Pages

Wednesday, 22 August 2012

பயணக்கட்டுரை—நெதர்லாண்ட்ஸ்


பிரஸ்ஸல்ஸ் நகரில் உச்சா பையனின் சிலையை பார்த்துவிட்டு பெல்ஜியம் நாட்டில் அன்ட்வேர்ப் என்ற நகரில் அன்று இரவு தங்கினோம்.
காற்றாலைகள் (பழைய மாடல் புதிய மாடல் அருகில்)

மறுநாள் காலையில் சிற்றுண்டியை முடித்துவிட்டு நெதர்லாண்ட்ஸ் நோக்கி பயணமானோம். நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் காற்றாலைகள் ஹாலந்தில் நுழைந்து விட்டதை அறிவித்தன. இந்த நெடுஞ்சாலையின் ஊடே பயணிக்கும் பொழுது “ஷில்போல்” விமான நிலையத்தின் ஓடு தளங்கள் சாலையின் இருமருங்கிலும் உள்ள காரணத்தால் சில சமயத்தில் சாலையின் மேலுள்ள பாலத்தில் விமானம் நகர்ந்து ஓடுதளத்தை அடைவதை இங்கும் பாரிசிலும் பார்க்கமுடியும். ஷில்போல் விமானதளத்திலும், பாரிசின் சார்லஸ் டிகால் விமானதளத்திலும் உள்ள விமான ஒடுதளங்கள் தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் உள்ளன.
ஷில்போல் விமானதளத்தில் ஒரு  விமானம் நெடுஞ்சாலையின் பாலத்தில் கடக்கும் காட்சி

காலை பத்து மணியளவில் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்தோம். ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்கள் உலகப் பிரசித்தம். நகரின் குறுக்கும் நெடுக்கே நிறைய கால்வாய்கள் ஓடுகின்றன. கால்வாய்களின் இரு கரைகளையும் இணைக்கும் பாலங்களே ஆயிரம் உள்ளன. காலையில் அந்தக் கால்வாய்களின் ஊடே படகுப் பிரயாணம் செய்து ஊரின் அழகை ரசித்தோம். இங்கு சைக்கில்களுக்காகவே சாலையின் ஓரத்தில் தனிப்பாதை அமைத்திருக்கிறார்கள். வாடகை சைக்கிள்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
கால்வாய்களில் படகு சவாரி 

இந்த ஊரு “கில்மா” மேட்டருக்கும் பிரசித்தம். அந்த ஏரியாவிற்கு சென்று பார்க்கலாம் என்றால் தங்கமணி அனுமதி மறுத்துவிட்டாள். ஆதலால் தலையை தொங்க போட்டுக்கொண்டே ஆம்ஸ்டர்டாம் பயணம் தொடர்ந்தேன். “ஹெனிகேன்” தயாரிப்பு இடம் வந்ததும் தாகசாந்தி செய்து ஓரளவிற்கு சுதாரித்துகொண்டேன்.
"மடுரோடம்" மினி ஹாலந்து
ஷில்போல் விமானதளம் பொம்மை வடிவில்

பின்னர் “மடுரோடம்” சென்று ஹாலந்தின் அமைப்பை சிறுசிறு வடிவில் கண்டோம். இருபத்தைந்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் பொம்மைகள் அமைத்து ஹாலந்து நாட்டின் அமைப்பை ஒரு சிறிய மைதானத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
மடுரோடம்

மாலை ப்லோரைட் என்கிற மிகப்பெரிய மலர் கண்காட்சி சென்றோம். இந்த மலர்கண்காட்சி பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 
ஃப்லோரைட் மலர்கண்காட்சி மைதானம்
 
ஹாலந்தின் துலிப் மலர்கள் பற்றி நமக்குத்தெரியும். அவை வசந்த  காலத்தில் அதாவது மார்ச் மூன்றாம் வாரம் முதல் வரை மே முதல் வாரம் வரைதான் பூக்கும். இந்த வகை பூக்களுக்கு தட்பவெட்ப நிலை மிக முக்கியம். அவற்றை கண்ணாடி மாளிகை அமைத்து குளிர்பதனப்படுத்தி பூக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவைகளை திறந்தவெளிகளில் பார்க்கும் அழகு இங்கில்லை என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த பதிவில் பிரான்ஸ் ----------------------------பயணம் தொடரும்.

13 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இன்று நெதெர்லாந்து வந்தாச்சா? படங்கள் அருமையோ அருமை அண்ணை! தொடர்ந்து கலக்குங்கோ!/

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி மணி.

    ReplyDelete
  3. அருமை...அருமை...
    தொடருங்கள் ...

    ReplyDelete
  4. உலகம் சுற்றும் கும்மாச்சி .

    ReplyDelete
  5. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு! அழகானபடங்கள்! பயண அனுபவம் இனிக்க வைக்கிறது!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  7. சுரேஷ் வருகைக்கு நன்றி. உங்களது பதிவை படித்து பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. உங்கள் கட்டுரையும்... படங்களும்... இந்த இடத்திற்கு நேரில் போயே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை தருகின்றன...

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. படங்களுடன் விளக்கம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
  11. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. படங்கள் அருமை. தொடருங்கள் நண்பரே

    என்னுடைய தளத்தில் ஏணிப்படி

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி ராசன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.