Wednesday, 15 August 2012

கலக்கல் காக்டெயில்-81


எல்லோருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்

புதிய தலைமுறை புட்டுகிச்சாம்

வழக்கம்போல சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என்று எல்லா தமிழ் கூறும் நல்லுலக தொலைகாட்சிகள் சினிமாவை வைத்து கல்லா கட்டிகொண்டிருக்கின்றனர். எந்த சேனலை திறந்தாலும் “கும்கி” “மாற்றான்” என்று புளிப்பூத்திகொண்டிருக்கின்றன. இன்னும் சில சேனல்களோ திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன மொக்கை படங்களை போட்டு இன்று பொழுதை ஒட்டிகொண்டிருக்கும் வேளையிலே “புதியதலைமுறை” இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது சுதந்திரதின சிறப்பு நிகழ்வு.

வாழ்க ஊடக சுதந்திரம், வாழ்க ஜனநாயகம்.

ஆச்சார்யா கழண்டுகொண்டார்

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா தனது மனஉளைச்சல் காரணமாக ராஜினாமா செய்வதாக செய்தி வந்திருக்கிறது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த வழக்கை எவ்வளவு கால தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு நுணுக்கங்களையும் கையாண்டு குற்றம் சாற்றப்பட்டவர்கள் தங்களது எண்ணங்களை நிறைவேற்றிகொண்டிருக்கின்றனர்.

உண்மையாகவே தாங்கள் குற்றமற்றவர்கள் என்றால் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதே முறை.

சமீபத்தில் நான் கர்நாடக அரசு வக்கீலை சந்திக்க நேர்ந்தது. அவர் நேரிடையாக இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை என்றாலும் அவர் இந்த வழக்கில் சில உண்மைகள் அம்மாவிற்கு எதிராக இருக்கிறது என்று சொன்னார்.  இது ஒன்றும் ரகசியம் அல்ல ஊரறிந்த உண்மைதான்.


இந்த வார நகைச்சுவை

இந்தவார நகைச்சுவை நான் படித்த இந்த செய்திதான். (வேறேன்னத்தை சொல்ல)

தேனி: குச்சனூர் சோனைக் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் சோனைக் கருப்பணசாமி கோவில் தனி சன்னதியாகவே உள்ளது. ஆடி மாதம் 4வது வாரம் முடிந்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக மது பாட்டில்களை வழங்கினர்.

பக்தர்கள் அளித்த 4,000 மதுபாட்டில்கள் சாமிக்கு படைக்கப்பட்டன. பூசாரி ஜெயபாலமுத்து தனது வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினார். பின்னர் சாமி இருந்த அறைக்கதவை பூட்டிக் கொண்டு சாமி சிலையின் பின்புறமுள்ள துவாரத்தில் மதுவை ஊற்றினார். அந்த துவாரத்தில் மதுவை ஊற்றினால் அதை கருப்பணசாமி ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.

இந்த வார ஜொள்ளு 



15/08/2012

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

பட்டிகாட்டான் Jey said...

கடைசியா போட்ட படமும் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்

கும்மாச்சி said...

நன்றி ஜே.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

நான் இந்த தொ.கா பார்ப்பதையே விட்டாச்சு, அவ்வப்போது எங்காவது கண்ணில் சிக்கும், சலூன் கடையில கூட தொ.கா வச்சி படம் காட்டுறாங்க :-))

சில சமயம் கிக்காக பாட்டு தொ.காவில் ஓடும் போது கண்ணு அந்தப்பக்கமே போக , சிகை நிபுணர் தலையைப்புடிச்சு இழுக்கிறார் :-))

புதிய தலைமுறையை இருட்டடிப்பு என்றால் கேபிளில் வரவில்லையா? எந்த ஊரில்?

தமிழகத்தில் என்றால் பெரும்பாலும் கே.டி சகோதரர்கள் வேலையாகத்தான் இருக்கும்,ஆனால் இணைய முரசொலி இதைப்பற்றி ஒன்றும் சொல்லக்காணோம், நாளை முழு விவரம் வெளிவரலாம்.

-------

ஹி...ஹி கடசிப்படம் ... மழைக்கால ஸ்பெஷல் ஆஹ் :-))

கும்மாச்சி said...

நன்றி எஸ்.ரா ஸார்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி வவ்வால்

ஹேமா said...

கும்மாச்சி சுகம்தானே.கலகலன்னு இருக்கீங்க பதிவில தெரியுது.இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
நன்றி… (TM 4)

கும்மாச்சி said...

ஹேமா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி, சுதந்திரதின வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

அரசு கேபிள் வந்தப்புறம் பல சேனல்கள்காணாம போயிடுச்சு! சுவையான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.