Pages

Monday, 13 August 2012

பயணக்கட்டுரை—நாங்களும் எழுதுவோமில்ல


இது ஐரோப்பிய பயணக்கட்டுரை. நாங்களும் போவோமில்ல. 

டேமேஜரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக ஆணி பிடுங்குவதிலிருந்து ஒரு இருபது நாள் அபீட் ஆகி ஐரோப்பா டூர் போயிருந்தேன். தக்காளி விமானத்தில் அமர்ந்ததிலிருந்து ஆணி நினைப்பை அடியோடு மறந்து ஆகாசத்தில் பறந்து ஒரு வழியாக ஜூலை இருபத்தி ஐந்தாம் தேதி ரோமில் இறங்கிய பின் எங்களுடைய பயணம் தொடங்கியது.

சுற்றுலா இயக்கி (Tour Manager) இன்னும் வரவேண்டிய சில அல்லக்கை பார்ட்டிகள் வராததால் இரண்டு நாள் கழித்துதான் பயணம் தொடங்கும் என்று ஒரு குண்டைப் போட்டான். இருந்தாலும் நீ இல்லை என்றால் என்ன? என்று லோக்கல் தொடர் வண்டியில் தினசரி சீட்டு எடுத்து நானும் மனைவியும் தனியாகவே ரோம் வலம் வர ஆரம்பித்தோம். முதலில்  நாங்கள் “கொலோசியம்” பக்கம்  நடையைக் கட்டினோம். அங்கு வந்த வழிகாட்டி கையில் உள்ள காசை பிடுங்கிக் கொண்டு அவனுக்கு தெரிந்த சரித்திரத்தை சொல்ல அவன் பின்னே நடந்தோம். அவன் ஒரு வழியாக அவனுடைய புராணத்தை முடிக்கவும் அப்பொழுதுதான் பசியை உணர ஆரம்பித்தோம். உடனே இந்திய உணவகத்தைத் தேடி ஒரு மணி அலைச்சல். பின்னர் ஏதோ ஒரு உணவகத்தில் சமூசாவும் டீயும் குடித்து ஓரளவு பசி தீர்ந்தபின் தான் எதிரில் வரும் பிகர்கள் கண்ணில் பட ஆரம்பித்தார்கள்.

பெண்களின் தேசிய உடை காலே அரைக்கால் டவுசரும், அதள பாதாளத்தில் இறங்கிய டீ ஷர்ட்டுகளும் தான். ஆண்கள் நூறு டிகிரி வெயிலிலும் கோட் சூட் போட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிரார்கள். பெண்களோ எதிரில் வருபவர்களைப்பற்றி கவலைப்படாமல் டவுசர் மேலே ஏற எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்கிறார்கள்.

எங்கு போனாலும் "ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை" என்று அவரவர் உஷார் படுத்திக் கொண்டிருந்ததால் கடவுச்சீட்டையும், கையில் உள்ள காசையும் கோமனத்தில் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலைமை. இருந்தாலும் ஒரு வழியாக ரோமில் தனியாகவே இரண்டு நாட்கள் காலம் கழித்தோம். பின்னர் எங்களது சரித்திர புகழ்பெற்ற சுற்றுலா தொடங்கியது. முதல் நாள் "வாடிகன்" முழுவதும் சுற்றினோம். போப்பாண்டவரை பார்க்கலாம் என்றால் அவர் ஓய்வெடுக்க அந்த ஊர் கொடநாடு போய்விட்டாராம்.

அடுத்த நாள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். உலக அதிசயங்கள் ஏழை வரிசைப்படுத்து என்று சரித்திர வாத்தியார் அஞ்சாப்புல கேட்ட பொழுது கடை பெஞ்சில் பம்மிய நியாபகம் ஏனோ நினைவுக்கு வர அந்த சாய்ந்த கோபுரத்தை நோக்கினேன்.

இந்த கோபுரம் சென்னையில் மெரீனா ஓரமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

இந்த கோபுரம் இந்த ஊர்களில் இருந்தால் என்ன பெயர் வைத்திருப்பார்கள்.
சீனாவில் இருந்தால் “சாஞ்-சிச்-சோ(ங்) சாய-லைங்-கோ”
ஜப்பானில் இருந்திருந்தால் “நிக்குமோ நிக்காதோ”
சென்னையில் இருந்தால் “உயுமோ உயாதோ”.............தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் 

14 comments:

  1. அட போட்டோல தெரிறது நீங்களா அண்ணே

    ReplyDelete
  2. ஐயோ அது சத்தியமா நானில்லை.

    ReplyDelete
  3. எஸ். ரா. ஸார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. குட்டு (Good) இங்கிலிப்பீஸ்ல சொல்லக்கொள்ளத்தானே பிரியும்!

    ReplyDelete
  5. இனிய பயண கட்டுரை...
    இன்னும் நிறைய படங்களை சேர்த்து இருக்கலாமே...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
  6. வாங்க சார் வாங்க

    பயண கட்டுரை... ம்...என்ன 10, 15 பாகம் வரை போகும்ல - எதிர்பாக்குறேன்

    ReplyDelete
  7. பழனி கந்தசாமி, தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்லபடியா ஹனிமூன் முடிச்சுட்டு வந்துட்டியா
    திர்ம்ப ஆணி புடுங்க போறதுக்குள்ள நாலஞ்சு பதிவு போடும்.

    ReplyDelete
  9. மனசாட்சி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி மன்மதகுஞ்சு.

    ReplyDelete
  11. வெல்கம் பேக் கும்மாச்சி!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  12. சீனாவில் இருந்தால் “சாஞ்-சிச்-சோ(ங்) சாய-லைங்-கோ”
    ஜப்பானில் இருந்திருந்தால் “நிக்குமோ நிக்காதோ”
    சென்னையில் இருந்தால் “உயுமோ உயாதோ”.............தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
    டியர் கும்மாச்சி ,
    பதிவின் இந்த கடைசி பாராவை படித்து சிரித்து புண்ணாகிவிட்டது ...எதுன்னு கேக்காதீங்க ......உங்க சிங்கார சென்னை தமிழ் சூப்பரு
    இப்படிக்கி
    மெய்யாலுமே சென்னை வாசி

    ReplyDelete
  13. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நாசர்.

    ReplyDelete
  14. உயும் ஆனா உயாது

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.