Pages

Tuesday, 21 August 2012

கலக்கல் காக்டெயில்-82


டான்ஸ் உடான்ஸ்

“டான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க” எனும் தலைப்பில் 22/08/2012ஜூ.வி. இதழில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. அதில் கிழக்கு கடற்கரை சாலையில் பன்னைவீடுகளில் நடக்கும் மேட்டுக்குடி மற்றும்  வெளிநாட்டு மக்களுக்காக நடத்தப்படும் பார்ட்டிகளில் நடனமாடுவதற்கும் மற்றும் கில்மா மேட்டர்களுக்கும் பல பெண்கள் கொண்டுவரப்படுகிறார்கள் என்றும் இதையெல்லாம் ஏற்பாடு செய்ய ஒரு மாமா|(அ)அக்கா கூட்டமே இருக்கிறதாம்.

இதை விசாரிக்கும் ஐ.ஜி. கிழக்கு கடற்கரை சாலையில் இது போல் பார்ட்டிகள் நடப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

அது சரி ஸார் அடுத்த முறை நடக்க சொல்ல உங்களுக்கு பூரனகும்பம் வச்சி கூப்பிடுவாங்க போய் செய்ய வேண்டியதை இல்லை செய்துகொள்ள வேண்டியதை செய்துக்குங்க.

வெளங்கிடும்.

அஞ்சாநெஞ்சன் டு டீக்கடை

ஏதோ கிரானைட்தாம் அதை வெட்டி ஒருத்தரு ஆட்டையைப் போட்டுட்டாராம். அவரை மடக்கி மடக்கி பிடிச்சிருக்காங்க. விஷயத்தை விசாரிக்க இப்பொழுது அம்மாவிற்கு குனியும் குன்ஸ் பார்ட்டி அமைச்சருங்களே கமிஷன் அடிச்சிருக்காங்க.

அதிலேயும் விசுவாசத்திற்கு “பெயர் போனவரே” பெரிய கையாம். ஆனால் மதுரை பக்கம் அம்மா காய் நகர்த்தி அஞ்சா நெஞ்சனை ஆப் பண்ணலாமுன்னு நெனைச்சு கலெக்டரு தொட்டு அதிரடி மாற்றம் செய்தால் இவனுக கும்பிடு போட்டே சந்திலே சிந்து பாடியிருக்காணுக.

டேய் எவன் வந்தாலும் ஆட்டையைப் போடாம இருக்க மாட்டிகளா? நாரயணா இவனுக தொல்ல தாங்க முடியலைடா.

ரசித்த கவிதை

மதமெதற்கு உனக்கு?
சிகரம் தொடு
அகரம் எடு
ஆயுளுள்ளவரை
ஆணவம் போக்கு
சாதிக்காக
மோதிச் செத்தவர்களின்
சரித்திரங்களை விட்டுவிடு
மீதியுள்ளவர்களைப்
பாதிக்கவிடாமல்
சாதிக்கவிடு
முற்றிய முதுகெலும்பு
முன்னும் பின்னும் வளையாது - நீ
இளமையிலே தூக்கி எறி
இனியெதற்குச் சாதி
மனிதனைப்
பதம் பார்க்கும்
மதமெதற்கு உனக்கு? - அதை
அடியோடு ஒதுக்கு
வஞ்சகரின்
நெஞ்சமெரிய - நம்
வண்ணத்தமிழின் பெருமையை
வான்மீது முழங்கச் செய்
------------------------------- சுசி. ஜெயசிலன்



இந்த வார ஜொள்ளு 

 
21/08/2012

9 comments:

  1. அனைத்தும் அருமை ...( கடைசி படம் ரொம்ப அருமை )

    ReplyDelete
  2. வணக்கமுங்க ராஜா, வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. அருமையான கவிதை... நன்றி... (TM 3)

    ReplyDelete
  4. தனபாலன் வருகைக்கும் TM3 விற்கும் நன்றி.

    ReplyDelete
  5. எஸ்.ரா. ஸார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. கவிதை நல்லாருக்கு..

    ReplyDelete
  7. ஹாரிபாட்டர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பான தொகுப்பு!நன்றி!

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.