பாரிசில் தங்கிய விடுதியிலிருந்து காலை ஒன்பது மணியளவில் கிளம்பி யூரோ ஸ்டார் தொடர்வண்டியை பிடிக்க "கரே டு நோர்ட்" என்ற ஸ்டேஷனை அடைந்தோம். இங்கு யூரோ நாடுகளின் விசா முடிவடைவதால் யூ.கே விசா முத்திரையை கடவுச்சீட்டில் பெற்றுக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் யூரோ ஸ்டார் வண்டி ஏறத்தயாரானோம்.
எங்களது தொடர்வண்டி காலை பதினொன்றரை மணிக்கு லண்டனில் உள்ள செயின்ட் பென்க்ராஸ் நோக்கி கிளம்பியது. இந்த வண்டி கடைசி நாற்பது கிலோமீட்டர் தூரத்தை கடலுக்கடியில் ஏற்படுத்தியுள்ள குகையின் ஊடே கடந்தது புதிய அனுபவமாக இருந்தது. இது மிக அதிவேக ரயில். சில இடங்களில் நேரான பாதைகளில் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தை தொட்டது.
மதியம் இரண்டு மணியளவில் லண்டனை அடைந்தோம். பின்னர் அங்குள்ள ஒரு இந்திய ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு “லண்டன் ஐ” என்கிற ராட்சத ராட்டினத்தில் ஏறி லண்டனை ரசித்தோம். பின்னர் மாலை ஆறுமணிக்கு தேம்ஸ் நதியில் படகு சவாரி. லண்டன் பாலத்திலிருந்து கிளம்பி டவர் பாலம் வரை சென்று திரும்பினோம். பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினோம்.
அடுத்த நாள் கலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றோம். போன முறை நான் லண்டன் சென்றபொழுது அரண்மன்னையின் உள்ளே செல்ல முடிந்தது, இந்த முறை அரண்மனையின் காவலர்கள் மாற்றத்தைதான் காணமுடிந்தது. பின்னர் மதியம் மெழுகு அருங்காட்சியகம் (Madame Tussauds) சென்றோம், இந்த முறை ஹுசைன் போல்ட் பொம்மையின் முன்னே அதிகக்கூட்டம். போன முறை சென்ற பொழுது (September 1997) டயானா பொம்மையின் முன்னே புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதியது. காந்தியும், இந்திரா காந்தியும் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாராயை அடையாளம் காணமுடியவில்லை.பின்பு டவர் ஆப் லண்டன் அருங்காட்சியகம். அங்கே நம்மகிட்டே ஆட்டையைபோட்ட கோஹினூர் வைரத்தை நமக்கே காட்டுறானுங்க.
மாலை ஆக்ஸ்போர்டு சாலைக்கு சென்று கடைகளில் மீதமிருந்த பவுண்ட்சை ஒழித்துக் கட்டினோம்.
அடுத்த நாள் காலையில் லண்டனை விட்டு கிளம்பி ஆணிபிடுங்கவேண்டிய நினைப்புடன் தோஹா வந்து சேர்ந்தோம்.
ஒரு வழியாக பதினேழு நாட்களில் இத்தாலி தொடங்கி இங்கிலாந்து வரை எட்டு நாடுகளை பார்வையிட்டோம். எங்களது குழுவில் மொத்தம் நாற்பத்தியொன்பது பேர் (பதினைந்து குடும்பங்கள்). இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் பழகியது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு கேரக்டர்களையும் வைத்து இன்னும் பல பதிவுகள் தேற்றலாம். கர்நாடகாவிலிருந்து வந்திருந்த அரசு வழக்கறிஞருடன் பேசியதில் பதிவிற்கு நிறைய தீனி கிடைத்தது. விஜயவாடாவிலிருந்து வந்திருந்த டாக்டர் தம்பதிகள் எங்களுடன் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இன்னும் எழுத நிறைய இருக்கின்றன.
இது வரை என்னை பொறுமையுடன் பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி.

யூரோ ஸ்டார் தொடர்வண்டி |
லண்டன் ஐ, ராட்சத ராட்டினம் |
மதியம் இரண்டு மணியளவில் லண்டனை அடைந்தோம். பின்னர் அங்குள்ள ஒரு இந்திய ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு “லண்டன் ஐ” என்கிற ராட்சத ராட்டினத்தில் ஏறி லண்டனை ரசித்தோம். பின்னர் மாலை ஆறுமணிக்கு தேம்ஸ் நதியில் படகு சவாரி. லண்டன் பாலத்திலிருந்து கிளம்பி டவர் பாலம் வரை சென்று திரும்பினோம். பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினோம்.
ஹௌசெஸ் ஆப் பார்லிமென்ட் |
லண்டன் டவர் பிரிட்ஜ் |
அடுத்த நாள் கலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றோம். போன முறை நான் லண்டன் சென்றபொழுது அரண்மன்னையின் உள்ளே செல்ல முடிந்தது, இந்த முறை அரண்மனையின் காவலர்கள் மாற்றத்தைதான் காணமுடிந்தது. பின்னர் மதியம் மெழுகு அருங்காட்சியகம் (Madame Tussauds) சென்றோம், இந்த முறை ஹுசைன் போல்ட் பொம்மையின் முன்னே அதிகக்கூட்டம். போன முறை சென்ற பொழுது (September 1997) டயானா பொம்மையின் முன்னே புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதியது. காந்தியும், இந்திரா காந்தியும் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாராயை அடையாளம் காணமுடியவில்லை.பின்பு டவர் ஆப் லண்டன் அருங்காட்சியகம். அங்கே நம்மகிட்டே ஆட்டையைபோட்ட கோஹினூர் வைரத்தை நமக்கே காட்டுறானுங்க.
காந்தி மெழுகு சிலை |
ஹுசைன் போல்ட் |
மாலை ஆக்ஸ்போர்டு சாலைக்கு சென்று கடைகளில் மீதமிருந்த பவுண்ட்சை ஒழித்துக் கட்டினோம்.
பக்கிங்காம் அரண்மனை |
காவலாளிகள் மாற்றம் |
அடுத்த நாள் காலையில் லண்டனை விட்டு கிளம்பி ஆணிபிடுங்கவேண்டிய நினைப்புடன் தோஹா வந்து சேர்ந்தோம்.
ஒரு வழியாக பதினேழு நாட்களில் இத்தாலி தொடங்கி இங்கிலாந்து வரை எட்டு நாடுகளை பார்வையிட்டோம். எங்களது குழுவில் மொத்தம் நாற்பத்தியொன்பது பேர் (பதினைந்து குடும்பங்கள்). இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் பழகியது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு கேரக்டர்களையும் வைத்து இன்னும் பல பதிவுகள் தேற்றலாம். கர்நாடகாவிலிருந்து வந்திருந்த அரசு வழக்கறிஞருடன் பேசியதில் பதிவிற்கு நிறைய தீனி கிடைத்தது. விஜயவாடாவிலிருந்து வந்திருந்த டாக்டர் தம்பதிகள் எங்களுடன் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இன்னும் எழுத நிறைய இருக்கின்றன.
லண்டன் ஐ மேலிருந்து |
பக்கிங்காம்அரண்மனை முன்பு |
டவர்ஆப் லண்டன் முன் |
இது வரை என்னை பொறுமையுடன் பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி.
16 comments:
நல்லதொரு சுற்றுலா பயணக் கட்டுரை !...காந்தி மெழுகுபொம்மை காண ஆவலைத் தூண்டுகிறது.... அருமையான இப் பகிர்வை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் .
அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.
ADA soopar
போட்டோக்கள் எல்லாமே தத்ரூபம்....அருமை..
ஹாரி வருகைக்கு நன்றி.
மணிமாறன் வருகைக்கு நன்றி.
அருமையான பகிர்வு அண்ணா! இப்போதுதான் பாரிஸ் கட்டுரையையும் படித்துவிட்டு வருகிறேன்! எல்லாமே கலக்கல்!
மணி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
அருமையான அனுபவ பகிர்வு! படங்கள் அருமை! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
சுரேஷ் வருகைக்கு நன்றி.
புகைப்படங்கள் எல்லாமுமே அருமை...
பாராட்டுக்கள்... நன்றி... (TM 2)
தனபாலன் வருகைக்கு நன்றி.
அருமையான பயணக் கட்டுரை.படங்கள் அருமை
பகிர்வு நன்றி. தொடருங்கள்.
ராசன் வருகைக்கு நன்றி
அது தான் உங்களை ரொம்ப நாளாகக் காணுமா?
கட்டுரையும் படங்களும் சூப்பர்ங்க கும்மாச்சி அண்ணே!
வருகைக்கு நன்றி செல்வம்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.