Sunday, 26 August 2012

தமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி

சென்னையில் இன்று நடந்த தமிழ் வலைப்பதிவர் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. எங்களைப் போன்ற வெளிநாட்டு பதிவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இணையத்தின் வழியாக கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய வேலைப்பளுவின் நடுவே அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா பதிவர்களையும் அறிமுகம் செய்த நிகழ்ச்சி காலையில் நடைபெற்றது. கணினி மூலமாகவே பரிச்சியமான பல பதிவர்களை இன்று மேடையில் கண்ட பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

பிலாசபி பிரபாகரன், சேட்டைக்காரன் முதலியோரை மேடையில் பார்க்கும் பொழுது வியந்தேன். இவர்களின் எழுத்தின் துள்ளல் நடைகளை வெகுவாகவே ரசித்திருக்கிறேன். நேரில் காணவேண்டுமென்ற ஆவல் வெகுநாட்களாக இருந்தது. இன்று இணையத்தின் மூலமாக பார்த்தில் மிக்க மகிழ்ச்சி.


வீடு திரும்பல் "மோகன்குமாரு"க்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். இந்த விழாவிற்கு வரமுடியவில்லை என்ற வருத்தத்தை பதிவில் தெரிவித்த  பொழுது இணையத்தில் காண "சுட்டி" அனுப்பி காண வழிவகை செய்தார்.

மதியம் மூத்த பதிவர்கள் மரியாதை விழா முன்பு நண்பர்  "எஸ். ரா. நண்டு@நொரண்டு" பேசினார். அவருடைய பேச்சைக் கேட்டவுடன் அவரை  உடனே அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது என் சொந்த வீட்டு விசேஷத்தில் பங்குகொண்டது போல் இருந்தது.

சசிகலா அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீட்டையும் பின்னர் நடந்த கவியரங்கத்தையும் வெகுவாகவே ரசித்தேன்.

பட்டுக்கோட்டை  பிரபாகர் அவர்களின் முடிவுரை அருமை. அவர் சொன்ன ஒரு விஷயம் நாம் யாவரும் மனதில் கொள்ளவேண்டியவை. இந்த வலைப்பதிவை தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தாதீர்கள் என்றார். நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமானதாகும்.

வெகு விமர்சையாக நடந்த இந்த விழாவின் காரணகர்த்தாக்கள் புலவர் ராமானுசம் அய்யா அவர்கள், சென்னை பித்தன் அவர்கள், கேபிள் சங்கர் அவர்கள், செந்தில், இன்னும் மற்றைய எல்லோருக்கும் நன்றி. அனைத்துப் பதிவர்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்த்து ஒரு மிகப்பெரிய விழாவை அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

உங்கள்  அணைவருக்கும் ஒரு பதிவராக என்னுடைய நன்றி கலந்த வணக்கங்களையும் பாராட்டுக்களையும் மிகவும் பணிவன்புடன்  தெரிவித்துகொள்கிறேன்.


வாழ்க தமிழ், வளர்க தமிழ் பதிவுலகம். 

26/08/2012



Follow kummachi on Twitter

Post Comment

32 comments:

JR Benedict II said...

ஆம் அண்ணா கேபிள் அண்ணா, சி.பி அண்ணா, ஜாக்கி அண்ணா எல்லாரும் ஒரே மேடையில இருந்தாங்க.. மேலும் சேட்டைக்காரன் ரொம்ப தமாசா பேசுனாரு.. அது தான் அவரோட எழுத்துக்கும் காரணம் போல.. கவிதை வீதி வழமை போல லொள்ளு பண்ணிட்டு போய்ட்டார்.. காலைல முழுவதுமா பார்த்தன்.. மாலைல வேலை இருந்த படியா பார்க்க முடியல.. யாராச்சும எழுதுவாங்க.. அப்ப பார்ப்பம்

//இந்த வலைப்பதிவை தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தாதீர்கள் என்றார்//

FACTU FACTU FACTU

கும்மாச்சி said...

ஹாரி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

அய்யா வருகைக்கு நன்றி. மிகவும் விமர்சையாக கொண்டாடினீர்கள். இது ஒரு நல்ல ஆரம்பம்.

MARI The Great said...

நானும் நேரலையில் பார்த்தேன்! பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததில் மகிழ்ச்சி, விழா குழுவினருக்கு வாழ்த்துக்கள்! :)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.in/2012/08/blog-post_26.html வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜோசெபின்.

CS. Mohan Kumar said...

சந்திப்பின் பெரும்பகுதி பார்த்திருக்கிறீர்கள் என தெரிகிறது நன்றி

கும்மாச்சி said...

மோகன்குமார் விழா மிகவும் சிறப்பாக நடந்தது உங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

r.v.saravanan said...

விழா மிகவும் சிறப்பாக நடந்தது
விழாவில் நானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் நேரலையில் கண்டது மகிழ்ச்சி

கும்மாச்சி said...

சரவணன் வருகைக்கு நன்றி. விழாவில் நீங்களும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.

K said...

மிகவும் மகிழ்ச்சி கும்மாச்சி அண்ணா! தமிழ் பதிவுலகம் மேலும் சிறந்து விளங்க வேண்டும்!

Anonymous said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... பதிவுலக சந்திப்பின் காணொளிகளை யுடுயுப்பில் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.. ஏனெனில் இங்கு நள்ளிரவு என்பதால் என்னால் முழுவதையும் காண முடியவில்லை..

கும்மாச்சி said...

மணி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

இக்பால் வலையகத்தில் சில காட்சிகள் உள்ளதுபோல் தெரிகிறது, முயற்சி செய்யுங்கள்.

ARIVU KADAL said...

விழா சிறப்பாக நடைப்பெற்றது மிக்க மகிழ்ச்சி

கும்மாச்சி said...

அறிவு கடல் வருகைக்கு நன்றி.

Manimaran said...

எந்த சலசலப்புமின்றி சிறப்பாக நடைபெற்றது...நானும் இணையத்தில் கண்டுகளித்தேன்.மிக்க மகிழ்ச்சி...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மணிமாறன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>Manimaran said...

எந்த சலசலப்புமின்றி சிறப்பாக நடைபெற்றது...நானும் இணையத்தில் கண்டுகளித்தேன்.மிக்க மகிழ்ச்சி...


இல்லையே, நாங்க எல்லாம் சலசலப்பா கலகலப்பா பேசிட்டு தானே இருந்தோம்?

பால கணேஷ் said...

தொலைவில்இருந்தாலும் விழா நிகழ்வுகளைக் கண்டு களித்து. எங்களை வாழ்த்தியதன் மூலம் இதயத்திற்கு அருகில் வந்து விட்டீர்கள். என் இதயம் நிறைந்த நன்றி.

கும்மாச்சி said...

சி.பி. வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

பாலகனேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

பகிர்வுக்கு நன்றி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி.

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணே... எனக்கு நேரலையில் பார்க்கக் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
(நெட் பிராபளம்)
உங்கள் பதிவு அந்த கவலையைத் குறைத்தது.
நன்றி.

shortfilmindia.com said...

nandri

Admin said...

பகிர்வுக்கு நன்றி தோழரே..

கும்மாச்சி said...

மதுமதி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.