள் போன்றவர்களின் ஏக்கம் தீரும் வணணம் விரிவாக நிகழ்வுகளையும் படஙகளையும் பகிர்கிறோம் நாங்கள். உங்கள் அனைவரின் வாழ்த்தும் எங்களுக்கு பலம். சிறப்பாய் நடந்தேறிடும் விழா. மிக்க நன்றி.
மோகன் குமார் விழா சிறப்புற வாழ்த்துகள்.
பால கணேஷ் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.
நானும் கலந்துகொள்ள முடியவில்லை, வருந்துகிறேன்! நேரலையில் பார்க்க முயற்சிப்போம்!
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
பதிவர்கள் மாநாடு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.பகிர்விற்கு நன்றி:)
வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.